• காயத்ரி ராஜகோபால்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

வாழ்க்கையில் பிரச்சனைகளும் தீர்வுகளும் அன்றாட நிகழ்வுகள் பிரச்சனைகள் அழைக்காமலேயே வந்து விடுகிறது ஆனால் சரியான தீர்வுகள் கிடைப்பதிலேயே ஏன் தெரியுமா? நம் கவனம் முழுவதும் பிரச்சனைகள் மேல் மட்டுமே தீர்வின் மேல் கவனம் செலுத்தினால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் இதோ மஹாபெரியவா கையாண்ட ஒரு பிரச்சனை நமக்கும் பாடம்

மஹாபெரியவா கால் நடையாகவே சிறு கிராமம் முதல் சிற்றூர் வரை,சிறு நகரம் முதல் பெருநகரம் வரை தன்னுடைய பக்தர்கள் ஏழை முதல் பணக்காரன் வரை, படித்தவன் முதல் படிக்காதவன் வரை, ஏழை விவசாயீ முதல் ஏகோபித்த அதிகாரத்தில் இருப்பவன் வரை சரி சமமாக பாவித்து தரிசனம் கொடுத்து அருள் பாலித்தவர் நம் பரமேஸ்வரன் அவதாரம் மஹாபெரியவா.

நம்முடைய மஹாபெரியவா ஒரு முறை தஞ்சாவூர் பக்கம் பக்தர்களை சந்தித்து தரிசனம் கொடுத்து ஆசி வழங்கவும் சென்றார்.. தன் நடை பயணத்து களைப்பு நீங்க ஓய்வு எடுத்தது கிடையாது..எடுத்துக்கொள்ளும் உணவும், பொரியும் பாலும் தான்.

ஆனால் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும் பொழுதோ அருள் பாலிக்கும் பொழுதோ தான் தன்னுடைய முகம் அப்பொழுது மலர்ந்த தாமரை போல் மிகவும் பொலிவுடன் இருக்கும்.

மஹாபெரியவாளின் யாத்திரையை அறிந்து தஞ்சாவூர் தருமபுரம் ஆதீனம் 25 வது பட்டம் மஹாஸன்னிதானம் அவர்கள் மஹாபெரியவாளை தன்னுடைய அதிஷ்டானத்தியத்திற்கு வருமாறு அழைக்க மஹாபெரியவளை சந்திக்க ஏற்பாடு செய்தார்.

சந்திப்பு நிகழ்ந்தது.

மஹாபெரியவாளை அழைத்தார் தருமபுரம் ஆதீனம். மஹாபெரியவா அழைப்பை ஏற்றுக்கொண்டு தானும் வருவதாக உறுதி அளித்தார்.

மஹாபெரியவாளின் கைங்கர்ய சிரோன்மணிகளுக்கு, கை கால்கள் உதறல்.. உதறலுக்கு காரணம் தெரியவேண்டுமா. இதோ காரணம்:

மஹாபெரியவா ஒரு மிகப்பெரிய பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க ஒரு மடத்தின் மடாதிபதி. மஹாபெரியவா. தருமபுரம் ஆதீனத்திற்கு போனால் அங்கே ஆதீனம் அவருடைய இருக்கையில் அமர்ந்திருப்பார். மஹாபெரியவா சற்று கீழ தான் அமரவேண்டும்.

மஹாபெரியவா கீழே அமர்ந்தால் அது காஞசி மடத்திற்கு இழுக்கு. இதை எப்படி சமாளிப்பது. யார் பெரியவாளிடம் சொல்வது. மஹாபெரியவாளிடம் ஒருவர் பேசுவதற்கு முன்னால் எத்தனை தெய்வங்களை வேண்டிக்கொண்டு பேசவேண்டும். அத்தனை சுலபமாக முடிகிற காரியமா.?

முடிவாக மஹாபெரியவாளிடம் ஸ்வாதீனமாக இருக்கும், ஸ்ரீகார்யங்களில் ஒருவர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

ஸ்ரீகார்யம்: பெரியவா. தருமபுரம் ஆதீனத்திற்கு தாங்கள் போக வேண்டாம்.

பெரியவா: ஏண்டா. போக வேண்டாண்டரே

ஸ்ரீகார்யம்: நீங்க போனா அந்த மடாதிபதிக்கு கீழ தான் உட்காரனும்.அது நம்ம மடத்தின் பெருமைக்கு இழுக்கு பெரியவா.

பெரியவா :ஒரு சன்யாசி அழைப்பை ஏற்று போகாமல் இருந்தால் என்னடா சன்யாசி?

நான் போகாம இருந்தாதான் தப்பு. நான் போகத்தான் போறேன்.

கைங்கர்ய சிரோன்மணிகளுக்கு கைங்கர்யம் செய்வது மட்டும் இல்லாமல் அதையும் தாண்டி ஸ்ரீ மடத்தின் பெருமைகளையும் பாரம்பரியத்தியையும் சற்றும் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அறிந்தோ அறியாமலோ மடத்தின் பெருமைகளில் சற்றும் மாசு பட்டுவிடக்கூடாது என்பது அவர்களுக்கு எழுதப்படாத சட்டம் ஆகும். கைங்கர்ய சிரோன்மணிகளுக்கே இப்படி ஒரு சட்டம் என்றால் மஹாபெரியவா எவ்வளவு ஜாக்கிரதாயக இருக்க வேண்டும்.

நாமெல்லாம் சொல்லுவோமே தீர்வு "Out of box solution" என்று அந்த மாதிரி ஒரு தீர்வு தான் வரவேண்டும். அது யாரால் முடியும். மஹாபெரியவா போல் ஒரு அவதாரத்தினால் தான் முடியும்.

சந்திப்பு நிகழும் நாளும் வந்தது. மஹாபெரியவா தன படை சூழ ஸ்ரீ கார்யம் மனுஷாளுடன் தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு சென்றாகி விட்டது.

வாசலில் மஹாபெரியவாளுடன் கைங்கர்ய சிரோன்மணிகளும் சூழுந்து கொண்டு நின்றனர். பரஸ்பரம் மரியாதை செய்யப்பட்டது.

ஸ்ரீ காரியம் மனுஷாளுக்கு கை கால்கள் உதறல். என்ன நடக்குமோ என்று.அவர்கள் அறிவுக்கு எட்டிய வரை ஒரு தீர்வும் தெரியவில்லை. ஒருவருக்கொருவர் இறுகிய முகத்துடன் என்ன நடக்குமோ என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்.

தருமபுரம் ஆதீனமும் மஹாபெரியவளும் பரஸ்பரம் பேசிக்கொண்ன்டே முற்றத்தை தாண்டி இருக்கும் ஒரு வரவேற்பரையில் நின்று பேசினார்கள்.

மஹாபெரியவாளின் தீர்வு:

யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த வரவேற்பறையில் தரையில் உட்கார்ந்துவிட்டார் நம் மஹாபெரியவா.. வேறு வழியின்றி ஆதீனமும் தரையில் உட்கார்ந்துவிட்டார். ஸ்ரீ கார்ய மனுஷாளுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு. சந்திப்பு முடிந்து பெரியவாளுடன் ஸ்ரீ கார்ய மனுஷாளும் தங்கள் மடத்திற்கு போய் சேர்ந்தனர்.

மஹாபெரியவாளுக்கும் ஸ்ரீ கார்ய மனுஷாளுக்கும் நடந்த சம்பாஷணை :

பெரியவா: ஏண்டா உன் மடத்தோட பெருமையை நான் கொறச்சுடலையே?

ஸ்ரீ கார்யம்: எங்களுக்கெல்லாம் என்ன செய்யறதுன்னே தெரியேல்ல பெரியவா. நல்லவேளை நல்ல கார்யம் பண்ணேள்.

பெரியவா: நீ இன்னொன்னு கவனிச்சியோ. நான் ஆசனம் போட்டு உட்காரும் பொழுது என் குதிங்காலில் மேல் தான் உட்கார்ந்து இருந்தேன். அவரை விட ஒரு இன்ச் உயரமாகத்தான் உட்கார்ந்திருந்தேன். உன் மடம் அங்க உயரமாத்தான் இருந்தது.

நம் வாழ்க்கையை நாம் வாழும் காலத்தில் அன்றாடம் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கிறோம். நம்மால் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணமுடியவில்லை என்றால் இது ஒரு தீர்வே இல்லாத பிரச்சனை என்று முடிவு செய்து நம்மை காத்துக்கொள்கிறோம்.

மஹாபெரியவா நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்:

வாழ்க்கையில் நாம் எதிர் கொள்ளும் முக்கியமான இரண்டு விஷயங்கள்.

பிரச்சனை மற்றும் பிரச்சனைக்கு தீர்வு மஹாபெரியவா பிரச்சனைகள் மேல் இருந்த தன் பார்வையை தீர்வின் மேல் செலுத்துகிறார் தீர்வு கிடைத்து விடுகிறது

நாமும் நம் பார்வையை பிரச்சனைகள்

மேலிருந்து தீர்வின் மேல் செலுத்துவோம்

பிரச்சனைகள் நம் வாழ்க்கையில் வந்து போவது

நாமும் நம் வாழ்க்கையும் நாம் வாழும் வரை இருப்பது

நாமும் மஹாபெரியவாளின் வாழும் முறையை கடைபிடித்தால்

வாழ்க்கையில் விட்டில் பூச்சியாய் இருக்கும் நாம் விமானமாக மாறி வாழ்க்கையில் சிறகடித்து பறக்கலாம்

பார்வையை மாற்றுவோம் வாழ்ந்துகாட்டுவோம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்