• காயத்ரி ராஜகோபால்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா


பக்தி பாவத்தில் உன்னை பக்தர்கள்

அம்மா என்று நினைத்தால் அவர்களுக்கு நீ அம்மா

சகோதரன் என்று நினைத்தால் அவர்களுக்கு நீ சகோதரன்

நண்பன் என்று நினைத்தால் அவ்ரக்ளுக்கு நன்பன்

இதயத்திற்கு நெருக்கமான காதலன் என்றால் நீ காதலன் தான்

தாத்தா பேரன் உறவு என்றால் நீ தாத்தா தான்

அப்படியென்றால் சம்பத் ஐய்யங்காரும் பக்தி பாவனையில் உன் பேரன்தானோ உள்ளத்தை கொள்ளை கொள்ளும் ஒரு இனிய உறவு

பார்த்து கேட்டு அனுபவியுங்கள்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா

குருவே சரணம் குரு பாதமே சரணம்

ஸ்ரீ சம்பத் ஐயங்கார்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-004

பிரதி புதன் கிழமை தோறும்

நாம் எல்லோரும் பக்தர்களின் வாழ்வில் மஹாபெரியவா நிகழ்த்திய அற்புதங்களை அனுபவித்து வருகிறோம்.ஆனால் ஒரு துடுக்கான பேரனுக்கும் பாசமும் நேசமும் மிகுந்த அதே சமயத்தில் ஒழுக்கத்தையும் வாழும் முறையையும் தவறாமல் கற்றுக்கொடுக்கும் தாத்தா இவர்களின் பாசப்பிணைப்பும் பாசப்போராட்டமும் எப்படி இருக்கும் என்று கேட்டு அனுபவிக்க வேண்டாமா. இந்தப்பதிவில் நிச்சயம் கேட்டு மகிழ்வோம் வாருங்கள்..

பேரக்குழந்தை விவரம் தெரியாமல் காணும் கனவுகள் விவரம் தெரிந்த தாத்தா பேரனுக்கு அவன் காணும் கனவுகள் எல்லாம் அஸ்திவாரம் இல்லாமல் காற்றில் கட்டும் கோட்டையை போன்றது. என்று பொறுமையாக சொல்லிக்கொடுக்கும் ஒரு இனிமையான உறவு. பேரனுக்கும் தாத்தாவுக்கும் இடையே நடக்கும் பாசப்பொழிவின் போட்டி

அறிவுரை சொல்லிக்கொடுக்கும் அதே நேரத்தில் பேரனை காக்கும் விதமாக கண்ணுக்குதெரியாத பிரச்சனைகளுக்கு கண்ணுக்குதெரிந்த தெய்வமாகவும் இருந்தார் மஹாபெரியவா என்றால் எப்படி உறவுக்கு உறவாகவும் இருந்தார் என்று நாம் கண்டால் கண்கள் குணமாவதை தவிர்க்கமுடியாது. நிச்சயம் இந்த விடியோவை பார்க்கும்பொழுது நீங்கள் வேறு மஹாபெரியவா வேறு என்ற வேறுபாடே தெரியாது. ஏன் தெரியுமா நீங்களும் மஹாபெரியவா என்னும் சாகரத்தில் கரைந்து விடுவீர்கள்.

.

இந்த துடுக்காக பேசும் பேரனுக்கு பாசத்தைத்தவிர ஒன்றும் கேட்கதெரியது. மஹாபெரியவா என்ன கொடுத்தாலும் வேண்டாம் உங்கள் அன்பு ஒன்று மட்டுமே போதும் என்று சொல்லக்கூடிய ஒரு “போதும்” என்ற மனம். எந்த ஒரு உறவிலும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் எதிர்பார்ப்பே இல்லாத ஒரு உறவை பார்க்கவேண்டுமா இந்த வீடியோவை பாருங்கள்

சம்பத் ஐயங்கார் மஹாபெரியவாளிடம் அடம் பிடித்து சாதித்த ஒரு நிகழ்வு.

ஒருமுறை தீபாவளி நாள். தீபாவளி நாளன்று சம்பத் ஐயங்கார் அதிகாலை இரண்டு முப்பது மணிக்கே மடத்திற்கு முதல் ஆளாக சென்று விட்டார்.. இவர் மடத்திற்கு செல்லும்பொழுதெலாம் தன்னுடைய (மனைவியுடன்) பாரியாளுடன் தான் செல்வார். இவர் அந்த அதிகாலை பொழுதில் மடத்தின் உள் சென்றவுடன் அரைகுறை தூக்கத்தில் இருந்த மஹாபெரியவா ஸ்ரீகார்ய மனுஷாளிடம் கேட்கிறார் வந்திருப்பது யார் என்று.

அவர்களும் வந்திருப்பது சம்பத் ஐயங்கார் என்று சொன்னவுடன் எழுந்திருந்து தரிசனம் கொடுத்துவிட்டு பின் வருமாறு சொன்னார். "தரிசனம் முடிந்து விட்டதே என்று போய்விடாதே. இரு அப்பறம் போகலாம் என்று சொன்னதால் சம்பத் ஐயங்கார் தன்னுடைய பரியாளுடன் (மனைவி )அங்கேயே பக்தர்கள் வரிசையில் நின்று விட்டார்.

மடத்தின் அந்த சிறிய இடத்தில சுமார் ஐந்தாயிரம் பேர் மஹாபெரியவா தரிசனத்திற்காக கூடி விட்டனர். மஹாபெரியவா ஸ்னானம் (குளிப்பது ) செய்துவிட்டு ஸ்ரீகார்ய மனுஷாள் மூலம் சம்பத் ஐயங்காரை அழைத்துவர சொன்னார்.

கூட்டமும் சம்பத் ஐயங்காருக்கு வழிவிட்டது. சம்பத் ஐயங்காருடைய பிரசாத தட்டு மஹாபெரியவா முன் தான் இருந்தது. சம்பத் ஐயங்கார் தான் கொண்டுவந்த தட்டின் முன் பாரியாளுடன் நின்று கொண்டிருந்தார்.முக்கியமாக மஹாபெரியவாளுக்கு தீபாவளிக்காக காவி நிறத்தில் காஷாயம்(காஷாயம்) என்பது காவி நிறத்தை மூலிகை மற்றும் தாவரங்களின் இலைகளை போட்டு அரைத்து ஒரு சரியான பக்குவத்தில் போடுவார்கள்) மடியாக காஷாயம் போட்டு கொண்டு வந்திருந்தார்.

கைங்கர்ய மனுஷாளில் ஒருவர் சம்பத் ஐயங்காருடைய காவி துணிகளை உள்ளே எடுத்துக்கொண்டு போனார்.துணிகளை எடுத்துக்கொண்டு போன கைங்கர்ய மனுஷரை பார்த்து எல்லாத்தையும் எங்கே எடுத்துண்டு போறேள் என்றுகேட்டார் சம்பத் ஐயங்கார் . அந்த மனுஷனும் எல்லாத்தையும் உள்ள வைக்க எடுத்துண்டு போறேன் என்று சொன்னார்.

உடனே சம்பத் ஐயங்கார் உள்ளே எடுத்துண்டு போகக்கூடாது. இங்கயே வையுங்கோ என்று சற்று கடினமான குரலில் சொன்னார். இதை பார்த்துக்கொண்டிருந்த மஹாபெரியவா கைங்கர்ய மனுஷனிடம் கேட்டார் என்ன சொல்லறான் என்று.

அதற்கு அந்த மனுஷனும் உள்ளே எடுத்துண்டு போகக்கூடாது என்று சொல்லறார் சம்பத் ஐயங்கார் என்று சொன்னவுடன் சம்பத் ஐயங்காருக்கும் மஹாபெரியவாளுக்கும் நடந்த சம்பாஷணையை இங்கே தருகிறேன். மிகவும் சுவாரசியமாக இருக்கும். உண்மையான பாசத்திற்கு மஹாபெரியவா எப்படி உருகி விடுகிறார் என்பதை கேட்டும் பார்த்தும் ரசியுங்கள்.

மஹாபெரியவா கைங்கர்ய மனுஷனை பார்த்து கேட்கிறார். இவன் என்ன சொல்லறான். அதற்கு பதில் அந்த கைங்கர்ய மனுஷன் சொன்னார்.

"உள்ளே எடுத்துண்டு போகக்கூடாதுனு சொல்லறார். மஹாபெரியவா சம்பத் ஐயங்காரை பார்த்து கேட்கிறார். சம்பாஷணை ஆரம்பம்

பெரியவா : ஏன் உள்ளே கொண்டுபோகக்கூடாதுனு சொல்லறே.

சம்பத்:ஐயங்கார் : இந்த காவி வஸ்திரம் தீபாவளிக்காக மஹாபெரியா உடுத்திக்கணும்னு நான் காஷாயம் போடத்தெரித்த ஒருவரிடம் சொல்லி கஷாயம் போட்டு கொண்டு வந்திருக்கேன். இன்னிக்கு பெரியவா இந்த வஸ்திரத்தி உடுத்திக்கணும். நானும் என் பாரியாளும் வந்து பெரியவாளை சேவிக்கணும்என்று சொன்னார்.

மஹாபெரியவா சம்பத் ஐயங்கார் கொண்டுவந்த வஸ்த்திரத்தின் மேல் தன்னுடைய கையை வைத்துவிட்டு போதுமா. ஆசீர்வாதம் பண்ணிவிட்டேன். உடனே சம்பத் ஐயங்கார் பிடிவாதமாக அதெல்லாம் முடியாது பெரியவா உடுத்திக்கணும் நான் வந்து .சேவிக்கணும் என்று அடம்பிடித்தார்

உடனே மஹாபெரியவா சொல்கிறார் "நீ ரொம்ப கறாரா இருக்கியே. என்று சொல்லி எழுந்து நின்று காலையில் உடுத்திக்கொண்ட வஸ்திரத்தை களைந்து விட்டு சம்பத் ஐயங்கார் கொடுத்த வஸ்திரத்தி உடுத்திக்கொண்டார்.

இது மட்டுமா பால பெரியவாளை கூப்பிட்டு இன்னிக்கு நீ "இவர் கொடுத்த வஸ்திரத்தைத்தான் உடுத்திக்கொள்ள வேண்டும்.என்று சொல்லிவிட்டு தானும் அன்று மாலை வரை சம்பத் ஐயங்கார் கொடுத்த வஸ்திரத்திலேயே இருந்தார். இதில் இருந்து என்ன தெரிகிறது

"நீங்கள் ஐயராக இருங்கள் ஐய்யங்காராக இருங்கள் அல்லது ப்ராமண வகுப்பு அல்லாதவராக இருங்கள் நீங்கள் எப்பொழுதும் உண்மையான பக்தியுடன் இருங்கள் அதுபோதும் பரமேஸ்வரனை நெருங்க.என்ற செய்தி நமக்கெல்லாம் என்பது இப்போதாவது புரிகிறதா.

https://www.youtube.com/watch?v=Zb_0XYG1hYM

https://www.youtube.com/watch?v=7XYKWjXORB0&t=805s

இன்னும் எத்தனையோ நினைத்து பார்க்கமுடியாத அற்புதங்களை உள்ளடக்கியதுதான் இந்த காணொளி அனுபவம்.

மஹாபெரியவாளை புரிந்து கொள்ள முடியாது.

மஹாபெரியவாளை அறிந்துகொள்ளவும் முடியாது

வேண்டுமானால் மஹாபெரியவாளை உணர்ந்து கொள்ளலாம்.

நீங்களும் உணருங்கள் மற்றவர்களையும் உணர வையுங்கள்

நாமும் அமைதி அடைவோம் வையகமும் அமைதி அடையட்டும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்