• காயத்ரி ராஜகோபால்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

சங்கரா உனக்கு எதுவுமே புதிதல்லவே அறிவியலாகட்டும் அணு விஞ்ஞானமாகட்டும் மொழியாகட்டும் மக்களாகட்டும் பூலோகமாகட்டும் வேற்று கிரகமாகட்டும் உனக்கு எல்லாமே அத்துப்படி உன்னுடைய ஞானத்தை வெளிப்படுத்திய ஒரு சம்பவம் உன் பக்தர்களுக்காக

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

மஹாபெரியவா திருவடிகள் சரணம்

நாம் மஹாபெரியவாளின் பன்முக அற்புதங்களை அனுபவித்து வருகிறோம். மஹாபெரியவாளின் கணித அறிவு கணித மேதாவிகளையும் வியக்க வைத்த ஒரு சம்பவம் தான் இந்தச்சாரல்கள்.

கர்நாடகா மாநிலத்தில் “வ்யாசனகெரே” என்னும் ஒரு கிராமம்.

கர்நாடகா மாநிலத்தின் செண்டூர் மகாராஜா, மஹாபெரியவாளின் மிகச்சிறந்த பக்தர்களுள் ஒருவர். மகாராஜா தன் புதல்வனை அழைத்துக்கொண்டு பெரியவா தரிசனிதிற்கு வ்யாசனகெரே வந்திருந்தார்.

மஹாபெரியவாளுக்கு ராஜாவானாலும் மந்திரியான்னாலும் வரிசையில் நின்றுதான் வரவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். இதை யாரும் மீறமாட்டார்கள். ஆகவே ராஜாவும் இளைய ராஜாவும் வரிசையில் நின்றார்கள்.

ராஜாவின் முறை வந்தவுடன் ராஜா சாஷ்டாங்கமா விழுந்து சேவிக்கிறார். தன் புதல்வன் இளையராஜாவையும் விழுந்து சேவிக்கச்சொல்கிறார் ராஜா. இருவரும் விழுந்து சேவித்து எழுந்தவுடன் சம்பாஷணை தொடங்குகிறது. அதை சம்பாஷணை வடிவிலேயே தருகிறேன்.

பெரியவா: நன்னா இருக்கேளா?

ராஜா: நன்னா இருக்கேன் பெரியவா.

பெரியவா: (ராஜாவின் மகனை பார்த்து கேட்கிறார்.) இது யாரு.

ராஜா: என்னோட பையன் பெரியவா.

பெரியவா: பையன்என்ன வேலை பார்க்கிறான்.

ராஜா: தன் பையனை பார்த்து சொல்லுடான்னு சொல்லறார்.

யுவராஜாவிற்கு மஹாபெரியவாளை ஒரு சன்யாசியாகத்தான் பார்க்கத்தெரிந்ததே தவிர அவரை ஒரு பகவானின் அவதாரமாக பார்க்கத்தவறிவிட்டான். ஆகவே மிக அனாயசயமாக பதில் சொல்ல ஆரம்பித்தான்.

யுவராஜா: யூனிவெர்சிட்டியில் ரீடெராக வேலை பார்க்கிறேன்.

பெரியவா: எந்த யூனிவெர்சிட்டியில்.

யுவராஜா: ஏல் யூனிவெர்சிட்டியில்.

பெரியவா: நீ ரீடராக வேலை பார்க்கவேண்டுமென்றால் டாக்டரேட் முடித்திருக்கவேணுமில்லையா.

யுவராஜா: ஆமாம் பெரியவா.

பெரியவா: டாக்டரேட் எதுலே பண்ணே?

யுவராஜா: ( நான் என்ன சொல்லி பெரியவாளுக்கு என்ன புரியப்போகிறது என்று நினைத்து மௌனமாக இருந்தார் யுவராஜா.)

ராஜா:( மிகவும் பதட்டத்துடன்) சொல்லுடா பெரியவா கேக்குறா.

யுவராஜா: மிகவும்அலட்சியமாக சொன்னார் "குவாண்டம் தியரி "

மஹாபெரியவா அமர்ந்திருந்த தரை ஒரு மண் தரை. மண்ணில் ஒரு "+" குறி போட்டு அதை சுற்றி வட்டம் போட்டார். மேலும் "-" குறி போட்டு அதை சுற்றி ஒரு வட்டம் போட்டார்.

பெரியவா: அந்த இரண்டு குறியையும் காட்டி "டாக்டரேட் எதுல பண்ணே. பாஸிட்டிவா? நெகட்டிவா.?

இந்தக்கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத யுவராஜா சற்று ஆடிப்போய்விட்டார். தொண்டை வறண்டு போயி பேசமுடியாமல் திணறினர்

பெரியவா: சொல்லுங்கோ எதுலே பண்ணேள்.

யுவராஜா: பாசிட்டிவ் பெரியவா.

பெரியவா: ஏன் நெகடிவ் பண்ணலயா?

யுவராஜா: நெகடிவ் ரொம்ப கஷ்டம் பெரியவா.

பெரியவா பக்கத்தில் இருந்த வேத பாடசாலையில் இருந்த அண்ணாஸ்வாமி ஐயங்காரை அழைத்து வேதம் படித்துக்கொண்டிருந்த வேத வித்யார்த்திகளை அழைத்துக்கொண்டு வரும்படி சொன்னார். இரண்டு வித்யார்த்திகள் வந்தனர். அந்த வித்யார்த்திகளுக்கு சிக்க்ஷை ஆயுடுத்தானு பெரியவா கேட்டார். ஆயிடுத்து பெரியவானு அவாளும் சொன்னா. பெரியவா வேத வித்யார்த்திகளை “ரிக்” வேதத்தில் ஒரு குறிப்பிட்ட பஞ்சாதியை சொல்லச்சொன்னார்.அவர்களும் சொல்ல ஆரம்பித்தார்கள்.ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெரியவா அவர்களை நிறுத்தச்சொன்னார்.

பெரியவா யுவராஜாவை பார்த்துக்கேட்டார். ஒனக்கு இவா சொன்னது புரியறதா.

யுவராஜா: இல்லை பெரியவா.

பெரியவா: ஒன்னோட குவாண்டம் தியரில பாசிட்டிவ் மட்டும் இல்ல நெகட்டிவும் சேத்து சொல்லறது.

பெரியவா: இப்போ யோசிக்கறயா ? 25 வருஷம்வீணாபோயெடுத்தேன்னு?. அதுக்கு பதிலா வேத அத்யாயனம் பண்ணிருக்கலாம்னு தோணறதோ ?

யுவராஜாவால் அங்கே நிக்கமுடியேல்ல. வெட்கப்பட்டு வேதனைப்பட்டு பெரியவாளின் காலில் விழுந்து சேவித்தார்.

பெரியவா அவாளுக்கு ஆசிர்வாதம் பண்ணி அவர்களை அனுப்பிவைத்தார்.

இந்த அற்புதம் நமக்கு சொல்லும் பாடம்:

நாம் மேதாவியாக இருக்கலாம்,மெத்தப்படித்தவர்களாக இருக்கலாம், பெரிய பதவியில் இருக்கலாம்,அதிகாரம் கையில் இருக்கலாம்,படகுக்காரில் போகலாம். இத்தனைக்கும் எப்போது மரியாதை கிடைக்கும் என்றால் நம்முடைய பணிவும், அடக்கமும், மற்றவர்களை மதித்தும், குறைத்து மதிப்பிடாமலும் இருக்கும் போதுதான்.

எப்பொழுது நம் ஆத்ம ஸ்வரூபம் வெளிப்படுகிறதோ அந்த நொடியிலே நாம் பூர்ண மனிதனாக மாறி அந்த இறைவன் ஆட்க்கொள்ளும் புனித ஆத்மாவாக மாறிவிட்டோம். ஆத்மார்த்தமான சிந்தனை,பேச்சு,செயல் இவை அனைத்தும் இன்னோரு ஆத்மாவின் கடவைத்தட்டும் என்பதை நான் அன்றாட வாழ்க்கையில் கண்கூடாகப்பார்த்திருக்கிறேன்.

ஆத்மார்த்தமான மனிதனாய் மாறுவது

நம்மை மீறிய செயலா

நிச்சயமாக இல்லை

மனித முயற்ச்சியும் இறை அருளும் இருந்தால்

இது சாத்தியமே மனித முயற்சி இருந்தால்

இறை அருள் தானே வந்து இணையும்

வாழ்ந்துதான் பார்ப்போமே

மனதிற்குப்பிடித்திருந்தால் தொடர்வோம்

இல்லையெனில் சுதந்தர மனிதனாய் வழக்கம் போல் வாழ்க்கையை தொடருவோம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்