• காயத்ரி ராஜகோபால்

உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி


பெரியவா நீங்கள் இருக்கையில்

எனக்கென்ன கவலை

ஒரு பணியை கொடுப்பதற்கு முன்னே

அந்த பணிக்கு தேவையான அனைத்தையும்

கொடுத்துதானே அனுப்புகிறீர்கள்

எனக்கென்ன கவலை.

எனது இதயத்திற்கு நெருக்கமான உறவுகளே ,

ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மஹாபெரியவா குரு பூஜையை என்னிடம் கொடுத்து அல்லல் படும் ஆத்மாக்களை கரையேற்றும் பணியை கொடுத்தார்.

அடுத்து எழுத்துப்பணியை கொடுத்து என் விரல் மூலம் அவரே எழுதி வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த ஆத்மாக்களுக்கு திரும்பவும் நம்பிக்கையை ஊட்டி பயமற்ற வாழ்கையை வாழ வைக்கும் பணியை கொடுத்தார்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த என்னை மஹாபெரியவா கொடுத்த அடுத்த பணி வெளி உலகை பார்க்கவைக்க போகிறது. ஆமாம். மஹாபெரியவா எனக்கு கொடுத்த அடுத்த பணி புதையுண்டு போன புராண கோவில்களை கண்டுபிடித்து மீட்டெடுத்து புனருத்தாரணம் செய்து மக்கள் வழி பாட்டிற்கு கொண்டு வா என்பதுதான் அந்த பணி.

உறவுகளே முதலில் மஹாபெரியவா எனக்கு காட்டிக்கொடுத்த கோவில் சோழர்கள் காலத்து கோவில். அந்த கோவிலில் பிரம்மாவே பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிரும்ம நந்தீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார்.இந்த கோவிலில் உள்ள அம்பாளும் மிகவும் சக்தி வாய்ந்த அம்பாள். சோழ மன்னர்களே போற்றி வழிபட்ட கோவில் என்றால் சும்மாவா. உங்கள் எல்லோருடைய சோதனைகளுக்கும் வாழ்கை கஷ்டங்களுக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கும் நான் அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்வேன்.

நான் நல்ல முறையில் சென்று மஹாபெரியவா எனக்கிட்ட இந்த கோவில் புனருத்தாரண பணியை ஆரம்பித்து பணியை முடித்து திரும்ப வர எனக்காக பிரார்த்தனை செய்வீர்களா? நிச்சயம் செய்வீர்கள் என்பது எனக்கு தெரியும்.

இந்த பணி நிமித்தமாக இந்த மாதம் பன்னிரெண்டாம் தேதியில் இருந்து பதினைந்தாம் தேதி வரை நான் கும்பகோணத்தில் தங்க இருப்பதால் என்னை நேரில் பார்க்கவரும் உறவுகள் இந்த நாட்களை தவிர்க்கவும். மற்றவர்களிடம் இந்த விஷயத்தை சொல்லி பகிர்ந்து கொள்ளுங்கள்.என்னை பார்க்க வருபவர்கள் இந்த மாதம் பதினாறாம் தேதியில் இருந்து வழக்கம் போல் முன் அனுமதி பெற்று வரலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

மஹாபெரியவா என்னை படைத்தது உங்கள் கைகளில் கொடுத்தார் என்னை நீங்கள் உங்கள் பிள்ளை போல் சீராட்டி பாராட்டி பார்த்து கொள்கிறீர்கள் எனக்கென்ன கவலை உங்கள் அன்பும் ஆதரவும் இன்று போல் என்றும் இருக்கப்போகிறதே

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும்

உங்கள் நலம் நாடும்

காயத்ரி ராஜகோபால்