• காயத்ரி ராஜகோபால்

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-I அமிர்தவர்ஷினி


குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-I அமிர்தவர்ஷினி

“விட்டுக்கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும்

தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும்

மனம் விட்டுப்பேசுங்கள் அன்பு பெருகும்”

இந்த அற்புதத்தின் நாயகி அமிர்தவர்ஷினி நடுத்தர வயது கொண்ட ஒரு குடும்பத்தலைவி.. குடும்பம் என்றால் என்ன?.. கொடுப்பதில் இன்பம் என்பதுதான் குடும்பம் என்றானது.. கொடுப்பது என்றல் என்ன? கொடுப்பது பணம் மட்டுமா?. நிச்சயமாக இல்லை.

பணத்துடன் சேர்த்து அன்பு பாசம் அரவணைப்பு கரிசனம் மற்றவர் துன்பங்களை தன்னுடைய துன்பமாக நினைத்து ஆறுதலான ஒரு சில வார்த்தைகள் அல்லது தன்னால் இயன்ற அளவு பொருளுதவி செய்து வந்த துன்பத்தை போக்குவதற்கு ஒரு கருவியாக செயல் படுவது. தன்னுடைய பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழும் உதாரணமாக இருப்பது இவையனைத்தும் ஒரு நல்ல குடும்பத்தலைவிக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள்.

இத்தனை வார்த்தை வரிகளுக்கு சொந்தக்காரிதான் அமிர்தவர்ஷினி.

அமிர்தவர்ஷினி கர்நாடக சங்கீதத்தில் ஒரு ராகத்தின் பெயர். கர்நாடக சங்கீதத்தில் மழை வரவழைக்கும் ஒரு ராகம். எப்படி இந்த ராகத்தில் பாட்டிசைத்தால் நிச்சயம் மழை வருவது உறுதியோ அதுபோல இந்த அற்புதத்தின் நாயகி பெயருக்கு ஏற்றாற்போல் மற்றவர்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையென்றால் கருணை மழை பொழியும் ஒரு ஆத்மா.

ஒருவருக்கு உதவி செய்யவேண்டுமென்றால் தன்னுடைய நலனை புறக்கணித்து மற்றவர்களுக்கு உதவும் உள்ளம் கொண்ட ஒரு பெண். மஹாபெரியவாளின் அத்தியந்த பக்தர்களில் ஒருவர். சதா சர்வகாலமும் மஹாபெரியவா நினைப்பிலேயே இருக்கும் ஒரு புண்ணிய ஆத்மா. இவருக்கு என் தொடர்பு இந்த பெரியவா இணையதளத்தின் மூலமாக தொடர்பு ஏற்பட்டது.

அமிர்தவர்ஷினி, நான் எழுதும் மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள் தொடரை படித்து விட்டு என்னை தொடர்பு கொண்டார். இவருக்கு மொத்தம் மூன்று பிரார்த்தனைகள் இருந்தன. மூன்று பிரார்த்தனைகளும் வேறு வேறு காலகட்டத்தில் என்னிடம் பிரும்ம முகூர்த்த பிரார்த்தனைக்கு கொடுத்தார்கள்.

உங்கள் கவனத்திற்கு மூன்று பிரார்த்தனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கொடுத்து பிறகு தனித்தனித்தனியாக ஒவ்வொரு வாரமும் அந்தப்பிரச்னைகளுக்கு மஹாபெரியவா எப்படி அருள் பாலித்தார் என்பதை சுவாரசியமாக இருக்கும் வண்ணம் சமைத்து விருந்து படைக்கிறேன்.

மூன்று பிரார்த்தனைகளும் மிக சுருக்கமாக உங்கள் கவனத்திற்கு

  1. மஹாபெரியவா அமிர்தவர்ஷினி கனவில் தரிசனம் தரவேண்டுமென்பது.

  1. தன்னுடைய மகளுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இன்னும் இல்லை. மஹாபெரியவா அனுகிரஹமும் ஆசிர்வாதமும் செய்ய வேண்டும்

  1. தன்னுடைய நெருங்கிய சொந்தங்களில் ஒருவரின் மகள் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணத்தின் மொத்த பட்ஜெட் தொகை இருபத்தி ஐந்து லக்க்ஷம். இந்தத்தொகை எதிர்பார்த்தபடி வரவில்லை.

இதற்கு காரணம் அரசாங்கத்தின் புதிய சட்ட திட்டங்கள் கொள்கை மாற்றங்கள் தான். இதைமஹாபெரியவா எப்படி தீர்த்துவைத்தார் என்பது நம் உள்ளத்திற்கும் மஹாபெரியவா நம்பிக்கைக்கும் மேலும் வலு சேர்க்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.. யாரும் எதிர்பாராத வண்ணம் திருமணத்தை எப்படி நடத்தினார் என்பது அதிசயத்திலும் அதிசயம்.

வாருங்கள் இனி ஒவ்வொரு அற்புதங்களுக்குள்ளும் உங்கள் கையை பிடித்து அழைத்துச்செல்கிறேன்.

அமிர்தவர்ஷினியின் கனவு தரிசன பிரார்த்தனை

கனவில் மஹாபெரியவா என்பது வெறும் கனவல்ல. மஹாபெரியவா நமக்கு கொடுக்கும் தரிசனம். இந்த தரிசனமும் மஹாபெரியவா நினைக்கவேண்டும். நாம் நினைத்தாலும் தரிசனம் கிடைக்காது. இதை கவனத்தில் கொள்ளவும்.

இந்த சமயத்தில் அமிர்தவர்ஷினியின் மனம் மிகவும் கலங்கியது. மனம் மட்டும் கலங்கவில்லை அவ்வப்பொழுது கண்களும் கலங்கும். கனவு தரிசன ஏக்கமும் தாகமும் தணியாமல் இருந்தது அமிர்தவர்ஷினிக்கு.

இந்த சமயத்தில்தான் என்னை தொடர்பு கொண்டு தன்னுடைய மஹாபெரியவா கனவு ஏக்கத்தை பற்றி என்னிடம் சொன்னார்கள். எனக்கு இந்த பிரார்த்தனை மிகவும் வினோதமாக இருந்தது. எல்லோருக்கும் பணக்கஷ்டம் இருக்கும், மனக்கஷ்டம் இருக்கும், உடல் உபாதைகள் இருக்கும் இன்னும் எவ்வளோவோ கஷ்டங்கள் இருக்கும்.

ஆனால் அமிர்தவர்ஷினியின் கனவு பிரார்த்தனை என்பது மிகவும் புதிதாக இருந்தது. வழக்கமாக வாழ்க்கையில் வரும் அத்தனை கஷ்டங்களையும் புறம் தள்ளிவிட்டு கனவு மட்டுமே பிரார்த்தனையென்றால் மஹாபெரியவா மேல் எவ்வளவு ஒரு பக்தி.

இனிமேல் மஹாபெரியவா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்து ஒருமுறை கூட தரிசனம் காணவில்லையே என்ற ஏக்கமும் தாபமும் வேண்டாமே அமிர்தவர்ஷினியிடம் கேளுங்கள் உங்கள் ஏக்கமும் தாகமும் தணியும்

அமிர்தவர்ஷினிக்கு தெரிந்த ஒரே கண்கண்ட தெய்வம் மஹாபெரியவா. ஏனோ தெரியவில்லை. குழந்தையிலிருந்து ஒரு முறை கூட நேரில் தரிசனம் காணவில்லை. இருந்தும் பல வருடங்களாக தரிசனம் செய்த மாதிரி ஒரு நெருக்கம். உருகும் பக்தி. மலையயேயே தூக்கும் மஹாபெரியவா நம்பிக்கை. இதுதான், நாம் நேரில் தரிசனம் காணவில்லையென்றாலும் மஹாபெரியவா நம்மை தடுத்து ஆட்கொள்வது என்பதோ? .இவ்வளவு பக்தி இருந்தும் நீண்ட நாட்களாக சொப்பனத்தில் தரிசம் காணவில்லை என்னும் குறை நிறையவே இருந்தது அமிர்தவர்ஷினிக்கு.

நானும் இவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு மறு நாள் காலை பிரும்ம முகூர்த்த நேர பிரார்த்தனையின் பொழுது பின் வருமாறு வேண்டிக்கொண்டேன்.

பெரியவா, வழக்கமாக உங்களிடம் மற்றவர்கள் கஷ்டங்களுக்கு நிவர்த்தி வேண்டிதான் என் பிரார்த்தனை இருக்கும். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக ஒரு பிரார்த்தனை பெரியவா.

அமிர்தவர்ஷினி என்னும் குடும்பத்தலைவி உங்களுடைய அத்யந்த பக்தர்களில் ஒருவர். ஆனால் ஒரு முறை கூட உங்களை நேரில் தரிசனம் காணவில்லையாம். அதுனாலே நீங்கள் ஒரு முறை கனவில் தரிசனம் கொடுங்கள் பெரியவா. என்று சொல்லி என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.

என்னுடைய பிரார்த்தனைக்கு மஹாபெரியவா கொடுத்த பதில்

நீ அமிர்தவர்ஷினியை ஒன்பது வாரம் குரு பூஜை பண்ணச்சொல்லு. நான் தரிசனம் தருகிறேன் என்று சொல்லி முடித்துக்கொண்டார்.

மறு நாள் காலை மஹாபெரியவாளின் பதிலுக்காக அமிர்தவர்ஷினி எனக்கு போன் செய்தார். நானும் மஹாபெரியவா சொன்ன விவரங்களை சொல்லி ஒன்பது வார குரு பூஜையை பற்றியும் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அமிர்தவர்ஷினி நிச்சயம் குரு பூஜை செய்வேன் ஜீ ஆர் சார் என்று சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்தார். நானும் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு காயத்ரி ஜெபத்தில் உட்கார்ந்தேன்.

முதல் வார மஹாபெரியவா குரு பூஜை மிகவும் நன்றாக செய்து முடிந்ததாகவும் அடுத்த வாரம் இன்னும் சிறப்பாக செய்யவேண்டுமென்றும் அமிர்தவர்ஷினி என்னிடம் சொன்னார்.

இரண்டாவது வார பூஜைக்கும் மூன்றாவது வார பூஜைக்கும் இடைப்பட்டகாலம்

அதிகாலையில் என்னுடைய என்னுடைய கைபேசி என்னை அழைத்தது. மறுமுனையில் அமிர்தவர்ஷினி. விவரம் இதுதான். "இன்று அதிகாலையில் மஹாபெரியவா நீண்ட நாட்களுக்குப்பிறகு என்னுடய கனவில் தரிசனம் கொடுத்தார். ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் கனவு தரிசனம் என்னுடைய மனதில் பதிவதுபோல் இல்லை.ஒரு தெளிவற்ற கனவு போல்தான் உள்ளது. எனக்கு மனதில் பதியும் படி கனவு தரிசனம் வேண்டும் ஜீ ஆர் சார். மஹாபெரியவாளிடம் கொஞ்சம் இன்னும் வேண்டிக்கோங்கோ.என்று சொல்லி கைபேசியை துண்டித்தாள்.

மறு நாள் காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் நான் அமிர்தவர்ஷிணிக்காக வைத்த வேண்டுகோள்.

பெரியவா அமிர்த்வார்ஷினிக்கு நீங்கள் கொடுத்த கனவு தரிசனம் திருப்தியாக இல்லயாம். கொஞ்சம் நன்னா தரிசனம் கொடுங்கோ பெரியவா. என் பிரார்த்தனை நிறைவடைந்தது.

மஹாபெரியவாளின் பதில்

ஏன்டா இன்னும் நன்னா தரிசனம் வேணும்னா நான் நேரில் தான் தரிசனம் கொடுக்கமுடியும். எனக்கு சிரிப்புதான் வந்தது. ஆனால் சிரிக்காமலேயே கொஞ்சம் தரிசனம் கொடுங்கள் பெரியவா. என்று நானும் என்னுடைய பதிலை முடித்துக்கொண்டேன்.

நான்காவது வார பூஜைக்கும் ஐந்தாவது வார பூஜைக்கும் இடைப்பட்ட காலம்

வழக்கம்போல் என்னுடைய கைபேசி அதிகாலையிலேயே என்னை அழைத்தது. மறு முனையில் அமிர்தவர்ஷினி. குரலில் சந்தோஷம் தெரிந்தது. நான் விவரம் கேட்டேன். விவரம் இதுதான் "மஹாபெரியவா கனவு தரிசனம் இன்று காலையில் கொடுத்தார்.

என்னுடைய பூஜை அறையில் உட்கார்ந்து கொண்டு எதையோ கேட்கிறார். நான் கண் முழித்து விட்டேன். இந்த கனவு தரிசனியத்தில் கூட எனக்கு திருப்தி இல்லை. கொஞ்சம் நன்னா வேண்டிக்கோங்கோ ஜீ ஆர் சார் என்று சொல்லிவிட்டு கைபேசியை துண்டித்தார்.

எனக்கு மஹாபெரியவாளிடம் சென்று திரும்பவும் கேட்க பயமாக இருந்தது. போன முறையே நான் நேரில் போய்தான் தரிசனம் கொடுக்கமுடியும் என்று சொன்னார். ஐந்து வாரம் வரை நான் இந்த பிரார்த்தனையை என்னுடைய பிரார்த்தனையில் வைக்கவில்லை.

ஐந்தாவது வார பூஜைக்கும் எட்டாவது வார பூஜைக்கும் இடைப்பட்ட காலம்

கடந்த மூன்று வாரங்களாக பூஜை முடிந்த கையோடு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரம் கேட்பார் அமிர்தவர்ஷினி.

என்னைக்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் மஹாபெரியவா நிச்சயம் உங்கள் திருப்திக்கு ஏற்ப தரிசனம் தருவார்.ஒன்பதாவது வார பூஜையை முடியுங்கள்.என்று சொல்லி நம்பிக்கையூட்டுவேன். எனக்கு மஹாபெரியவா மேல் இருந்த அசைக்குமுடியாத நம்பிக்கை.

என்னை இதுவரை தர்மசங்கடமான நிலையில் மஹாபெரியவா. அப்படி ஒன்று இரண்டு பிரார்த்தனைகள் நிறைவேறாமல் இருந்திருக்கலாம்.அதற்கு மஹாபெரியவாளே பதில் சொல்லியிருக்கிறார். சுகிர்தமில்லாமல் கர்மமா வினைகள் மட்டுமே இருந்தால் பிரார்த்தனைகள் நிறைவேறாது.என்று. இதுவும் எனக்கு பிரார்த்தனை முடிந்தபிறகுதான் தெரியும்.

ஒன்பதாவது வாரம்

நான் எனக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மஹாபெரியவாளிடம் பிரார்த்தனையில் சொல்லிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன். எப்படி ஆரம்பிப்பது என்றும் குழப்பமாக இருந்தது. ஒரு முறை அமிர்தவர்ஷினி என்னிடம் சொன்னது நினைவிற்கு வந்தது.

"மஹாபெரியவாளை நான் என்னுடைய குழந்தயைப்போலத்தான் பார்த்துகிறேன்.மஹாபெரியவாளுக்கு இரண்டு வேலையும் நைவேத்தியம் பண்ணிவிட்டுதான் நான் சாப்பிடபோவேன் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. இதையே மஹாபெரியவாளிடம் சொல்லி பிரார்த்தனை செய்யவேண்டியதுதான் என்று முடிவு பண்ணி மறு நாள் காலையில் அமிர்தவர்ஷினி முறை வரும் பொழுது நான் பின்வருமாறு பிரார்த்தனை செய்து கொண்டேன்.

பெரியவா அமிர்தவர்ஷிணிக்காக ஒரு பிரார்த்தனை பெரியவா.

பெரியவா என்னிடம் கேட்டார் "ஏன்டா கனவு தரிசனம் கேட்டாள்.அதைத்தான் கொடுத்தேனேடா.இன்னும் என்னவேணும்.

நான்: இல்லை பெரியவா அமிர்தவர்ஷினி உங்களை குழந்தைபோல் பார்த்துகிறாளாம்

பெரியவா:அதுக்குன்னு நான் குழந்தை மாதிரி தரிசனம் கொடுக்கமுடியுமா.

நான்: எனக்கு தெரியலை பெரியவா என்று சொல்லி என்னுடைய பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.

பெரியவா: எல்லாம் நான் பாத்துக்கிறேண்டா. நீ மத்தவாளுக்கு பிரார்த்தனையை தொடர்ந்து பண்ணு என்று சொல்லி முடித்தார். எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

இந்த மஹாபெரியவா சொன்ன விவரத்தை அமிர்தவர்ஷினியிடம் சொல்லி மிகுந்த நம்பிக்கையுடன் ஒன்பதாவது வார பூஜையை முடிக்கச்சொன்னேன்.

வியாழக்கிழமை ஒன்பதாவது பூஜையும் முடிந்தது. எனக்குள் ஒரு வித சங்கடம்.மஹாபெரியவா நான் பார்த்துக்கிறேண்டா என்று சொன்னதன் அர்த்தம் என்ன. தரிசனம் கொடுப்பாரா மாட்டாரா. இருந்தாலும் நான் ஒன்பதாவது பூஜை முடிந்து அமிர்தவர்ஷினி என்னை கைபேசியில் தொடர்பு கொண்டபோது நம்பிக்கையுடன் இருக்குமாறு சொன்னேன்.

ஒன்பதாவது வாரம் வெள்ளிக்கிழமை காலை மணி ஏழு

என்னுடைய கைபேசி என்னை அழைத்தது. மறுமுனையில் அமிர்தவர்ஷினி. நான் பேச ஆரம்பித்தேன்.அதற்குள் கொஞ்சம் இருங்கோ ஜீ ஆர் சார் நான் உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி சொல்லவேண்டும் என்றவுடன் நான் அமைதியானேன். மறுமுனையில் இருந்து வந்து விவரம் இதுதான்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் மஹாபெரியவா கனவு தரிசனம் கொடுத்தார். கனவுக்காட்சி இதுதான். "ஒரு குளத்தில் மஹாபெரியவா குளித்துவிட்டு தண்டத்துடன் மேலே படியேறி வருகிறார். அமிர்தவர்ஷினி

மஹாபெரியவாளுக்கு நமஸ்காரம் செய்கிறாள். மஹாபெரியவா சொல்கிறார். நீ கீழே உட்கார்ந்துக்கோ என்று. அமிர்தவர்ஷினியும் கீழே காலை நன்றாக மடித்து உட்கார்ந்து கொள்கிறாள். மஹாபெரியவா தன்னுடைய தலையை அமிர்தவர்ஷினியின் மடியில் வைத்து கொண்ட கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பிக்கிறார். அமிர்தவர்ஷினிக்கு மஹாபெரியவாளை தொடலாமா வேண்டாமா என்று தெரியவில்லை. இருந்தும் தொடாமலேயே மடியை குழந்தையின் தலையை வைத்து மேலும் கீழும் ஆசைப்பதுபோல் அசைத்துக்கொண்டிருந்தாள்.

இப்பொழுது உங்கள் கவனத்திற்கு

நான் மஹாபெரியவாளிடம் சொன்னது " பெரியவா உங்களை அமிர்தவர்ஷினி ஒரு குழந்தையை போல பாத்துகிறாளாம். கொஞ்சம் மனதில் பதியறமாதிரி தரிசனம் கொடுங்கள் பெரியவா.என்று நான் கேட்டுக்கொண்டேன்.அதற்கு ஒரு குழந்தையைப்போல அமிர்தவர்ஷினியின் மடியில் தலை வைத்து படுத்துக்கொள்வதுபோல கனவு தரிசனம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது. உருகும் பக்தியும் கரையும் இதயமும் கண்களில் கண்ணீரும் வந்தால் மஹாபெரியவா ஒரு குழந்தை மாதிரி உங்கள் விரல்களை பிடித்துக்கொண்டு நீங்கள் போகுமிடத்திற்கெல்லாம் உங்களுடனேயே வந்துவிடுவார் என்பது எழுதப்படாத இறை விதியென்றாலும் இது ஒரு நிதர்சன உண்மை என்பது அமிர்தவர்ஷினியின் கனவு தரிசனம் நமக்கு உணர்த்துகிறது.

பிரார்த்தனை என்பது

கடவுளிடம் ஏதாவது கேட்பதல்ல

அது ஆன்மாவின் ஏக்கமாகும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்