• காயத்ரி ராஜகோபால்

குரு பூஜை அற்புதங்கள்-8-பாகம்-III- அமிர்தவர்ஷினி


குரு பூஜை அற்புதங்கள்-8-பாகம்-III-அமிர்தவர்ஷினி

கல்யாணம் பண்ணிப்பார்

வீட்டை கட்டிப்பார்

இது பழமொழி மட்டுமல்ல

நம் எல்லோருடைய

அனுபவ மொழியும் கூட

கடந்த இரண்டு வாரங்களாக அமிர்தவர்ஷினியின் மஹாபெரியவா கனவு தரிசன தாகத்தை எப்படி மஹாபெரியவா தணித்தார் என்பதை பார்த்தோம். பார்த்தது மட்டுமல்லாமல் ஆச்சர்யப்பட்டும் வியந்தும் போனோம். அதற்கு அடுத்த வாரம் அமிர்தவர்ஷினியின் புத்திர பாக்கிய பிரார்த்தனை எப்படி எட்டாவது வார பூஜையின் முடிவில் மஹாபெரியவா அனுக்கிரஹம் பண்ணார் என்பதயும் பார்த்தோம். வியந்தோம். மஹாபெரியவளின் பராக்ரமம் விண்ணளவு உயர்ந்து விஸ்வரூபமாய் நின்றதையும் பார்த்தோம். கை கூப்பியும் வணங்கினோம்

இந்த வாரம் நாம் படித்து அனுபவிக்கப்போவது அமிர்தவர்ஷினியின் நெருங்கிய சொந்தத்தில் உள்ள பெண்ணின் திருமணம் எதிர்கொண்ட பிரச்சனைகள், அடுத்தது என்ன என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றுகொண்டிருந்த பெற்றோர்களின் விவரிக்க முடியாத மன நிலை இத்தனைக்கும் மஹாபெரியவா குரு பூஜை எப்படிப்பட்ட ஒரு தீர்வை கொடுத்தது என்பது அற்புதத்தின் உச்சம். இந்த அற்புதத்தைத்தான் இந்த வார மஹாபெரியவா குரு பூஜை மூலம் படித்து வியக்கப்போகிறோம் தரையில் விழுந்து வணங்கப்போகிறோம்.

அமிர்தவர்ஷினியின் நெருங்கிய சொந்தங்களின் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு திடுமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. கல்யாண ஏற்பாடுகள் மிக மும்மரமாக நடந்துகொண்டிருக்கிறது.சொந்த பந்தங்களுக்கெல்லாம் கல்யாண அழைப்பிதழும் அனுப்பியாகி விட்டது. நண்பர்கள் வட்டாரங்கள் கூட தங்களுடைய சந்தோஷத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

கல்யாண செலவிற்கான மொத்த பட்ஜெட் தொகை இருபத்தைந்து லக்க்ஷ ரூபாய் என்று கணக்கிடப்பட்டது. பெண்ணின் பெற்றோர்கள் அவர்களுடைய ஊரில் இருக்கும் வீட்டு மனையை விற்று வரும் தொகையில் கல்யாணத்தை முடித்து விடலாம் என்று கணக்குப்போட்டிருந்தார்கள்.

பொதுவாகவே நாம் ஒரு

கணக்குப்போட்டால் தெய்வம்

ஒரு கணக்கு போடும்.

ஒரு கல்யாணம் நீண்ட நாள் நினைவில் நிற்கவேண்டுமானால் கல்யாணத்தில் நடந்த கலாட்டாக்கள், சம்பந்தி வீட்டு மனுஷாள் அடித்த கூத்து பெண்ணின் மாமாவோ பையனின் மாமாவோ பண்ணும் குட்டி குட்டி கலாட்டாக்கள் இவை அத்தனையும் ஒருசேர கொடுக்கும் ஒரு தாக்கம் தான் நெடு நாள் நினைவில் நிற்கும் கல்யாணம்.

ஆனால் அமிர்தவர்ஷினியின் சொந்தக்கார பெண்ணுக்கு நடந்த கல்யாணத்தில் நடந்த அத்தனை கலாட்டாவும் பெண்ணுக்கு மாமனோ அல்லது சம்பந்தி வீட்டாரோ அல்ல. அரசாங்கத்தின் புதிய பொருளாதார சீர்திருத்தம் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் தான் மஹாபெரியவா குரு பூஜைக்கு வித்திட்ட கல்யாணம்.

குடும்பமே இடிந்து போய் அமர்ந்திருந்தது. யாருக்கும் கவலைப்படுவதை தவிர வேரு ஒன்றும் தோன்றவில்லை. ஆண்கள் வெளியில் சென்று சிறிது நடைப்பயிற்சி மேற்கொள்கிறேன் என்ற போர்வையில் யோசனை செய்து கொண்டிருப்பார்கள். பெண்களோ வீட்டிற்குள்ளயே இருந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆறுதலையும் யோசனையையும் பரிமாறிக்கொள்வார்கள். அங்கே சொல்லமுடியாத வேதனையான அமைதி குடிகொண்டிருந்தது.

இந்த விஷயம் அமிர்தவர்ஷினிக்கு தெரிந்தவுடன் கல்யாணப்பெண் இருக்கும் வீட்டிற்கு விரைந்தாள். தன்னுடைய மூளையையும் கசக்கிபார்த்தாள். விளைவு மஹாபெரியவா குரு பூஜை. நாம் எப்பொழுதுமே கடவுளிடம் பிரச்னைக்கு ஒரு தீர்வு வேண்டுமென்று கேட்கும்பொழுது நம்முடைய பிரச்சனைக்கு தீர்வை கொடுக்கும் கடவுளை விட நம்முடைய பிரச்சனை எவ்வளவு பெரியது என்று சொல்லி அந்த கடவுளையே பயமுறுத்துவோம். சிலருடைய பிரார்த்தனைகளும் நம்பிக்கையில்லாத பிரார்த்தநாயகத்தான் இருக்கும்.

இப்படித்தான் கல்யாண வீட்டிலிருக்கும் மற்ற சொந்தங்கள் கேட்க ஆரம்பித்தன. ஒரு குரு பூஜை செய்தால் எப்படி ருபாய் இருபத்திஐந்து லக்க்ஷ ரூபாய் கிடைக்கும். உங்கள் மஹாபெரியவா எப்படி ஒரு சூட்கேசில் வைத்து கொடுப்பாரா என்று கிண்டலும் கேலியும் பேசினார்கள்.

அமிர்தவர்ஷினிக்கு சிரிப்புதான் வந்தது. மனசுக்குள் சிரித்துக்கொண்டே நினைத்துக்கொண்டாள் " இந்த அசடுகளுக்கு இப்போது எதுவும் புரியாது மஹாபெரியவா குரு பூஜை எல்லாம் நடித்தி முடித்த பிறகுதான் தெரியும் என்று நினைத்துக்கொண்டே மணப்பெண்ணின் அம்மாவை அழைத்து மஹாபெரியவா குரு பூஜை பற்றி சொல்லிவிட்டு அந்த பூஜையை நடத்தும் முறையையும் சொல்லிகொண்டுத்தாள். எல்லாவற்றையும் சொல்லிமுடித்து விட்டு அவர்கள் வீட்டலிருந்து தன்னுடைய வீட்டிற்கு வந்து செய்த முதல் வேலை என்னை தொலைபேசியில் அழைத்து எல்லா விவரங்களையும் சொல்லி முடித்தாள் அமிர்தவர்ஷினி.

அமிர்தவர்ஷினி சொன்ன எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு ஒரு யோசனை தோன்றியது. கல்யாணப்பெண்ணின் அம்மா செய்யப்போகும் மஹாபெரியவா குரு பூஜையுடன் அமிர்தவர்ஷினியும் சேர்ந்து செய்தால் பலன் இன்னும் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையல்லவா. எனக்கு தோன்றியது இதுதான் ஒருவருக்கு இருவர் குரு பூஜை செய்தால் மஹாபெரியவா மனமிரங்கி தன்னுடைய அனுகிரஹங்களையும் ஆசிர்வாதங்களையும் தாராளமாக வழங்குவார்கள் அல்லவா. ஆகவே இருவருக்கும் மஹாபெரியவளிடத்தில் உத்தரவு வாங்கி குரு பூஜை செய்யச்சொன்னேன். ஆனால் நான் ஒன்பது வாரமும் தொடர்பு கொண்டிருந்தது அமிர்தவர்ஷினியிடம் தான்.இனி ஒன்பது வாரமும் அமிர்தவர்ஷினி எனக்கு கல்யாண பிரச்னையின் தீர்வு குறித்து தெரிவிப்பாள்.

வாருங்கள் உங்களுடன் சேர்ந்து நானும் ஒன்பது வாரமும் பயணம் செய்து மஹாபெரியவாளின் அற்புத ஆசிர்வாதத்தை அனுபவிப்போம்.

நரசிங்கப்பெருமாள்

தூணிலும் துரும்பிலும் இருந்தது

புராணங்களின் வெளிப்பாடு

மஹாபெரியவா இருந்தது

நம் கண் முன்னே நிகழ்ந்த நிகழ்ந்துகொண்டிருக்கிற

உண்மையின் மூலம் வெளிப்பாடு

இது சத்தியமான உண்மை

முதல் வாரம்:

அமிர்தவர்ஷினி ஏற்கனவே மஹாபெரியவா குரு பூஜையில் முன் அனுபவம் பெற்றிருந்ததால் நான் விளக்கங்கள் அதிகமாக கொடுக்க தேவை ஏற்படவில்லை. தானாகவே முறைப்படி எல்லா ஏற்பாடுகளையும் முதல் நாள் இரவிலேயே செய்து வைத்திருந்தாள்

நிச்சயம் இந்த திருமணத்தை ஒட்டிய பண பிரச்சனைக்கு நிச்சயம் ஒரு தீர்வு உண்டு. அதுவும் மஹாபெரியவா அனுகிரஹத்தில் கிடைக்கும் என்பது அமிர்தவர்ஷினியின் அசைக்கமுடியாத ஆழமான நம்பிக்கை. ஏனென்றால் இரண்டு முறை மஹாபெரியவா நான் இருக்கிறேன் என்று சொல்லி ஓடோடி வந்து தன்னுடைய இறை கரத்தை நீட்டி அமிர்தவர்ஷினியை மீட்டிருக்கிறார். அதனால் முதல் வார பூஜையை நம்பிக்கையுடன் நல்ல முறையில் முடித்து விட்டு என்னிடமும் தெரிவித்து விட்டாள்.

இரண்டாவது வாரம்

இந்த வார பூஜையும் மிகுந்த எதிர்பார்ப்புகள் இல்லாமல் நல்ல முறையில் முடித்து என்னிடமும் தெரிவித்து விட்டாள் அமிர்தவர்ஷினி.

மூன்றாவது வார பூஜை முதல் ஆறாவது வார பூஜை வரை:

உங்களை ஒவ்வொரு வாரமாக அழைத்துச்செல்வதை விட நான்கு வார பூஜையின் மனநிலையை சில வரிகளில் கொடுத்து விட்டால் உங்கள் நேரமும் மிச்சமாகும். நானும் உங்களுடன் சேர்ந்து மஹாபெரியவாளின் அற்புதக்கட்டத்தை நோக்கி வேகமாக பயணப்படுவேன்.

நான்கு வார பூஜையும் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் மிகுந்த நம்பிக்கையுடன் கழிந்தது. இருந்தாலும் அமிர்தவர்ஷினிக்கு மனதில் ஒரு ஓரத்தில் சிறிது பயமும் தெளிவற்ற சிந்தனையும் இருந்துகொண்டே இருந்தது.

ஆனால் நானும் அவளை மிகுந்த நம்பிக்கையுடன் இருக்குமாறு சொல்லி தைரியமாக இருக்கசொல்லுவேன். எனக்குள் அசைக்கமுடியாத ஆழமான நம்பிக்கை. மஹாபெரியவா நிச்சயம் என்னை கை விடமாட்டார் என்று. அனுபவத்தின் விளைவுதான் இந்த நம்பிக்கை.

நாமெல்லாம் மனிதர்கள் தானே ஏழாவது வார குரு பூஜை

வழக்கமாக ஒவ்வொரு வார பூஜையின் முடிவிலும் வியாழக்கிழமை மாலையில் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்து விடுவாள்.ஆனால் வியாழன் மாலை வரை தொலைபேசி அழைப்பு வரவில்lலை.வெள்ளி மதியம் வரையும் அழைப்பு வரவில்லை.மஹாபெரியவாளை மனதில் த்யானம் செய்து கொண்டே இருந்தேன். வெள்ளிக்கிழமை மாலை ஒருவழியாக தொலைபேசி என்னை அழைத்தது. முதலில் அமிர்தவர்ஷினி தாமதத்திற்கு வருந்தினாள்.

பின்னர் ஒரு சந்தோஷமான செய்தி என்று ஆரம்பித்து சொல்லதொடங்கினாள். ஒரு பெரிய பணக்காரர் தெரிந்தவர்களுக்கு மட்டும் குறைந்த வட்டியில் பணம் கொடுத்து வாங்கும் லேவா தேவி பிசினஸ் செய்து வருவதாகவும் அமிர்தவர்ஷினியின் சொந்தத்தின் திருமணத்திற்கு குறைந்த வட்டியில் பணம் கொடுத்து உதவுவதாக சொல்லி இருப்பதால் பணப்பிரச்சனை முற்றிலும் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் இனிமேல் கல்யாண வேலைகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று சொல்லி மஹாபெரியவளுக்கு எங்களுடைய நன்றிகளை சொல்லிடுங்கோ என்று விடை பெற்றாள்.

எட்டாவது வார பூஜை

இந்த வார பூஜையையும் மிக சிறப்பாக செய்து முடித்திருப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் சென்ற வாரம் போலவே என்னை வெள்ளி மாலை வரை அழைக்கவில்லை. எனக்கோ மிகவும் கவலையாக இருந்தது. எனக்கு தெரிந்த எந்த பிரச்சனைக்கும் ஒரே வழி மஹாபெரியவாளை நினைத்து த்யானம் செய்ய ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்தில் என்னுடைய கைப்பேசி என்னை அழைத்தது. மறு முனையில் அமிர்தவர்ஷினி. அவளுடைய குரலில் வழக்கமான உற்சாகம் இல்லை. நான் அவளிடம் கேட்டேன் அமிதவர்ஷினி உனக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா என்று. அவள் சொன்னாள் உடம்பு நன்னா தான் இருக்கு மாமா மனசுதான் சரியில்லை என்றாள். நான் காரணம் கேட்டேன். அவளும் சொன்னாள்.

பணம் கொடுத்து உதவுவதாகt சொன்ன பணக்காரர் திடீரென்று தன்னால் பணம் கொடுக்கு இயலாது என்று கை விரித்து விட்டார். எல்லோருடைய நம்பிக்கையும் நொறுங்கி விட்டது. உங்களிடம் நான் உடனே சொல்லாததற்கு காரணம் நீங்கள் மனதளவில் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது. ஏனென்றால் எத்தனையோ ஆத்மாக்களின்;அன்றாட வாழ்கை பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி நீங்கள் மஹாபெரியவளிடம் முறையிடுகிறீர்கள். உங்கள் பிரார்த்தனைக்கு இடைஞ்சல் வந்துவிடக்கூடாது என்பதால் உங்களிடம் உடனே சொல்லவில்லை என்றாள்.

எனக்கும் ஏமாற்றமாக்தான் இருந்தது. இருந்தாலும் என்னுடைய அனுபவத்தின் காரணமாக சொன்னேன்.

"அமிர்தவர்ஷினி உங்களுக்கு ஒன்று தெரியுமா?.மஹாபெரியவா தாயென்றால் நாமெல்லாம் அந்த தாயின் குழந்தைகள். ஒரு மழை காலத்தில் குழந்தை தனக்கு ஐஸ்கிரீம் வேண்டுமென்று அடம் பிடித்தால் அந்த தாய்க்கு தெரியும் மழை காலத்தில் ஐஸ்கிரீம் உடம்புக்கு கெடுதல் என்று.

இந்த கெடுதல் பற்றி குழந்தைக்கு தெரியுமா. குழந்தை என்ன செய்யும் தாயிடத்தில் சொல்லும். இரு ஒமாச்சிக்கிட்டே சொல்லி உன்னுடைய கண்ணை குத்தச்சொல்றேன் என்று.இதே நிலை தான் நமக்கும். பிரார்த்தனைகள் தாமதப்படுகின்றன அல்லது விடை கிடைக்கவில்லை என்றால் அது நல்லதா கெட்டதா என்று நமக்கு தெரியாது ஆனால் ஒரு தாயின் ஸ்தானத்தில் இருக்கும் மஹாபெரியவளுக்கு நிச்சயம் தெரியும்.

அதனால் கவலைப்படாமல் இருங்கள் மஹாபெரியவா ஒரு போதும் உங்களை கைவிடமாட்டார்.என்று சொல்லி நம்பிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தினேன். அமிர்தவர்ஷினியும் தான் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக சொன்னாள்

ஒன்பதாவது வார பூஜை

இந்த ஒன்பதாவது வார பூஜை மிகவும் பயத்துடனும் கவலையுடனும் செய்து முடித்தாள் அமிர்தவர்ஷினி. அமிர்தவர்ஷினியின் சொந்தங்களும் கவலை தோய்ந்த முகத்துடன் சாப்பிடாமல் கொள்ளாமல் உட்கார்ந்து கவலை பட்டுக்கொண்டிருந்தார்கள். எனக்கும் மிகவும் கவலையவே இருந்தது. வழக்கம் போல் ஏதாவது பிரச்சனை என்றால் மஹாபெரியவா முன்னால் போய் தலையை தொங்கபோட்டுக்கொண்டே நிற்பேன்.

அப்படிதான் மஹாபெரியவளிடம் பிரார்த்தனை செய்தேன். " பெரியவா, நீங்கள் இதுவரை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கொடுக்காமலிருந்ததில்லை சற்று தாமதமாகலாம் கர்மாவின் விளைவாக. ஆனால் தீர்வு நிச்சயம். தீர்வு கிடைக்காமல் போன பிரார்த்தனைகளும் உண்டு. நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். விடை கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் அது தேவ ரகசியம் கேட்காதே என்று சொல்லி விட்டீர்கள். நானும் கேட்பதில்லை

இந்த கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டும் பெரியவா. எனக்கும் ரொம்பவும் ஏமாற்றமாக்தான் இருக்கு பெரியவா. ஏதாவது ஒரு விதத்தில் அமிர்தவர்ஷினிக்கு தீர்வு கொடுங்கள் பெரியவா என்று சொல்லி என்னுடைய பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.

சிறிது அமைதிக்கு பிறகு மஹாபெரியவா சொன்னார். அமிர்தவர்ஷினியின் பிரார்த்தனைக்கு அனுக்கிரஹம் பணியாச்சு. அவளுக்கு நிச்சயம் சந்தோஷமாக இருக்கும். ஏன் தெரியுமா பணப்பிரச்சனை தீருவதோடு மட்டுமல்லாமல் விலகிய சொந்தமும் மீண்டும் நெருங்கிய சொந்தமாகி விடும். உனக்கும் இதிலே சந்தோஷ தானே என்று தன்னுடைய பதிலை முடித்துக்கொண்டார்.

எனக்கு மிகவும் சந்தோஷமே. இருந்தாலும் அமிர்தவர்ஷினியிடம் மஹாபெரியவா கல்யாணத்திற்கு அனுக்கிரஹம் பண்ணிட்டா. கவலையே வேண்டாம் என்று சொன்னேன். விலகிய சொந்தம் நெருங்கி வரும் என்ற விவரங்களை நான் எனக்குள் வைத்துக்கொண்டேன். ஏனென்றால் அமிர்தவர்ஷினியை நான் மீண்டும் குழப்ப விரும்பவில்லை.

மணப்பெண்ணின் பெற்றோர்கள் எல்லோருமே மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்தனர்.ஆனால் எனக்கும் அமிர்தவர்ஷினிக்கும் நிச்சயம் தெரியும் மஹாபெரியவா கை விடமாட்டார் என்று. தீர்வு நிச்சயம் வரும். ஆனால் எந்த திசையிலிருந்து வரும் என்பதுதான் தெரியாது.

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல் வீச ஆரம்பித்து விட்டது . குடையை விரித்து பிடித்துக்கொள்ளுங்கள் நனைந்து விடாதீர்கள்.

மணப்பெண்ணின் தாயாருக்கு மூன்று அண்ணன் தம்பி மார்கள். இவர்களில் ஒரு தம்பி மட்டும் மிகப்பெரிய பணக்காரர். நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் பல வருடங்களாக விலகிய சொந்தமாகவே இருந்தார்கள்.

திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்கள் கூட இல்லை. மணப்பெண் தான் கவலைப்பட்டாலும் தன்னுடைய பெற்றோருக்கு தைரியம் சொல்லிக்கொண்டிருந்தாள். ஒரு நாள் இரவு முழுவதும் கவலையில் தூங்காமல் இருந்iதார்கள். என்ன கவலை இருந்தாலும் அமிர்தவர்ஷினியின் சொந்தத்தின் வீட்டில் காலை ஆறு மணிக்கெல்லாம் வெங்கடேச சுப்ரபாதம் ஒலிக்க ஆரம்பித்து விடும்.

குடும்பத்தினர் அனைவரும் கவலை தோய்ந்த முகத்துடன் மஹாபெரியவாளை நினைத்து த்யானம் செய்து கொண்டே இருந்தனர். வாசலில் அழைப்பு மணி யாரோ வந்திருப்பதை உணர்த்தியது. பெண்ணின் தயார் சென்று வாசல் கதவை திறந்தார்.வாசலில் நின்று கொண்டிருந்தது விலகியிருந்த நெருங்கிய சொந்த பணக்காரத்தம்பி நின்றுகொண்டிருந்தார்.

உள்ளே வந்து உட்கார்ந்தவுடன் பணக்கார தம்பி மிகவும் கோபித்து கொண்டார். உனக்கு மகளென்றால் எனக்கும் அவள் மகள் இல்லையா. எனக்கு ஏன் இது வரை கல்யாணம் நிச்சயமானதை சொல்லவில்லை என்று கோபித்துக்கொண்டார். அக்கா சொன்னாள் இல்லடா இன்னும் இருபது லக்க்ஷ ருபாய் பணம் வேணும் ஆனால் எங்குமே கிடைக்கவில்லை. எங்களுடைய நிலமும் விற்க முடியவில்லை.ஒருவர் பணம் கொடுத்து உதவுகிறேன் என்று சொன்னார். அவரும் இறுதியில் கை விரித்து விட்டார்.என்ன செய்வது என்று தெரியாத நிலையில் உனக்கு தெரியப்படுத்த முடியவில்லை.

இதைக்கேட்ட தம்பி சொன்னது "நீ ஒன்னும் கவலைப்படாதே அக்கா என்று சொல்லி தன்னுடைய பெட்டியில் இருந்து பேங்க் செக் புக்கை எடுத்து இருபது லக்ஷத்திற்கு தொகை எழுதி மஹாபெரியவளிடம் வைத்து விட்டு கல்யாண வேலைகளை விரைந்து முடிக்குமாறு சொல்லிவிட்டு தனக்கு மிகவும் பசியாக இருப்பதாயும் அக்கா கையாலே நீண்ட நாளுக்கு அப்பறம் சாப்பிடப்போறேன். இலையை போடு என்று வேஷ்டியை கட்டிக்கொண்டு உட்கார்ந்தார்.

இந்த நொடி வரை பேசாமல் விரோதம் பாராட்டிக்கொண்டிருந்த தம்பிக்கு எப்படி மனநிலையில் மாற்றம் வந்தது.யார் மாற்றினார்கள். மனநிலை மாற்றம் மட்டுமல்ல இருபது லக்க்ஷ ருபாய் ஒரே செக்கில் கொடுத்து கல்யாண வேலைகளை தொடர்ந்து செய்யுங்கள் என்று கலையிழந்த கல்யாண வீட்டில் மங்கள வாத்தியமும் வீடே சூரிய பிரகாசத்தில் ஜொலிக்கும் அளவிற்கு நொடிப்பொழிதில் மாறியதன் மர்மம் என்ன.உங்கள் மஹாபெரியவா பணத்தை சூட்கேசில் வைத்து கொண்டுவருவார் என்று கேலி பேசிய சொந்தங்களுக்கு இது ஒரு சவுக்கடி பதில் என்பதில் இன்னும் என்ன சந்தேகம். கல்யாண வீடு மட்டும் பிரகாசிக்கவில்லை சொந்தங்களின் மனங்களும் பிரகாசிக்க ஆரம்பித்தன.

என்ன நீங்கள் எல்லோரும் வாயடைத்து போய் விட்டீர்களா. அதிர்ச்சியிலிருந்து மீண்டு கல்யாணத்திற்கு வாருங்கள். கல்யாண நாளும் வந்து விட்டது. நான் தான் கல்யாணத்திற்கு போக முடியவில்லை.ஆனால் அமிர்தவர்ஷினி பெண்ணின் கழுத்தில் தாலியேறும் வரை ஒரு நேர்முக வர்ணனையே தன்னுடைய கைபேசி மூலம் கொடுத்து விட்டாள்.

சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்

தந்தத்தை நம்பி யானை இருக்கலாம்

உழைப்பை நம்பி நீ இரு

உழைப்பின் பலனுக்கு

மஹாபெரியவளை நம்பி இரு

விலகிய சொந்தங்களும் வரும்

கூடவே உங்கள் பிரார்த்தனையின் பலன்களும்

உங்களை வந்தடையும்

மஹாபெரியவா சரணம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்