• காயத்ரி ராஜகோபால்

உங்களுக்கு ஒரு நற்செய்தி - சக்தி பீடம்


பிரபஞ்சத்தின் மொத்த உருவம் மஹாபெரியவா அதில் அத்தனை அம்பாளும் சக்தியும் அடக்கம் நாம் இன்றும் அந்த அம்பாளுடன் தான் வாழ்கிறோம் மஹாபெரியவா பாதமே சரணம்

உங்களுக்கு ஒரு நற்செய்தி - சக்தி பீடம்,

இன்று காலை என்னுடைய பிரும்ம முஹுர்த்த பிரார்த்தனையில் மஹாபெரியவா எனக்கு ஒரு உத்தரவு கொடுத்தார். அந்த உத்தரவு இதுதான்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் ஐம்பத்தியொரு சக்தி பீடங்களின் வரலாற்றையும் பக்தர்களுக்கு சமர்ப்பணம் செய்.உன் ஜென்மா முடியரத்துக்குள்ளே இன்னும் நிறைய நல்ல காரியங்களை செய்யணும்.புராதன கோவில்களை எடுத்து புனருத்தாரணம் செய்யணும். இன்னும் நிறைய புஸ்தகங்கள் எழுதி கஷ்டத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவி செய்யணும்.மெட்ராஸில எனக்கு ஒரு கோவில் கட்டணும். இதைப்போல உனக்கு இன்னும் நிறைய பொறுப்புகள் இருக்கு உனக்கு.. இன்னிக்கு இருக்கக்கூடிய இளைய தலை முறை குழந்தைகளுக்கு என்னோட பக்தியை ஊட்டி அவாளை சனாதன தர்மப்படி வாழ அறிவுறுத்து. யாரும் சுதர்மத்தை விடாமே பாத்துக்கோ.

அவாளுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லு. நீ இன்னிக்கு திசை தெரியாம மூத்தோர்கள் வழிகாட்டுதல்கள் இல்லாமல் வாழும் குழந்தைகளிடம் என்னை பத்தி சொல்லறே...என் பக்தியை அவாளுக்கு சொல்லித்தரே. அவளோட பிரச்சனைகளுக்கு குரு பூஜை உத்தரவு வாங்கிக்கொடுத்து அவளோட வாழ்க்கையில் இருக்கும் பயத்தை போக்கி நம்பிக்கையை கொடுக்கறே.

இன்றைய குழந்தைகளுக்கு நீ போதிக்கும் விஷயங்கள் அவர்கள் குழந்தைகளுக்கு சொல்ல அவர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு சொல்ல இது ஒரு தொடர் ஓட்டம் போல போயிண்டே இருக்கனும். நீயும் ஒத்தை காலையும் ஒத்தை கையையும் வெச்சுண்டு நான் சந்தோஷம் படர அளவுக்கு பண்ணிண்டு இருக்கே.. நீயும் ஷேமமா இரு. மத்தவாளும் உன் குரு பூஜை மூலம் ஷேமமா இருக்கட்டும்.

இனி நான் சொல்லும் செய்தி உங்களுக்கு

மஹாபெரியவாளின் உத்தரவு படி நாளை வெள்ளிக்கிழமை முதலாவதாக கொல்லூர் மூகாம்பிகை கோவிலை பற்றி எழுதுகிறேன்.,வழக்கம் போல் உங்கள் ஆதரவை எதிர்ப்பது காத்திருக்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் இதயங்களில் வாழும்

காயத்ரி ராஜகோபால்