• காயத்ரி ராஜகோபால்

உங்கள் கவனத்திற்கு -குரு பூஜை அற்புதங்கள்


பிடித்ததை விடுவது மட்டும் சன்யாசமல்ல பிடிக்காததை ஏற்றுக்கொள்வதும் சன்யாசம் தான்

உங்கள் கவனத்திற்கு -குரு பூஜை அற்புதங்கள்

இந்த வார குரு பூஜை குரு பூஜை அற்புதங்களில் சாருகேசியின் அனுபவங்களை நீங்கள் நாளை படிப்பீர்கள்.இந்த பதிவு வழக்கத்திற்கு மாறாக சற்று நீளமாக இருப்பதாக உங்களுக்கு படும்.

எப்பொழுதும் எழுதும்பொழுது நான் என்னை உங்கள் இடத்தில் வைத்துக்கொண்டுதான் எழுதுவேன்.எப்பொழுதுமே எழுத்தாளனின் விரலுக்கும் படிப்பவர் கண்களுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது என்று நினைப்பவன்.

இதன் காரணமாக முடிந்தவரை தேவையான எல்லாவற்றையும் எழுத முயற்சிப்பேன்.அதையும் எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கி பதிவுகள் நீண்டு போகாமல் பார்த்துக்கொள்வேன். ஆனால் இந்தப்பதிவு சற்று நீளமாக இருக்கும். பொறுமையுடன் படியுங்கள். என்னுடைய ஒரு விரலுக்கு கூட ஓய்வு கொடுக்காமல் எழுதினேன்.

உங்கள் பொன்னான நேரத்தை இந்தப்பதிவவின் மூலம் நான் எடுத்துக்கொண்டதிற்கு மன்னித்தருள வேண்டுகிறேன். ஒன்றை நிச்சயமாக என்னால் சொல்லமுடியும் . நீங்கள் இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு நொடியும் உங்கள் சிந்தனைக்கு விருந்தாக அமையும். மஹாபெரியவா என்னை உங்களுக்கு காட்டினார். நீங்கள் எல்லோரும் என்னை வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். நம் பயணம் மஹாபெரியவா காண்பித்த பாதையில் தொடரட்டும்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் இதயத்தில் வாழும்

காயத்ரி ராஜகோபால்