• காயத்ரி ராஜகோபால்

என் இதய வானில் என்றும் சிறகடித்து பறக்கும் என் சிட்டு குருவிகளே


என் இதய வானில் என்றும் சிறகடித்து பறக்கும்

என் சிட்டு குருவிகளே

குரு பூஜை சரணாலயம்

இது கோவில் அல்ல

சாந்தி நிலையம்

நான் பேச நினைப்பதை எல்லாம் நான் பேசிவிட்டேன்

இது நீங்கள் பேசி நான் கேட்க வேண்டிய தருணம்

இன்று நாம் பேசும் இதமான வார்த்தைகள்

நாளை உறவுக்கு இலக்கணம் படிக்கும்

இதய காவியமாக பேசப்படும்

உங்கள் G.R. மாமா கடந்த திங்கட்கிழமையன்று .(1/7/19) குரு பூஜை

)குரு பூஜை சரணாலயத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் கால் இடறி

கீழே விழுந்து விட்டேன். நெஞ்சு பகுதியில் விலா எலும்பில் அடி பட்டு சிகிச்சையில் இருக்கிறேன்.

என்னுடைய உடல் ஊனத்தையும் தாண்டி உங்களுக்காக உழைப்பதில் நான் என்றுமே சோம்பேறித்தனமாக இருந்ததில்லை.. எனக்கு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும் என்பது மஹாபெரியவாளின் சித்தம் போலும். இப்பொழுது சில நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயம்.

நான் ஓய்வில் இருந்தாலும் என் மனதும் ஆன்மாவும் உங்களை சுற்றியே வந்து கொண்டிருக்கும்..நொடிப்பொழுதும் உங்கள் நலனில் மட்டுமே அக்கறை கொண்டு உழைக்கும் நான் எப்படி ஓய்வில் இருக்க முடியும்?. உடலுக்கு தான் ஓய்வே தவிர உள்ளத்திற்கும் மனதுக்கும் ஏது ஓய்வு.

வழக்கம் போல் உங்களின் அன்பயும் ஆதரவையும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நான் விரைவாக குணமடைய மருந்து மாத்திரைகள் இருந்தாலும் உங்களின் கனிவான வார்த்தைகளும் பிரார்த்தனைகளும் மட்டுமே என்னை குணமாக்கும் மருந்துகள். நமக்குள்ளே இருக்கும் இந்த சில நாட்களின் இடைவெளியை மஹாபெரியவா பக்தி நிச்சயம் நிரப்பும் என்பதில் சந்தேகமில்லை. நம்முடைய இணையதளத்தில் உங்களை வருகையை அன்றாடம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என்னுடைய ஓய்வு நாட்களில் உங்களுடைய கனிவான வார்த்தைகளை தாங்கி வரும் பதிவுகளே எனக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமென்ன?.

நான் ஓய்வு முடிந்து மீண்டும் உங்களிடம் வரும்பொழுது மஹாபெரியவா உத்தரவுப்படி உங்களுக்காக ஒரு புதிய தொடர் ஆரம்பித்து எழுத இருக்கிறேன்.தொடரின் பெயர் நம் எல்லோருக்குமே ஆசையை தூண்டும் "ஒரு ஆத்மாவின் பயணம்". ஒரு மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆத்மா இறைவனை நோக்கிய பயணத்தை எப்படி மேற்கொள்கிறது?. பயணத்தில் ஆத்மாவை யார் அழைத்து செல்வார்கள். போகும் வழியில் வரும் உலகங்கள் என்னென்ன? போன்ற சுவாரசியமான தகவல்களுடன் இந்த தொடர் இருக்கும்.

எல்லையில்லா வானத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாமலே வானத்தை பார்க்கிறோம்.. எல்லாவற்றிற்கும் நிச்சயம் இந்த தொடரில் பதில் மட்டுமல்ல பல ரகசியங்களும் உங்களை வந்து அடையும்.

இன்னும் ஒரு சில நாட்கள் தானே.. இன்றைய பிரிவு நாளை நம்மிடையே இருக்கும் பாசத்தையும் பரஸ்பர அன்பயும் இன்னும் பல மடங்கு உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. எனக்கு உடல் தான் கோளாறே தவிர உள்ளம் ஆரோக்யமாகத்தான் இருக்கிறது. என்றும் உங்களுக்காக என் பிரார்த்தனை தொடரும்.

என்றும் உங்கள நலன் மட்டுமே நாடும்

உங்கள .G.R. மாமா


976 views1 comment