• காயத்ரி ராஜகோபால்

என் வாழ்வில் மஹாபெரியவா-085 சரணாலயம் பிறந்த கதை


என் வாழ்வில் மஹாபெரியவா-085

சரணாலயம் பிறந்த கதை

சரணாலயத்தில் வாசம் செய்யும் மஹாபெரியவா

எண்ணத்தில் புனிதமும்

சிந்தனையில் இறைத்துவமும்

செயலலில் மனிதத்துவமும் இருந்தால்

இந்த பிரபஞ்சமே கைகட்டி

உங்களுக்கு சேவகம் செய்யும்.

இந்த பதிவே ஒரு வாழும் சான்று

அன்று இரவு நான் தூங்க சென்றாலும் என்னால் வழக்கம் போல் தூங்க இயலவில்லை. ஏன் தெரியுமா? மஹாபெரியவா செய்யும் அத்தனை அற்புதங்களுமே என் தூக்கத்தை விழுங்கி விடும் அற்புதங்கள்.

ஆனால் நாளை காலை மஹாபெரியவா செய்யப்போகும் அற்புதத்தித்ற்கு எல்லையே இல்லை.. எல்லா அற்புதங்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் இருக்கப்போகிறது.

இதற்கு காரணங்கள் எவ்வளவு இருந்தாலும் ஒரு சில காரணங்களை இங்கே உங்களுக்காக எழுதுகிறேன்.

.

  1. முதலாவது காரணம் நான் முன் வைத்த அத்தனை கோரிக்கைகளையும் ஏற்று எனக்காக மஹாபெரியவா ஆசிர்வதிக்க போகிறார்.

நான் முன் வைத்த கோரிக்கைகள் இவைகள் தான்.

  1. என் கண் பார்வையில் நீங்கள் எனக்காக பார்க்கும் வீடு இருக்கவேண்டும்.

  2. தெருவை கடந்து என்னால் போக இயலாது.. அதனால் இப்பொழுது இருக்கும் வீட்டின் அருகிலேயே இருக்க வேண்டும்.

  3. உங்களை வைத்து நான் பூஜை செய்ய வேண்டும்.

  4. ஒவொரு அனுஷ பூஜைக்கும் நான் உங்களுக்கு பூஜை செய்து எல்லாருக்கும் பிரசாதம் விநியோகம் செய்யணும்.

  5. ஒவ்வொரு அனுஷத்திற்கும் ஒரு கச்சேரி ஏற்பாடு செய்யணும்.

  6. என்னால் புது வீட்டிற்கு அட்வான்ஸ் அவ்வளவாக கொடுக்க முடியாது. அதனால் அட்வான்ஸ் குறைச்சலாக இருக்க வேண்டு,ம். அந்த குறைச்சல் அட்வான்ஸையும் யாராவது ஒரு பக்தர் ஏற்று கொள்ள வேண்டும்.

  7. வாடகையும் குறைச்சலாக இருக்கவேண்டும். வாடகையும் யாராவது ஏற்றுக்கொண்டால் நான் மற்றவர்களுக்காக செய்யும் பிரார்தனையையை அமைதியான மனதுடன் செய்வேன்.

  8. அந்த புதிய இடம் ஒரு சாந்தியை கொடுக்கும் சாந்தி நிலையமாக இருக்கவேண்டு,ம்.

  9. அங்கு உங்களை சேவிக்க வருபவர்களின் மனக்குறையும் மனதின் பாரமும் அவர்களுக்கு அங்கேயே இறக்கி வைத்த உணர்வு வர வேண்டும்.

  10. பல நூறு ஆண்டுகளாக ஒரு கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு எவ்வளவு சக்தி இருக்குமோ அவ்வளவு சக்தியும் சாநித்யமும் இந்த கோவிலில் இருக்க வேண்டும்.

  11. பக்தர் ஒருவர் உங்களோட சரணாலயத்தில் காலடி எடுத்து வைக்கும் பொழுதே அவர்கள் கனத்த மனசு லேசாக வேண்டும். இறுகிய இதயம் விசாலமாக வேண்டும். .

  12. துக்க சுவாசத்தையே சுவாசித்து கொண்டிருந்த நாசிகள் நிம்மதி பெருமூச்சை சுவாசிக்க வேண்டும்..

  13. நீங்கள் அந்த நாட்களில் மடத்தில் நீங்கள் மாடதி பதியாக உட்கார்ந்திருக்க தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி வரும் பக்தர்கள் பக்தர்களை போல இந்த சாந்தி நிலையத்திலும் இருக்க வேண்டும்...

  14. அன்றைய நாட்களில் உங்களை பார்த்தவுடன் எத்தனை ஆத்மாக்கள் தங்களையும் அறியாமல் கண்ணீர் நிரம்பிய கண்களுடன் உங்கள் திருவடிகளை நமஸ்கரிப்பார்கள். ஏதோ தங்களுடைய பிரச்சனைகளுக்கு அந்த நொடியே தீர்வு கிடைத்து விட்டாற்போல் அழுவதும் சிரிப்பதுமாக இருப்பார்கள்.

  15. அன்றைய உங்கள் ஸ்தூல நாட்கள் இன்று உங்கள் சூஷ்ம நிலையிலும் இந்த சாந்தி நிலையத்திலும் தொடர வேண்டும்..அன்று உங்களுக்கு நான் கைங்கர்யம் செய்யவில்லை. ஆனால் இன்று உங்கள் சூஷ்ம நிலையில் ஓய்வு ஒழிச்சல் இன்றி நான் உங்களுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும்.

  16. எனக்காக இதுவரை நான் கேட்டது எதுவும் இல்லை. நான் உங்களிடம் கேட்பது எல்லாமே பொது நலன் சார்ந்து தான் இருக்கும். நான் உங்களோட பக்தாளுக்காக கேட்டது எல்லாம் செய்வேளா பெரியவா.

பெரியவா: நிச்சயம் செய்யறேண்டா. உனக்காக இதுவரைக்கும் எதுவுமே கேட்டதில்லை. அந்த குறையும் உனக்கு இருக்க வேண்டாம்டா. உனக்குன்னு என்ன வேணும் இப்பவே கேளு. நன் உனக்கு அனுக்கிரஹம் பண்ணறேன். என்ன வேணுமோ கேளுடா.

நான்: பெரியவா எனக்கு ஒரு ஆசை. என்னோட பிராணன் எப்படி போகணும் தெரியுமா? பெரியவா.. நான் எனக்கு முகம் தெரியாத முகவரி தெரியாத ஒரு சக ஆத்மாவிற்கு உங்களிடம் கெஞ்சி பிரார்த்தனை செய்யும் பொழுது என் கடைசி மூச்சு ங்கிற்க வேண்டும். நான் செய்யும் அந்த கடைசி பிரார்த்தனையும் அந்த ஆத்மாவிற்கு பலிக்க வேண்டும். இதுதான் எனக்காக நான் கேட்கும் கடைசி ஆசை.

பெரியவா: இவ்வளவு தானடா? உனக்கு அனுக்கிரஹம் பண்ணியாச்சு போ.ஆமாம் நீ இவ்வளவு கேட்கறீயேடா. அந்த காலத்து கோவிலுக்கு இருக்கற சாந்நித்தியம் இருக்கணும்கறே. நான் ஸ்தூல சரீரத்தில் இருந்த மாதிரி இப்போ சூஷ்ம சரீரத்திலும் நடக்கணும்கறே. இவ்வளவு ஆசையை மனசுலே வெச்சுண்டு என்கிட்டே பிரார்த்தனை செய்யரே. இந்த கோவிலுக்கு என்ன பேர் வைக்கப்போறே..

நான்: அதையும் நீங்களே சொல்லுங்கோ பெரியவா.

பெரியவா: நீயும் என்கிட்டே சரணாகதி பண்ணிட்டே. குரு பூஜை உதவு வேண்டி உன்னை தேடி வரவாளையும் சரணாகதி பண்ண வைக்கறே. பேசாமே இத கோவிலுக்கு சரணாலயம்னு பேர் வை. அங்கே வரவாளுக்கு நிச்சயம் மன சாந்தியும் நிம்மதியும் கிடைக்கும்.

நான்: ரொம்ப சந்தோஷம் பெரியவா. நீங்கள் சரண்சலயத்திற்கு வந்துட்டேள்ன்னு எனக்கு எப்படி தெரியும் பெரியவா?

பெரியவா: இப்போ மெட்ராஸில மழையே இல்லை. நீ சரணாலயம் போன முதல் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்.

என்னோட ;பூரண கும்பம் சரணாலத்திற்கு வரும்.

பெரிய இசை வல்லுநர்கள் சரணாலயத்திற்கு வருகை தருவது மட்டுமல்ல எனக்கு முன்னால் அவர்களின் இசை ஞானத்தை காண்பிப்பார்கள். சரணாலயம் ஒரு இசை கோவிலாகவே மாறிவிடும். இது போல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.. நான் உன் சரணாலயத்தில் வந்து வாசம் செய்ய ஆரம்பிச்சுட்டேன்னு தெரிஞ்சுக்கோ.

எல்லாத்துக்கும் மேலே நீ கேட்டமாதிரி சரணாலயத்திற்கு வரும் பக்தர்கள் கேட்டதும் கிடைக்கும். கேட்க ,மறந்ததும் கிடைக்கும். உனக்கு சந்தோஷமா?

நான் ரொம்ப சந்தோஷம் பெரியவா. நீங்கள் எப்பொழுதும் சரணாலயத்தில் வாசம் செய்யணும். உங்களை தேடிண்டு வர பக்தாளுக்கு அவர்கள் கேட்கும் நியாயமான வரங்களை நீங்கள் .அளிக்க வேண்டும்.

இத்தனை ஆசைகளை மனதிலும் இதயத்திலும் சுமந்து கொண்டு இரவு உறங்க சென்றேன். இரவில் ஒரு சொப்பனம். மஹாபெரியவா எனக்கு அமைத்து கொடுக்க, போகும் வீட்டின் அமைப்பு என் கனவில் வந்தது.

அதில் இருக்கப்போகும் பார்வதி பரமேஸ்வரன் பெருமாள் மஹாலக்ஷ்மி விநாயகர் முருகன் விகாரங்கள் அமையப்போகும் கோபுர கலசத்துடன் கூடிய சன்னதி அனுஷ பூஜைக்கு செய்யும் கச்சேரி இடத்தின் அமைப்பு எல்லாமே என் கனவில் சினிமாமாவில் பார்ப்பது போல அச்சடித்தாற்போல் பார்த்தேன்.

இரவு ஒரு மாதிரி தூங்கி விட்டு அதிகாலை பிரும்ம முகூர்த்த பிரார்த்தனைக்கு தயாரானேன். மஹாபெரியவா முன் நின்றேன்.

பெரியவா: என்னடா? நன்னா தூங்கினாயா?

நான் : தூங்கினேன் பெரியவா. இன்னும் விடியரத்துக்கு சில மணி நேரம் மட்டுமே இருக்கு. எனக்குள் ஒரே பரவசமா இருக்கு பெரியவா. நீங்கள் பிரபஞ்ச தெய்வம் பரமேஸ்வரன்.. நான் ஒரு சாதாரண மனுஷன். நான் ஆசைப்பட்டு கேட்டேன். அப்படிங்கறதுக்காக இவ்வளவு மெனக்கெடறேளே பெரியவா. யார் செய்த புண்ணியமோ.

பெரியவா: யார் செஞ்ச புண்ணியமோ இல்லை. நீ பூரவ ஜென்மத்தில் செஞ்ச புண்ணியம். நீ யாருன்னு உனக்கு தெரியாது. ஆனா எனக்கு தெரியும். உன்னோட கர்மா இத்தனை நாளும் உன்னை லௌகீக வாழக்கையில் உழண்டுண்டு இருந்தே..

உன்னோட கர்மாவும் கழிஞ்சது. நானும் உன்னை தேடிண்டு வந்துட்டேன். நீ பிறந்த நொடியில் இருந்து உன்னை கவனத்தோடு பார்த்துண்டு இருக்கேன். நீ பிறந்த காரணம் உனக்கு இப்போ ஓரளவுக்கு தெரிஞ்சிருக்கும்.. போகப்போக இன்னும் உனக்கு நீ யார் என்பது தெரியும். புரியவும் புரியும்,.

என்னுடைய மற்றவர்களுக்கான பிரார்த்தனை முடிந்தது.. நானும் மஹாபெரியவாளிடம் விடை பெற்றுக்கொண்டேன். அன்று காலை நடக்கப்போகும் மஹாபெரியவா அற்புதத்திற்காக காத்துக்கொண்டிருந்தேன்.

மஹாபெரியவா என்னிடம் சொன்னது அன்று காலை நன் பகலில் நான் கேட்டுக்கொண்டபடி எனக்கு கோவிலை போன்ற இல்லம் அமையும் என்பது மஹாபெரியவா எனக்கு கொடுத்த செய்தி.

நானும் காலை ஒன்பது மணியில் இருந்து எதாவது ஒரு திசையில் இருந்து யார் மூலமாவது நல்ல செய்தி வரும் என்று காத்து கொண்டிருக்கிறேன். .நன் பகல் என்றால் பன்னிரண்டு மணிக்குள் அந்த அற்புதம் நடந்து முடிந்ததாக வேண்டும்.

அற்புதத்தின் ஆரம்பம்:-.

என்னுடைய வீட்டின் எதிர் வீட்டில் இருக்கும் மஹாபெரியவா பக்தர் கணேசன் என்பவர் என் வீட்டின் அழைப்பு மணியை ஒலிக்க செய்து என்னை அழைத்தார். என்னுடன் சில நிமிடங்கள் பேச வேண்டும் என்று சொன்னார். நானும் அவரை வீட்டின் உள்ளே அழைத்து உட்கார வைத்தேன்.

அவர் என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். "மாமா நேற்று உங்களை பார்க்க வந்த கூட்டம் உங்களால் சமாளிக்க முடியாமல் இருந்தது. இடமும் உங்களுக்கு போத வில்லை உங்களுக்கு பெரிய இடமாக பார்க்க யோசனை இருக்கிறதா?. என்று என்னிடம் கேட்டார்.

சொல்லித்தான் தெரிய வேண்டுமா. இதுவும் மஹாபெரியவா லீலைகளில் ஒன்று என்று. நானும் சொன்னேன் “ஆமாம் எனக்கு பெரிய இடம் வேண்டும் என்று மஹாபெரியவளை கேட்டேன். பெரியவாளும் உனக்கு நாளைக்கு காத்தலே கோவில் மாதிரி வீடு அமையும் அப்படின்னு சொன்னார். இப்போ நீங்கள் வந்து என்னிடம் கேட்கிறீர்கள். வீட்டு சொந்தக்காரருடன் பேசுங்கள் என்றேன்.

அவரும் “நான் அவரிடம் பேசிவிட்டு மீண்டும் சற்று நேரத்தில் உங்களை சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் மீண்டும் என்னிடம் வந்தார். நான் அவரிடம் கேட்டேன் “வீட்டை வாடகைக்கு தர இஷ்டமா என்று கேட்டேன். அவர் யாருக்கு வீடு வாடகைக்கு வேண்டும்" என்று கேட்க நானும் .அவரிடம் பின்வருமாறு சொன்னேன்.

"என் வீட்டிற்கு எதிர் வீட்டில் G.R மாமா என்று ஒருவர் இருக்கிறார். அவர் தீவிர மஹாபெரியவா பக்தர். அவர் தினமும் குரு பூஜை வேண்டி அவரிடம் வரும் மஹாபெரியவா பக்தர்களுக்கு கோவில் மாதிரி ஒரு இடம் வேண்டும். அவருக்கு தருவீர்களா? என்று கேட்டேன்.

.G.R .மாமாவா. அவரை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவருக்குத்தான் வீடு என்றால் நானே நேரில் வருகிறேன் என்று சொன்னார். இன்னும் சற்று நேரத்தில் வீட்டுக்கு சொந்தக்காரர் வந்து உங்களை சந்திப்பார்.

என்றார். வீட்டுக்காரரும் வந்தார். என்னை சந்தித்து பேசினார்.

எனக்கு உங்களுக்கு வீடு வாடகைக்கு தருவது சந்தோஷம் என்றார். அவர் என்னிடம் பேசிய சில நிமிடங்களில் வீட்டுக்கு அட்வான்ஸ் தொகையில் குறைத்தார். வாடகையும் குறைத்தார்.

எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறு பக்கம் கவலையாக இருந்தது. எப்படி சமாளிக்க போகிறேன் என்று. மஹாபெரியவா எனக்கு கஷ்டமில்லாமல் வீடு கிடைக்கும் என்றாரே. இன்னும் என்ன நடக்க போகிறதோ தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

இதற்குள் என்னை வீட்டை சுற்றி பார்க்க அழைத்து சென்றார்கள்.என்ன ஒரு ஆச்சரியம். நேற்று இரவு மஹாபெரியவா எனக்கு கனவில் வீட்டின் அமைப்பை காட்டினார். அதே அமைப்பில் இப்பொழுது இந்த வீடு இருக்கிறது.

இப்பொழுது நான் மஹாபெரியவாளிடம் வைத்து வேண்டுதல்களை சற்றே நினைவு கூறுங்கள்.

தெருவை கடக்க கூடாது. என் கண் பார்வையில் வீடு இருக்க வேண்டும். . வீட்டில் பக்தர்களுடன் பேசுவதற்கு ஏரகண்டிஷன் பொருத்திய அறை வேண்டும். மஹாபெரியவாளை அமர வைக்க அழகான ஒரு பெரிய ஹால் வேண்டும். அனுஷ பூஜை செய்ய விசாலமான இடம் வேண்டும். அட்வான்ஸ் வாடகை சுமை எனக்கு இருக்க கூடாது. இவைகள் எல்லாம் என்னுடைய வேண்டுதல்கள்.

நான் கேட்ட அனைத்தையும் மஹாபெரியவா கொடுத்து விட்டார்.

இன்னும் பாக்கி இருப்பது அட்வான்ஸ் வாடகை சுமை. இந்த சுமையை மஹாபெரியவா எப்படி நிறைவேற்ற போகிறார்.அந்த சரணாலயத்தில் என்னென்ன விகிரஹங்கள் வரப்போகிறது. இவைகளை அடுத்த பதிவில் உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

என்னுடைய எழுத்துப்பணி சுமை அதிகமாக இருப்பதால் இந்த அற்புததோடு நிறைவு செய்கிறேன். மீண்டும் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்