• காயத்ரி ராஜகோபால்

குரு பூஜை பிரசாதத்தை பெற்றுக்கொள்ள ஆகாச கருடன் ரூபத்தில் வந்த மஹாபெரியவா. திருமதி விஜயலக்ஷ்மி மாமியி


குரு பூஜை பிரசாதத்தை பெற்றுக்கொள்ள ஆகாச கருடன் ரூபத்தில் வந்த மஹாபெரியவா. திருமதி விஜயலக்ஷ்மி மாமியின் அனுபவங்கள். சென்ற வாராம் நடந்த அற்புதம்

நீ அன்று சிறு பொறியாக என் கையில் கொடுத்த குரு பூஜை இன்று உலகமெங்கும் காட்டு தீயாக பரவி நிற்கிறது கலி காலத்தின் சவால்களை தவிடு பொடியாக்கும் குரு பூஜை உலகிற்கு வேண்டுமானால் நீ சூஷ்ம நிலை உன் பக்தர்கள் உருகி அழைக்கும் பொழுது நீ என்றுமே எங்களுக்கு ஸ்தூல நிலை தான் மஹாபெரியவா நின் பாதம் சரணம்

விஜயலக்ஷ்மி மாமியின் குரு பூஜை பிரசாதத்திற்கு வந்த கருடன்

குரு பூஜை என்பது ஏதோ பரிகாரமோ அல்லது சடங்கோ சாங்கியமோ அல்ல. மஹாபெரியவா ரூபத்தில் நம்முடன் வாழ்ந்த பரமேஸ்வரனை நேரில் அழைத்து கலிகாலத்தின் விகாரங்களில் இருந்து விடுதலை கேட்கும் ஒரு உண்மை நிகழ்வே. ஆகும்.

நாமும் எத்தனையோ மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை அனுபவித்து வருகிறோம்.ஆனால் குரு பூஜை பிரசாதங்களை பெற்றுக்கொள்ள ஒரு கருடன் இரண்டு நாட்களுக்கு முன்பே ஒரு இல்லத்தில் வந்து தங்கி இருந்து பிரசாதங்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வுகளை என்னவென்று சொல்ல.

வழக்கமாக தேவர்களும் இறைவனும் ஹோமத்தில் அக்னி ஸ்வரூபமாக வந்து அவர்களுக்கு உரிய அவிர் பாகத்தை பெற்று கொள்வார்கள்..மஹாபெரியவாளே தான் ஸ்தூலமாக வாழ்ந்த காலத்திலேயே அக்னி ஸ்வரூபமாக வந்து தன்னுடைய அவிர் பாகத்தை பெற்றுக்கொண்ட சம்பவங்கள் ஏராளம்.

குழாயடியில் கருடன்

ஆனால் மஹாபெரியவா சூஷ்ம நிலைக்கு உயந்தவுடன் எல்லைகளை கடந்த அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் மஹாபெரியவா குரு பூஜை என்னும் பிரபஞ்ச சக்தியையை ஒரு சேர திரட்டி குரு பூஜை மூலமாக மஹாபெரியவாளை நேரில் அழைத்து நம்முடைய கஷ்டங்களை நேரில் சொல்லி அழுது கஷ்டங்களுக்கு ஒரு நிவர்த்தியோ அல்லது கஷ்டங்களில் இருந்து விடுதலையோ கிடைக்க வேண்டுகிறோம்.

நம்முடைய வேண்டுதல்களுக்கு மீண்டும் மீண்டும் உறுதி படுத்தும் வகையில் ஒவ்வொரு பக்தர்களின் அற்புத அனுபங்களை அனுபவித்து வருகிறோம். இன்று ஒவ்வொரு இல்லங்களிலும் மஹாபெரியவா குரு பூஜை நடந்து கொண்டுதான் இருக்கிறது. குரு பூஜையை பற்றி இன்னும் விரிவாக வரும் நாட்களில் விவரமாக எழுதுகிறேன்.

ஆனால் இங்கு ஒன்றை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டு அக்டோபர் மாதம் இருபத்தி ஐந்தாம் தேதி சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு (25/09/2014) இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்த குரு பூஜை என்னும் பிரபஞ்ச சக்தியை மஹாபெரியவா குரு பூஜை வடிவில் என் கைகளில் கொடுத்தார்.

அன்று ஒரு சிறு நெருப்பு பொறியாக வெடித்த குரு பூஜை இன்று உலகத்தின் எல்லைகளை கடந்து ஒரு அந்த சிவ பெருமானே அக்னி ஸ்வரூபமாக ஒவ்வொருவர் இல்லங்களிலும் வந்து இந்த கலி காலத்தில் அல்லல்படும் ஆத்மாக்களுக்கு ஒரு களங்கரை விளக்காக திகழும் அற்புதத்தை என்னவென்று சொல்ல.

மாமி இல்லத்தில் கிணற்று மேட்டில் கருடன்

இந்த குரு பூஜை அற்புதத்தின் நாயகன் கருட பகவானை பற்றி சற்று சிந்திப்போம்.

கருடனுக்கு ஆகாச கருடன் என்று ஓர் பெயர் உண்டு. கருடன் வானத்தில் எட்டா உயரத்தில் மட்மே பறந்து கொண்டிருக்கும். கருடன் திருமாலின் வாகனமும் ஆகும். கஜேந்தரன் என்ற யானையை முதலையிடம் இருந்து காப்பாற்ற தானே கருட வாகனத்தில் பறந்து வந்து யானைக்கு மோக்க்ஷம் கொடுத்தது நமக்கு எல்லாமே தெரியும்.

ஒரு வீட்டிற்கு கருட பகவானே வந்து பிரசாதங்களை பெற்றுக்கொள்கிறார் என்றால் அந்த ஆத்மா எவ்வளவு புனித ஆத்மாவாக இருக்க வேண்டும்.. அதுவும் இரண்டு நாட்கள் தங்கி உணவை அருந்தி தண்ணீரையும் வாங்கி குடிக்கிறது என்றால் அந்த இல்லமே கோவிலாக மாறப்போகிறது என்று தெரியவில்லையா?

ஆம் அந்த அம்மையாரின் இல்லத்திலும் உள்ளத்திலும் மஹாபெரியவா கோவில் கொள்ளப்போகிறார் என்று அர்த்தம். இரண்டு நாட்களுக்கு பிறகு மஹாபெரியவா பிரசாதமான சர்க்கரை பொங்கல் கிடைத்தவுடன் திரும்பவும் தன்னுடைய தேசமான வானத்திற்கே சென்று விட்டது என்றால் கருடன் மஹாபெரியவா குரு பூஜை பிரசாதம் வாங்கிப்போகத்தான் வந்தது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

இனி அற்புதத்திற்குள் பிரவேசிப்போம்.

திருமதி விஜயலக்ஷ்மி சென்னையில் வாழும் ஒரு இல்லத்தரசி. எல்லோரையும் போல் இணைய தளத்தில் காணொளியை பார்த்து விட்டு என்னை தொடர்பு கொண்டார். தான் குடும்பத்தில் எதிர் கொண்டு இருக்கும் பிரச்சனைகளை சொல்லி தனக்கு குரு பூஜை மூலம் ஒரு தீர்வு வேண்டினார்.

நானும் மஹாபெரியவாளிடம் பிரச்சனைகளை எடுத்து சொல்லி குரு பூஜைக்கு உத்தரவு வாங்கினேன்.விஜயலக்ஷ்மி மாமிக்கும் உத்தரவு வந்ததை தெரிவித்தேன். மாமியும் முதல் இரண்டு வாரங்கள் மிகவும் சிரத்தையுடன் பூஜை செய்தார்.

மூன்றாவது வாரம் செவ்வாய் கிழமை மதியம் ஒரு கருடன் வானத்தில் இருந்து விஜயலக்ஷ்மி மாமியின் வீட்டை அடையாளம் கண்டு வீட்டின் கொல்லை புறம் கிணற்று மேல் வந்து இறங்கியது. மாமி சற்றும் பயப்படாமல் தண்ணீரை ஒரு தட்டில் வைத்தார்.

கருட பகவானும் மிகவும் சுவாதீனமாக தண்ணீரை குடித்தது. பிறகு வயிற்றுக்கும் அவ்வப்பொழுது உணவளித்து வந்தார். அதற்குள் அந்த கருட பகவானுக்கும் மாமிக்கும் ஒரு நெருக்கமான பந்தம் ஏற்பட்டு விட்டது. குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே ஆகி விட்டது அந்த கருடன்.

வியாழக்கிழமை காலை -இங்குதான் அற்புதத்தின் தொடக்கம்.

வழக்கம் போல் கருட பகவானுக்கு மாமி உணவும் தண்ணீரும் கொடுத்தார். கருட பகவானும் கொடுத்ததை சாப்பிட்டுவிட்டு அமைதியாக அங்கேயே யாரையும் தொந்தரவு செய்யாமல் வீட்டின் உள்ளயே பார்த்து கொண்டிருந்தது..

விஜயலக்ஷ்மி மாமிக்கு கொஞ்சம் மனம் கலங்கியது. புதிதாக மலர்ந்த இந்த உறவின் அர்த்தம் என்ன முடிவு தான் என்ன? ஒன்றும் புரியாமல் வீட்டில் பூஜை அறைக்கும் சமையல் அறைக்கும் நடந்து கொண்டிருந்தார். இந்த புதிய உறவின் அர்த்தம் என்ன? முடிவுந்தான் என்ன என்று மஹாபெரியவளிடம் மாமி கேட்டிருக்க வேண்டும்.

மாமிக்கு மஹாபெரியவா மனதில் தோன்ற வைத்திருக்க வேண்டும்.மாமி உடனே ஒரு மந்தார இலையை அலம்பி மஹாபெரியவா பிரசாதமான சர்க்கரை பொங்கலை அந்த இலையில் வைத்து கருட பகவானுக்கு பரிமாறினார்.

என்ன அதிசயம். மனிதர்கள் சாப்பிடுவது போலவே ஆற அமர அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே அந்த சர்க்கரை பொங்கலை ருசித்து சாப்பிட்டது. பிறகு மாமி கொடுத்த தண்ணீரை குடித்து விட்டு தான் வந்த வேலை முடிந்து விட்டது என்பதை தெரிவித்தது. எப்படி தெரியுமா?

தன்னுடைய தேசமான ஆகாயத்தை நோக்கி பறந்து விட்டது. அந்த ஆகாச கருடன். ஆகாயத்தில் இருந்து மாமியை ஒரு நன்றி உணர்ச்சியோடு பார்த்து கொண்டே வட்டமிட்டது . எழுபத்தி இரண்டு மணி நேர உறவு அல்லவா.

மாமியும் கண்களில் தண்ணீர் தளும்ப கருட பகவானுக்கு விடை கொடுத்தார். நேராக பூஜை அறைக்கு வந்து மஹாபெரியவாளை நமஸ்கரித்து விட்டு இந்த அற்புதத்தை நடத்த தன்னையும் தன இல்லத்தையும் தேர்ந்தேடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

பக்தர்களே நீங்கள் நினைப்பது எனக்கு நன்றாக தெரிகிறது. ஏதோ புராண காலத்து கதையை பாட்டி தன பேத்திக்கு சொல்வது போல இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் அல்லவா. அதுதான் இல்லை. சில வாரங்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம்.

இதற்கு ஆதாரமாக நாளை மாலைக்குள் காணொளி மற்றும் கருட பகவான் பிரசாதம் சாப்பிடுவதையும் தண்ணீர் குடிப்பதையும் இதே இணைய தளத்தில் வெளியிடப்படும். அதற்கு பிறகு உங்கள் மஹாபெரியவா நம்பிக்கையும் பக்தியும் வானளவு உயரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த நிகழ்வை நடத்தியது தான் தான் என்பதை மஹாபெரியவா மாமிக்கு ஒரு கனவின் மூலம் உணர்த்தினார். அந்த கனவு என்ன தெரியுமா? மஹாபெரியவா ஒரு பல்லக்கில் வந்து மாமியின் வீட்டு வாசலில் இறங்கி பூஜை அறைக்கு வந்து எல்லோரையும் ஆசிர்வாதத்தார். இதற்கு மேல் ஆதாரம் என்ன வேண்டும்.

விஜயலக்ஷ்மி மாமியின் மஹாபெரியவா குரு பூஜை பிரசாதம் சாப்பிட வந்த கருடன் சர்க்கரை பொங்கல் சாப்பிடும் கண்கொள்ளா காட்சி உலகமே வியக்கும் மஹாபெரியவா குரு பூஜை

கூடிய விரைவில் இந்த மாமியின் நேர் காணலும் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் நாடும்

காயத்ரி ராஜகோபால்