• mahaperiyava

என் வாழ்வில் மஹாபெரியவா -026


அற்புதத்தின் சுருக்கம்:வாழ்க்கையில் நமக்கு ஓர் இரவுக்குள் ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்றால் நாம் நண்பர்களை அழைப்போம் சொந்தங்களை அழைப்போம் உறவுகளை அழைப்போம்.. எனக்கு இருக்கும் ஒரே சொந்தம் ஒரே உறவு சர்வமும் சகலமுமான மஹாபெரியவா.. நினைத்தால் கொடுத்து விடுவார் கேட்டால் நடத்தி விடுவார். அப்படிப்பட்ட அற்புதம் தான் இந்தப்பதிவில் நீங்கள் படிக்கப்போவது. நினைத்தேன் கேட்டேன் நடத்தி கொடுத்து விட்டார்.

குருவே சரணம் குரு பாதமே சரணம்

என் வாழ்வில் மஹாபெரியவா -026

பிரதி வியாழக்கிழமை தோறும்

மஹாபெரியவா அற்புதங்கள்

நான் ஒவ்வொரு நாளும் அனுபவப்பட்டாலும்

ஒவ்வொரு அற்புதமும்

என் இதயத்தை பூத்து மலரவைக்கிறது 

கேட்கவே வேண்டாம் நினைத்தாலே போதும்

மேகங்கள் அகன்று நீல வானம் தெரிந்து விடுகிறது

நீல் வானத்தில் மஹாபெரியவா தரிசனமும் கிடைத்து விடுகிறது

சென்ற வாரத்தில் நிகழ்ந்த அற்புதத்தை நீங்களும்   அறிவீர்கள். அந்த அற்புதத்தின் தொடர்ச்சியாக இந்த வாரம் பதிவில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் மற்றுமொரு அற்புதம் என் வாழ்க்கையில்  நடந்து விட்டது. அந்த அற்புதை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு அளவிட முடியாத சந்தோஷம். வாருங்கள் உங்களை நடந்த அற்புதத்துக்குள் அழைத்து செல்கிறேன்.
மஹாபெரியவா நான் அனுபவித்து கொண்டிருக்கும் அற்புதங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு எனக்கு கட்டளையிட்டார். நானும் மஹாபெரியவாளிடம் ஒரு விரலில் எத்தனை எழுதுவது. எனக்கு விரல் வலிக்கிறது பெரியவா என்றேன். அதற்கு மஹாபெரியவா உன்னுடைய பத்து விரல்களின் பலத்தையும் சக்தியையும் ஒரு விரலில் கொடுக்கிறேன். எழுதறயா என்று கேட்டார். நானும் சரி பெரியவா என்றேன்.
அன்றிலிருந்து இன்று வரை ஏறக்குறைய நாள் ஒன்றுக்கு ஒரு பதிவு என்ற கணக்கில் வெளியிட்டுக்கொண்டு இருக்கிறேன். விரலில் வலி இல்லை. உடல்தளர்ச்சி இல்லை. உடல் சோர்வு கிடையாது..நாள் ஒன்றுக்கு பதினேழு மணி நேரம் உழைத்தாலும் எப்பொழுதுமே அப்பொழுது மலர்ந்த தாமரையை போல ஒரு புத்துணர்ச்சியுடன் இருப்பேன். அந்த மலர்ச்சிதான் என் எழுத்துக்களில் பிரதிபலித்து உங்கள் உள்ளத்தின் கதவை தட்டிக்கொண்டிருக்கிறது.
ஒரு விரலில் பத்து விரல்களிளின் பலம்  மட்டுமல்ல. ஒவ்வொரு பதிவிலும் தெறித்து விழும் எழுத்துக்கள்,  நர்த்தனம் ஆடும் என் ஒரு விரல், உதயமாகும் கருத்துக்களுடன் எழுத்துக்களை தொடுத்து அதை ஒரு நறு மனம் கமழும் மாலையாக கட்டி  உங்கள் ஒவ்வொருவருக்கும் அணிவிக்கிறேனே.
எப்படி சாத்தியம். எல்லாம் மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச தெய்வம்   கொடுத்த இறை சக்தி தான். ஒவ்வொரு நாளும் முதல் நாள் நான் என்ன ஆர்வத்தோடும் ஆசையோடும் எழுத்து ஆரம்பித்தேனோ இன்று வரை அந்த ஆர்வம்  குறையாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த சமயத்தில் தான் நான் ஒரு பிரச்னையை எதிர்கொண்டேன்.
எல்லாம் தான் மஹாபெரியவா கொடுத்திருக்கிறார் இன்னும் என்னபிரச்னை.என்று  நீங்கள் நினைப்பது என்பதை என்னால் உணர முடிகிறது. உங்களுக்கே தெரியும் G.R. மாமா  பதிவு என்றாலே அதில் நிறையப்பக்கங்களும் வண்ணப்படங்களும் இடம் பெறும் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்த ஒன்றுதான். ஆத்மார்த்தமாக அந்த இடத்திற்கே உங்களை எல்லாம் அழைத்துச்செல்வேன் என்பது உங்களுக்கே தெரியும்.. நானும் கவலையே இல்லாமல் நிறைய கோவில் படங்களை பதிவில் இணைத்துக்கொண்டிருந்தேன்.
எனக்கு கணினியில் எதுவுமே தெரியாது. இந்த பதிவே மஹாபெரியவா அருளால் கற்றுக்ண்டு பணியை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.ஒரு நாள் இரவு நான் பதிவுகளை எழுதி கொண்டிருக்கிறேன். எழுதி முடித்த பதிவுகளை ஒரு முறை இணைய தளத்தில் போட்டுவிட்டு அதை வெளியிடாமல் நிறுத்தி விடுவேன்.
இது ஏதற்காக என்றால்  பதிவுகள் எல்லாம் சரியாக வந்திருக்கிறதா.  ஏதும் மாற்றம்  செய்ய வேண்டுமா என்று பார்ப்பேன். ஒரு பதிவை வெளியிடுவதற்கு முன் நானே ஒரு  வாசகனாக இருந்து பதிவுகளை படிப்பேன். அப்பொழுது எனக்குள் சில யோசனைகள் தோன்றும். சமயத்தில் மஹாபெரியவாளே என் விரலை பிடித்து கொண்டு பதிவை எழுதுவது எனக்கு தெரியும்.
அப்பொழுது வந்து   விழும் வார்த்தைகள் என் அகராதியில் இல்லாத வார்த்தைகளாக இருக்கும். அப்பொழுதெல்லாம் எழுதி முடித்தவுடன் நான் மயங்கி என் படுக்கையில் விழுந்து  விடுவேன்.  பிறகு நான் படித்து பார்த்தால் என்னால் நன்றாக உணர முடியும். சத்தியமாக அந்தப்பதிவை நான் எழுதவில்லை என்று.
இந்த சமயத்தில் இந்தமாதம் ஒன்பதாம் தேதி திங்கட்கிழமை   காலை சிவபார்வதியின் குரு பூஜை அற்புத பதிவை வெளியிட வேண்டும். சிவபார்வதியின் பதிவை எழுதி முடித்து சரிபார்த்து ஒன்பதாம்  தேதி திங்கட்கிழமை காலை வெளியிட வேண்டும். நான் பதிவை இறுதி செய்யும் தருணத்தில் எனக்கு நம்முடைய  இணையதளத்தில் இருந்து ஒரு செய்தி வருகிறது.
இணையத்தளம் கொடுத்த மூன்று G.B.யில் இரண்டரை G.B க்கு மேல் முடிந்து விட்டது. நீங்கள் மேலும்  பணம் கட்டி உங்களது இணையதளத்தின் இடத்தை விரிவு படுத்திக்கொள்ளலாம் என்று சொன்னது அந்த செய்தி…. எனக்கோ G.B என்றால் என்ன என்றும் தெரியாது.. அந்த இடத்தை எப்படி வாங்க வேண்டும் என்றும் தெரியாது.
எல்லோருக்கும் கூடவே நண்பர்களோ அல்லது வீட்டில் உள்ளவர்களோ  சந்தோஷத்தையும் துக்கங்களையும் பகிர்ந்து கொள்ள  இருப்பார்கள்.. என் வீட்டில் என் மகன் வெளி நாட்டில் வேலை பார்க்கிறான். என் மனைவி வேலைக்கு போகிறார்கள். அவர்களுக்கு பலவிதமான அலுவல் சார்ந்த முன்னுரிமைகள் இருக்கின்றன.. நான் அவர்களை தப்பு சொல்லவில்லை. அவர்கள் உழைப்பதால்தான் நான் நிம்மதியாக ஏழுதிக்கொண்டிருக்கிறேன் .
இந்த மாதிரி சமயங்களில் என்னுடைய ஒரே நண்பர் ஆசான் கடவுள் எல்லாமே  மஹாபெரியவா ஒருவரே. மஹாபெரியவாளை  அடுத்து  என்னுடைய நண்பர்கள் சொந்தங்கள் எல்லாமே நீங்கள் தானே..
நான் எப்பாவமே அழுது புலம்புவதற்கென்றே  இருப்பது  என்னை படைத்த மஹாபெரியவா பரமேஸ்வரன்  ஒருவர்தான்.. மஹாபெரியவாளிடம் சென்று பின்வருமாறு சொல்லி அழுதேன்.
“பெரியவா நீங்கள் எனக்கு கொடுத்த பணியில் ஏதாவது தொய்வு இருக்கிறதா. சொல்லுங்கள் பெரியவா. இன்றைக்கு எனக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. இணைய தளத்தில் பதிவுகள் வெளியிட இடம் தீர்ந்து விட்டது என்று. எனக்கு என்னசெய்வது என்று தெரியவில்லை. நாளைக்கு பதிவுகள் வெளியிட முடியுமா தெரியவில்லை. எனக்கு ஒரு வழி பண்ணுங்கள் பெரியவா என்று பிரார்த்தனை செய்தேன்.
மஹாபெரியவா எனக்கு பதில் கொடுத்தார்.
நீதான் எத்தனையோ பேருக்கு காத்தலே நாலு மணிக்கு என் முன்னாடி நின்னுண்டு பிரார்த்தனை பண்ணறாயே.. அவாளிடம் கேளு அவா உனக்கு சொல்லியும் தருவா. இடம் வங்கியும் தருவா என்றார்.
நான் திரும்பி கேட்டேன்  “பெரியவா நான் பிரார்த்தனை செய்வதற்காக அவாளிடம் இதை கேட்கலாமா. இதற்கு பணமும் கட்டவேண்டுமே பெரியவா என்றேன்.
மஹாபெரியவா சொன்னார். “நீ உனக்காக கேக்கல்லையேடா. எல்லாருக்குமாகத்தானே கேட்கிறே..  கேளு அவா இடம் வாங்கித்தருவா.
அப்பொழுது மஹாபெரியவாளிடம் கேட்டேன் “நான் நிறைய பேருக்கு பிரார்த்தனை செய்கிறேன். யாரிடம் கேட்பது பெரியவா என்றேன். கேளேண்டா ராகவன்  கிட்டே கேளு அனுஷா கிட்டே  கேளு அவா நிச்சயம் பண்ணுவா, நீ ஏதற்கும் கவலை படாதே. நீ பாட்டுக்கு எழுதிண்டு இரு. பாக்கியை நான் பார்த்துகிறேன் என்றார்.
இதன் பிறகு நான் ஏன் கவலைப்பட வேண்டும்.. பெரியவாளை சேவித்து விட்டு நான் என் அறைக்கு வந்து ராகவனை தொலை பேசியில் அழைத்தேன். விவரங்களை சொன்னேன். ராகவன் கவலை படாதீர்கள் மாமா. நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். நான் அவரிடம் என்னுடைய நிபந்தனைகளை சொன்னேன். ஒருவரே இந்த பணத்தை கட்டக்கூடாது.
குறைந்தது பத்து பேராவது சேர்ந்துதான் இந்த கைங்கர்யத்தை செய்ய வேண்டும். என்று  சொல்லி ஒரு ஆறு பேர் பெயரை கொடுத்தேன்.  நேரம் இருந்திருந்தால்  இணையதளத்திலேயே தெரியப்படுத்தி ஊர்கூடி தேர் இழுத்திருக்கலாம். ஆனால் நேரமில்லையே.
ஒரே இரவில் பணம் செலுத்தி இடம் வாங்க வேண்டும். இதனால் என்னால் மற்றவர்களை தொடர்பு கொள்ள நேரமில்லாமல் போய்விட்டது. மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் எல்லோருக்குமே மஹாபெரியவா வாய்ப்பு கொடுப்பார்.
அன்று இரவு ராகவன் நம்முடைய இணைய தளத்தில் விவரங்களை சேகரித்து  அன்று இரவே ஆன்  லைன் மூலம் பணம் செலுத்தி இணையதளத்தை கூடுதல் சலுகைகளோடு அதிக இடம் வாங்கிவிட்டார்.
மறு நாளில்  இருந்து  வழக்கமான பதிவுகள் தங்கு தடையில்லாமல் வெளி வந்து கொண்டிருக்கிறது., ஒன்றை கவனித்தீர்களா நான் வெளியில் செல்லவில்லை. எழுதுவதில் மட்டுமே என் கவனம் இருந்தது..மஹாபெரியவா சொன்னதும் அதுதான்.. இந்த அற்புதத்தில் ரகவானுடன் இணைந்து செயல் பட்ட மற்றுமொரு ஆத்மா அனுஷா.
இந்த இருவரும் சேர்ந்துதான் இந்த இணையதளத்தை மேலும் பயனுள்ள இன்னும் அழகு சேர்த்து நம்முடைய பயன்பாட்டிற்கு நிமிடம் ஒப்படைப்பார்கள். விரைவில் புதிய இணையத்தளம் பயன்பாட்டிற்கு வரும் தேதியை அறிவிக்கிறேன்,
இவர்கள் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமானவர்கள்தான். இவர்கள் யார் என்பதையும் மற்றும் யாரெல்லாம் இந்த கைங்கர்யத்திற்கு உதவினார்கள் என்பதையும் விரைவில் உங்களுக்கு  விரைவில் தெரியப்படுத்துவேன்.
நான் ஒவ்வொரு வினாடியும் மஹாபெரியவா அற்புதங்களை அனுபவித்து கொண்டிருந்தாலும் எல்லா அற்புதமே எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதை உணர்கிறேன். எனக்கு நான் ஒரு பெரிய யானை மேல் உட்கார்ந்திருப்பதை போல ஒரு தைரியத்தையும் மன உறுதியையும்  பெறுகிறேன்.
விரைவில் ராகவன் யார் அனுஷா யார் இந்த இணையதள கைங்கயத்தில் ஈடுபட்ட மற்ற ஆத்மாக்கள் புண்ணிய ஆத்மாக்கள் யார் யார் என்பதை ஒரு பதிவாக வெளியிடுகிறேன்.. விரைவில் நம்முடைய இணையத்தளம் புதிய கூடுதல் அழகுடன் பொலிவுடன் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்பொழுதான் புரிகிறது

என்னை ஆன்மீக பயணத்தில் ஈடுபடுத்தும் முன்பே

லௌகீக வாழ்க்கையில் இருந்து

என்னை வெளிய கொண்டுவந்தார்

ஆன்மீகத்திற்கு தேவையான

சரீர சுத்தம் ஆத்ம சுத்தம் பூர்ண சுத்தம்

என்று என்னை சுத்தப்படுத்தினார்

என் ஆன்மீக பயணம்

ஆன்மீக தேசிய நெடுஞ்சாலையில்

மஹாபெரியவா

திட்டமிட்டபடி சென்று கொண்டிருக்கிறது.

நீங்களும் மஹாபெரியவாளும்

என் இரண்டு கைகளை

பிடித்துக்கொண்டு கூட்டிசெல்கிறீர்கள்

போகும் இடமோ இன்னும் தூரம்

நிச்சயம் நாம் எல்லோருமே பயணத்தின் இலக்கை 

அடைந்து விடுவோம் என்பதில்

சந்தேகமில்லை

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

அடியாருக்கு அடியான் அடியேன்
காயத்ரி ராஜகோபால்
14 views