Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -028


என் வாழ்வில் மஹாபெரியவா -028

பிரதி வியாழக்கிழமை தோறும்

பொன்னையும் பொருளையும் பிரார்த்தனையாக வைக்காதீர்கள்
உள்ளதை கோவிலாக்குங்கள் அழையுங்கள்
மஹாபெரியவா உள்ளத்தில் கோவில் கொண்டு விடுவார
பிறகென்ன கேட்டதும் கிடைக்கும் கேட்காததும் கிடைக்கும்.

உங்கள் அனைவருக்குமே தெரியும். சென்ற வாரம்.நான் எழுதும் பதிவுகளை வெளியிட நம்முடைய இணைய தளத்தில் இடம் போதாமல் மறு நாள் காலை பதிவுகளை வெளியிட என்னசெய்வது. ஏதாவது அற்புதம் நடந்தாலன்றி என்னால் பதிவகளை வெளியிட முடியாது என்ற நிலை. .

நான் உடனே மஹாபெரியவாளிடம் என் நிலைமையை எடுத்துச்சொல்லி ஒரு தீர்வு வேண்டினேன். மஹாபெரியவா கொடுத்ததீர்வு உங்களுக்கெல்லாம் தெரியும்…மறு நாள் காலையில் வழக்கம் போல நான் என் பதிவுகளை வெளியிட்டேன் என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். இதற்கு பிறகுதான் ஒரு சிக்கலும் சிக்கலுக்கு ஒரு தீர்வையும் மஹாபெரியவா கொடுக்கிறார்..

நம்முடைய பதிவுகளை இன்னும் விஸ்தாரமாக வெளியிடவும் மஹாபெரியவா என்னும் இணைய தள கோவிலை நிர்மாணிக்க வேண்டும். தினந்தோறும் மஹாபெரியவா ஆற்றிய உரைகளில் இருந்து நாமெல்லாம் கேட்டு அனுபவிக்க உரையின் ஒரு பகுதியை வெளியிடவே வேண்டும். என்ற ஆசை வேறு.

இணைய தளத்தில் நீங்கள் அடியெடுத்து வைக்கும் பொழுதே மங்கள இசையும் மஹாபெரியவா உங்களுக்கு அட்சதை போட்டு ஆசிர்வாதம் செய்யும் வண்ணம் இந்த இணைய தளம் இருக்க வேண்டும் என்ற ஆவலில் நம்முடைய இப்போதைய இணைய தளத்திற்கு பணம் செலுத்தி வாங்கினோம்..

வாங்கிய புதிய இணையதளத்தில் இரண்டு நாட்கள் வேலை செய்தபிறகு தான் புரிந்தது.நாம் நினைத்த அளவிற்கு இந்த இணைய தளத்தில் விஸ்தரிப்பு செய்யும் வாய்ப்புக்கள் குறைவு.என்பது.

நான் ராகவன் அவர்களுக்கும் அனுஷா அவர்களுக்கும் சுதந்திரமாக செயல் பட சொல்லியிருந்தேன்.. என்னை பொறுத்த வரை கணினி துறையில் எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்தவர்கள் வேலை செய்யும் பொழுது அவர்கள் வேலையில் நான் தலையிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

அவர்கள் இருவரும் ஒரு முடிவு செய்தார்கள். இந்த இணையதளத்திற்கு செலுத்திய தொகையை திரும்ப பெற்று வேறு இணைய தளத்தில் பணம் செலுத்தி இடம் வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். ஆனால் இதிலும் ஒரு சிக்கல்.அவர்களிடம் இருந்து பணம் திரும்ப பெற வேண்டுமானால் குறைந்தது எழுபது நாட்களுக்கு மேலாக ஆகும். இது ஒரு எதிர்பாராத ஒரு பின்னடைவு.

இவ்வளவு நாட்கள் காத்திருந்தால் அது கஷ்டம் என்று நினைத்தார்கள்.கஷ்டம் என்னவென்றால் சென்ற மாதம் இருபத்தி மூன்றாம் தேதி மஹாபெரியவாளின் திரு நக்ஷத்திரமான அனுஷம் நாள்.. அன்றுதான் மஹாபெரியவா எனக்கிட்ட கட்டளையான சக்தி பீடங்கள் பதிவுகளை வெளியிட வேண்டும்.

இன்னும் மூன்று நாட்களே உள்ளே நிலையில் ராகவன் என்னை தொடர்பு கொண்டு எதிர் கொண்ட பிரச்சனைகளை எல்லாம் எனக்கு சொன்னார். நான் அவரிடம் கேட்டேன் இப்பொழுது என்ன செய்யலாம் என்று கேட்டேன். அவர் சொன்னார் “நானே திரும்பவும் பணத்தை கட்டிவிட்டு பிறகு எழுபது நாட்கள் கழித்து திரும்ப வரும் பணத்தை பெற்றுக்கொள்கிறேன். இப்படி செய்தால் குறிப்பிட்ட நாளில் உங்களுடைய சக்தி பீடம் பதிவும் வெளி வந்து விடும் என்றார்.

இதற்கு நான் சம்மதிக்கவில்லை. என்னால் பதிவை அன்றைய நாளில் வெயிட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. மஹாபெரியவா சொல்லியிருக்கிறார் ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும்.. தலைக்கு ஒரு ரூபாய் கொடுத்துதான் ஒரு கைங்கர்யத்தை செய்ய வேண்டும்.. ஆறு பேர் மட்டும் கொடுத்ததற்கே எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி இருக்கிறது. இனிமேலும் ஒருவரே செலவு செய்யக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

எனக்கும் உள்ளுக்குள் ஒரு ஏமாற்றம்தான். ரகவானுக்கும் அனுஷாவிற்கும் ஏமாற்றம் தான். எனக்கு மஹாபெரியவாளிடம் சொன்ன படி செய்யவில்லையே என்ற ஏமாற்றம். ராகவனுக்கு அனுஷாவிற்கும் G.R. மாமா ஏமாற்றம் அடைந்து விடுவாரே என்ற கவலை..

நான் மஹாபெரியவாளிடம் சென்று பின் வருமாறு முறையிட்டேன்:.

பெரியவா, நானும் எவ்வளவோ முயன்றேன் குறித்த தேதியில் சக்தி பீட பதிவுகள் வெளியிட முடியுமா தெரியவில்லை என்றேன். எனக்கு அனுக்கிரஹம் செய்தால் நிச்சயம் வெளியிடுவேன் பெரியவா. எனக்கு அனுக்கிரஹம் பண்ணுங்கள் பெரியவா என்று வேண்டிக்கொண்டேன்.

இதை கூட நான் எனக்காக மட்டும் கேட்கவில்லை. உங்களுடைய பக்தர்களின் ஆவலை பூர்த்தி செய்வதற்காகத்தான் கேட்கிறேன். அனுக்கிரஹம் பண்ணுங்கள் பெரியவா என்றேன்.

இந்த சமயத்தில் ராகவனும் அனுஷாவும் தனித்தனியே மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொண்டார்கள். “

பெரியவா GR மாமா உங்கள் திரு நக்ஷத்திர நாளன்று சக்தி பீடம் வெளிவர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இப்பொழுது எழுந்துள்ள சிக்கல் இன்னும் எழுபது நாட்களை தாண்டி விடும் போல் உள்ளது. மேலும் நாங்களே செலவு செய்து வேறொரு இணையதளத்தில் பணம் செலுத்தி இடம் வாங்கிவிடுகிறோம் என்று சொன்னால் மாமா இதற்கு சம்மதிக்க முடியாது என்கிறார்.

இனிமேல் ஒருவரே செலவு செய்து ஒரு மஹாபெரியவா கைங்கர்யத்தை செய்யக்கூடாது பலபேர் சேர்ந்து தான் செய்ய வேண்டும் என்கிறார். “பெரியவா நீங்கள்தான் இதற்கு ஒரு தீர்வு சொல்ல வேண்டும் என்று இருவரும் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொண்டனர்.

எது எப்படி இருந்தாலும் நான் சக்தி பீடங்களின் பதிவுகளை எழுத ஆரம்பித்து முதல் பதிவை முடித்து வைக்க வேண்டும். புதிய இணைய தளத்தில் பதிவுகளை வெளியிட முடிய வில்லை என்றாலும் தற்பொழுது இருக்கின்ற இணைய தளத்திலாவது இருபத்தி மூன்றாம் தேதி அனுஷம் நாளன்று வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து முதல் பதிவை எழுதி முடிக்கிறேன்.

என் பிரார்த்தனை இங்கே முடிவுற்றது. அனுஷாவின் பிரார்த்தனை அவளது வீட்டில் நடந்தது. ராகவன் பிரார்த்தனை அவர் வீட்டில் நடந்தது.

எங்கள் மூன்று பேருடைய பிரார்த்தனைகள் தனித்தனித்தனியே அரங்கேறி முடிந்தது. இந்த சமயத்தில் ராகவன் கைபேசியில் ஒரு செய்தி. திரும்ப கேட்ட பணம் ராகவன் கைக்கு கிடைக்க எழுபது நாட்களுக்கு மேல் ஆகும் என்ற நிலையில் உங்கள் பணம் உங்கள் வங்கியில் செலுத்தியாகி விட்டது.இந்த தொகை ராகவனின் வாங்கி கணக்கிலும் பிரதிபலித்தது.

.பிறகென்ன மஹாபெரியவா எங்கள் பிரார்த்தனைக்கு பதில் அளித்து விட்டார். எப்படி கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் அற்புதமோ அப்படி ஒரு அற்புதம் தான் இந்த அற்புதம்.

பரமேஸ்வரன் பிரார்த்தனைக்கு பதில் அளித்து விட்டார். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்து விட்டது. புதிய இணைய தளத்தில் பதிவை வெளியிட முடியவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் குறித்த நாள் இருபத்தி மூன்றாம் தேதி நம்முடைய இப்போதைய இணைய தளத்தில் வெளியிட்டுவிட்டேன்.

இதை ஆச்சரியம் என்பதா அற்புதம் என்பதா மஹாபெரியவா விஸ்வரூபம் என்பதா. ஒன்றை வேண்டுமானால் சொல்லலாம்

உள்ளத்தை கோவிலாக்கி
எண்ணத்தை புனிதமாக்கி
சொல்லையும் செயலையும் ஒன்றாக்கி
மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச சக்தியுடன்
கலந்து விட்டால்
சூரியன் மேற்கேயும் உதிக்கும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சக்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square