From the desk of GR

வணக்கத்துக்குரிய மஹாபெரியவா பக்தர்களே,
சில நாட்களுக்கு முன் என்னுடைய இல்லத்திற்கு மஹாபெரியவா விக்கிரஹம் வந்த அற்புதத்தை அனுபவித்தோம். இந்த அற்புதத்தின் தொடர்ச்சியாக பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா தன்னுடைய திருவிளையாடல்களை தொடங்கி விட்டார் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மிகிழ்ச்சி அடைகிறேன். என் இல்லத்திற்கு அடியெடுத்து வைத்த இருபத்தி நாலு மணி நேரத்தில் தன்னுடைய முதல் அற்புதத்தை ஆரம்பித்து விட்டார்.
இந்த அற்புதத்தை நாளை (27/11/17) திங்கட்கிழமை உங்களுடன் "என் வாழ்வில் மஹாபெரியவா " சிறப்பு பதிவு வாயிலாக பகிர்ந்து கொள்கிறேன் என்பதை இந்த அறிவிப்பு பதிவின் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. தவறாமல் இந்த அற்புதத்தை படித்து மஹாபெரியவாளின் விஸ்வரூபத்தை தரிசனம் காணுங்கள். உங்கள் எண்ணங்களை தவறாமல் பகிர்ந்து கொள்ளவும்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்