பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-030
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-030
பூனா கிருஷ்ணமூர்த்தி
Every Wednesday
கொள்கைகள் உங்கள் கையை விட்டு நழுவும் முன்
உங்கள் கொள்கையை அடையுங்கள்
வாழுங்கள் உங்களிடம் இருந்து
வாழ்க்கைவிடை பெறும் முன்
காணொளியை பற்றி சில வரிகள்.
நம்முடைய மன குமுறல்களை கேட்பாரா. நாம் பேசுவது அவர் காதில் விழுமா. அதுவும் மஹாபெரியவா சித்தி அடைந்த பிறகும் நாம் பேசுவது அவர் காதில் விழுமா. நாம் பேசுவதற்கு பதில் கொடுப்பாரா. இத்தனைக்கும் ஆணித்தரமான ஆதாரங்களுடன் புனே கிருஷ்ண மூர்த்தி மாமா தன்னுடைய அனுபவங்களை விவரிக்கிறார். காணொளியை காணுங்கள் மஹாபெரியவாளின் விஸ்வரூபத்தை காணுங்கள்.
கிருஷ்ணமூர்த்தி மாமா புனேவில் படிப்பை முடித்து பிறகு வேதம் படித்தார். மாமா தன்னுடைய இருபதாவது வயதில் கல்யாணம் பண்ணிக்கொண்டார். கல்யாணம் ஆன நாளில் இருந்து வேதரக்ஷணம் பற்றிய விஷயங்களை செய்ய ஆரம்பித்து விட்டார். தன்னுடைய வாழ்க்கைக்கு பொருள் ஈட்ட வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் வேதம் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.
முதல் முதலாக கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கணபதி அக்ராஹாரத்தில் தான் மஹாபெரியவளை தரிசினம் செய்தார், இன்று மாமாவிற்கு தொன்னூற்று மூன்று வயது ஆனாலும் மஹாபெரியவா சொல்லிக்கொடுத்த வாழ்க்கை நெறி முறைகளை எல்லா குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஒரு வேத பாடசாலையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.
மஹாபெரியவா நம்முடைய உருகும் பக்திக்கும் பிரார்த்தனைகளுக்கும் பதில் அளித்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரம் புனே கிருஷ்ணமூர்த்தி மாமா. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை மாமா நினைவு கூறுகிறார். காணொளியை காணுங்கள் மஹாபெரியவாளின் விஸ்வரூபத்தை காணுங்கள்.
மாமாவிற்கு இப்பொழுது தொன்னூறு வயது மேல் ஆகிறது. தன்னுடைய வயதான மனைவி. உடல் நிலையும் சரியில்லை..வெளியில் மற்றவர்கள் போல் செல்ல முடியாது. காது சரியாக கேட்பதில்லை.ஒரு சத் சங்கம் நடத்தி வருகிறார். ஒரு வேத பாடசாலையும் நடத்தி வருகிறார்.
மஹாபெரியவா சித்தி அடைவதற்கு முன் சொன்னாராம் நீ பார்ப்பவர்களை எல்லாம் நன்னா இருன்னு ஆசீர்வாதம் பண்ணு. நான் உன்னை நன்றாக வைக்கிறேன் என்று.. வேதத்திற்காக பாடுபடு என்றாராம்.
ஒரு முறை மாமாவிற்கு பணக்கஷ்டம் வந்து விட்டது. உடனே மஹாபெரியவா அதிஷ்டானத்திற்கு போய் மஹாபெரியவா முன் அமர்ந்து த்யானம் செய்தாராம். பிறகு பின் வருமாறு மஹாபெரியவாளிடம் முறையிட்டாராம்.
"நீங்கள் பாட்டுக்கு சத்சங்கம் நடத்து. வேதத்திற்கு பாடுபடு. நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னீர்கள். இன்றைக்கு என்னிடம் பணம் இல்லை. என் மனைவிக்கும் உடல் நிலை சரியில்லை. நான் கடிதம் போட வேண்டியர்வர்களுக்கு எல்லாம் கடிதம் போடுகிறேன். தபால் செலவு நிறைய ஆகிறது என்றாராம்.
மஹாபெரியவாளுக்கு மாமா சொன்னது கேட்டிருக்குமா. கேட்டிருந்தாலும் மஹாபெரியவா பணம் கொடுத்து விட்டாரா. என்ற கேள்வி உங்களுக்குள் எழுவது எனக்கு கேட்கிறது.
மஹாபெரியவா ஒரு வித்தியாசமான முறையில் அடுத்த நாளே பணம் கொடுத்தாராம். மாமாவின் கண்கள் குளமாகின. காணொளியை காணுங்கள். மாமாவிற்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை எப்படி மாமாவிற்கு பணம் கொடுக்க வைத்தார் என்பதை கேட்கும் பொழுது நம் கண்கள் குளமாவது மட்டுமல்ல.நம்முடைய ஆத்தமாவும் சேர்ந்து அழுவதை நீங்களும் அனுபவிப்பீர்கள்.
நீங்கள் இந்த காணொளி காணுவதன் மூலம் தெரிந்து கொள்வது:
உங்கள் உருகும் பக்தியும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் மஹாபெரியவா எப்படி அனுகிரஹிக்கிறார் என்பதை அனுபவிப்பீர்கள்.
எண்ணங்களில் ஒரு புனிதமும் பேச்சில் சுயநலமின்மையும் செயல்களில் ஒரு இறைத்தன்மையும் இருந்தால் மஹாபெரியவா உங்களிடமும் பேசுவார்.
மஹாபெரியவா இறை சாம்ராஜ்யத்தில் பணத்துக்கும் பகட்டுக்கும் இடமில்லை என்பதை உணர்வீர்கள்.
மஹாபெரியவா அனுகிரஹமும் ஆசிர்வாதமும் இருந்தால் ஆரோக்கியத்திற்கு வயது ஒரு பொருட்டே இல்லை.
உங்கள் பிரார்த்தனைகள் மிகவும் அவசர அழைப்பாக இருப்பின் மஹாபெரியவா உங்கள் பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் பதில் அளிப்பார்.
பரமேஸ்வரனையும் மனிதனையும் இணைக்கும்
பாலம் எனது தெரியுமா
எண்ணங்களில் வெண்மையின் புனிதமும்
பேச்சில் உண்மையான அக்கறையும்
செயல்களில் அப்பழுக்கற்ற நோக்கமும்
இருந்தால் நீங்கள் மஹாபெரியவாளை
நாடிப்போக வேண்டாம்
மஹாபெரியவா உங்களை நாடி வருவார்
புனே கிருஷ்ணமூர்த்தி மாமாவும்
அப்படிப்பட்ட ஒரு ஆத்மா தான்
நாமும் முயல்வோம் முடியாதது எதுவுமில்லை
Play Duration: 16 minitues 19 seconds
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்