Showers of Miracles I n my life by Mahaperiyava -36- Part-II (Tamil Version)
என் வாழ்வில் மஹாபெரியவா -036 – பாகம்—II
பிரதி வியாழக்கிழமை தோறும்

வாழ்கை என்னும் பயணத்தில்
பாதி தூரம் கடக்கும் பொழுது
மீதி தூரத்தை கடக்க
வாழ்கை பயணம் இனிதே முடியும்
இது என் அனுபவ மொழி
அற்புதத்தின் துவக்கம்:
அப்பொழுதெல்லாம் நன் காலையில் எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பேன். காபியை குடித்து விட்டு அன்றைய செய்தித்தாளை படித்து விட்டு தொலை காட்சியில் மூழ்கி விடுவேன், பிறகு மதியம் குளித்து விட்டு மதித்த உணவை முடித்துவிட்டு படுக்க சென்று விடுவேன்.
இந்த நிலையில் தான் மஹாபெரியவா எனக்கு செய்த பல அற்புத அனுபவங்களை உங்களுடன் இன்றும் பகிர்ந்து கொண்டு வருகிறேன். நான் நடந்ததில் இருந்து எல்லாவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன் .
இனிமேல் மஹாபெரியவா என்னை எப்படி எல்லாம் மாற்றினார் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.. அந்த அற்புதங்களை
சரீர சுத்தி அற்புதங்கள்
ஆத்மசுத்தி அற்புதங்கள்
பூர்ண சுத்தி அற்புதங்கள்
என்று பிரித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். அதற்கு பிறகு என்னை எப்படி ஒரு கையால் சமைக்கவும் பரிமாறவும் அற்புதங்கள் செய்து என்னை மாற்றினார் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.
அதற்கு பிறகு எனக்கு நேர்ந்த சமுதாய எதிர்ப்புகளை எப்படி மஹாபெரியவா என்னை எதிர்கொள்ள வைத்தார் என்பதையும் மற்ற அற்புதங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த பதிவில் இருந்து சரீர சுத்தி அற்புதங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.
சரீர சுத்தி அற்புதங்கள்:
சரீர சுத்தி என்பது என்னை உடல் ரீதியாக மஹாபெரியவா தயார் செய்தார். இதில் பெரும்பாலும் என்னுடைய அறுபது வயது உணவு பழக்க வழக்கங்களை மாற்றினார். அதுவும் ஒவ்வொரு உணவு பழக்கத்தையும் ஒரே இரவில் மாற்றிக்காட்டி அற்புதங்கள் செய்தார். இதில் நான் கொஞ்சம் கஷ்டப்பட்டேன் என்றேசொல்ல வேண்டும். அதுவும் ஒரே ஒரு இரவுதான் கஷ்டம்..
மேலே குறிப்பிட்ட அந்த நாளில் இரவு பத்து மணிக்கு மஹாபெரியவா என்னை அழைத்து ஏண்டா பக்கவாதம் வந்தால் காலை எட்டு மணிக்குத்தான் எழுந்திருக்கணுமா. சீக்கிரம் எழுந்திரு. மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய். நான் சொல்வதை கேள். உன்னை ஒரு நல்ல ஆத்மாவாக மாற்றி காட்டுகிறேன் என்று என்னிடம் சொன்னார்.
நானும் சரியென்று சொல்லி அதற்கு பிறகு எனக்கு நடந்தஒவ்வொரு அற்புதத்தையும் உங்களிடம் இது வரை பகிர்ந்து கொண்டேன். அந்த அற்புதங்களின் தொடர்ச்சியாக அதே இரவில் தொடங்கிய மற்ற அற்புதங்களை உங்களிடம் இந்த தொடரில் இருந்து பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.
உணவுக்கட்டுப்பாடு:
சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்தது இனிப்பு வகைகள். குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும் என்பது உங்களுக்கே தெரியும். என்னுடைய நாற்பதாவது வயது வரை நான் கட்டுப்பாடு இல்லாமல் இனிப்பு வகைகளை சாப்பிட்டு வந்தேன். தயிர் சாதத்திற்கு கூட இனிப்பை தொட்டுக்கொண்டுதான் சாப்பிடுவேன்
.
நாற்பதாவது வயதுக்கு பிறகு எனக்கு எனக்கு சர்க்கரை வியாதி இருப்பதை கண்டுபிடித்து விட்டு இனிப்பு வகைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இருந்தாலும் நான் இனிப்பு வகைகள் சாப்பிடுவது குறைந்தபாடில்லை. என்னால் இனிப்பு வகைகள் இருக்க சாப்பிடாமல் முடியவில்லை.சுமார் அறுபது வயது வரை ஏற்பட்ட பழக்கமில்லையா. என்னால் விட முடியவில்லை.
என்னுடைய சரீர சுத்தி வழக்கமாக இரவு படுக்கப்போகும் முன் தான் ஆரம்பமாகும். மஹாபெரியவாளுக்கும் எனக்கும் நடந்த உரையாடலை சம்பாஷணை வடிவிலேயே உங்களுக்கு தருகிறேன்.
அன்று இரவு நான் படுக்க போவதற்கு முன் மஹாபெரியவா என்னிடம் சொல்கிறார்
பெரியவா: "ஏண்டா அறுபது வருடமாக சர்க்கரையால் ஆன எல்லாப்பண்டங்களையும் சாப்பிடறே.. போறுமே. இன்னும் இனிப்பு சாப்பிடணுமா. விட்டுடேன். வேண்டாம் உனக்கும் வயதாகிறது என்றார்.
G.R. நானும் சரி பெரியவா கொஞ்சம் கொஞ்சமா விட்டுடறேன் என்றேன்..அதற்கு மஹாபெரியவா நீ என்னிக்கு கொஞ்சம் கொஞ்சமா விடறது. நாளைக்கு காலையில் இருந்து நீ இனிமேல் உன் வாழ்க்கையில் இனிப்பை தொடக்கூடாது என்றார்.
G.R.எனக்கு இதயமே நின்று விடும் போல் இருந்தது. அறுபது வருட பழக்கமில்லையா. பெரியவாளிடம் கெஞ்சி கெஞ்சி கேட்டேன். பெரியவா கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் நான் என்னை சர்க்கரை சாப்பிடுவதை விடுவதற்கு என்னை மனதளவில் தயார் செய்து கொள்கிறேன் என்றேன்.
பெரியவா: நீ சர்கரையையை விடணுமுன்னு மட்டும் நினை. விட வைப்பது என் வேலை என்றார்.
G.R: நான் மௌனமாகவே இருந்தேன்.என்ன சொல்வது என்று தெரியாமல்.
பெரியவா: சொல்லுடா நீ என்ன சொல்லறே.
G.R: நான் யோசித்துக்கொண்டே இருந்தேன்.
பெரியவா: இந்த முறை மஹாபெரியவா குரல் கொஞ்சம் கடுமையாகவே இருந்தது.. நீ நாளையில் இருந்து இனிப்பு வகைகளை தொடக்கூடாது. உன்னை தொடவும் விட மாட்டேன்.. நீயே விட்டு விடு. நான் விடவைத்தால் உனக்கு வலிக்கும் என்றார்.
G.R: நான் பயந்து விட்டேன். நானும் சரி பெரியவா நாளையில் இருந்து சர்க்கரையால் செய்த எதையும் தொட மாட்டேன் என்று சொன்னேன்.
பெரியவா: பெரியவா சொன்னார் சரி போய் படுத்துக்கோ என்றார்
G.R: இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம். காபிக்கு சர்க்கரைக்கு பதிலாக ஸ்க்ரீன் மாத்திரைகள் போட்டுக்கொள்ளலாமா என்று கேட்டேன்.
பெரியவா: (மஹாபெரியவா கோபமாக சொன்னார்). உன் நாக்கு சர்க்கரையை மறந்து விட்டது. இந்த சரீர சுத்தி முடிந்ததும் நீ சொன்னதை உன் மனசு கேட்கும் . இத்தனை நாளும் உன் மனசு சொன்னதை நீ கேட்டாய்.. என்ன கண்டாய்? உன் வாழ்க்கையில். இனிமேல் நீ சொன்னதை உன் மனது கேட்கட்டும். அதற்கு நான் உனக்கு கூடவே இருந்து அனுக்கிரஹம் பண்ணறேன் என்றார்.
G.R: அப்பொழுதான் எனக் ஒன்று புரிந்தது. எப்பொழுது மனசு சொன்னதை நாம் கேட்கிறோமோ அப்பொழுதே நம்முடைய வாழ்கை திசை மாற ஆரம்பித்து விடும்.. தலை விரித்து ஆட்டமாய் ஆடி நம்மை அழிக்கும் மனசை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால் வாழ்கை நம் கட்டுப்பாட்டில் இருக்கும். இது படிக்கும் உங்களுக்கும் சேர்த்திதான்.
G.R: நான் இறுதியாக மஹாபெரியவாளிடம் சொல்லிவிட்டேன். நாளையில் இருந்து என் வாழ்க்கையில் இனிப்பு என்பது கிடையாது என்றேன். எனக்குள் ஒரு வைராக்கியம் வருவதை உணர்ந்தேன்.
அன்றிரவு படுக்கச்சென்று விட்டேன். ஆனால் தூக்கம் வராமல் தவித்தேன்.இருந்தாலும் என் வாழ்க்கையில் வைராக்கியம் என்றால் என்ன என்பதை முதல் முதலாக அனுபவிக்க போகிறேன்.அன்று இரவு நன்றாக உறங்கினேன். உறக்கத்தில் கனவும் வந்தது. கனவு தரிசன அனுபவங்களை தனியாக எழுதுகிறேன்.
மறு நாள் காலையில் எழுந்திருந்தேன். முதலில் நான் செய்தது என் வீட்டில் உள்ளவர்களிடமும் வெளி நாட்டில் இருந்த வந்திருந்த என் மனைவியின் சொந்தங்களிடம் சொன்னேன். இன்று முதல் நான் இனிப்பை விட்டுவிட்டேன்.. என் வாழ்க்கையில் இனிமேல் சர்க்கரையால் ஆன எந்த பண்டங்களையும் தொட மாட்டேன் என்று சொன்னேன்.
இதை கேட்ட எல்லோரும் சிரித்தார்கள். ஏன் தெரியுமா என்னுடைய வைராக்கியம் என்பது ஒரு மணி நேரம் தான். அதனால் தான் சிரித்தார்கள். ஆனால் எனக்குள் ஒரு நல்ல மாற்றத்தை உணர்ந்தேன். எனக்கு தெரிகிறது என் வாழ்நாளில் இனி சர்கரையையை தொடமாட்டேன் என்பது
. ஆனால் மற்றவர்களுக்கு எப்படி புரிய வைப்பது. நான் என்னுடைய அறைக்கு சென்று விட்டேன்.
என் மனசு அழுதது.ஒரு அறுபது வயதான ஒருவரை இப்படி சிரித்து கேலி செய்கிறார்களே என்று. எனக்கு இந்த வைராக்கியம் வந்தவுடன் மற்றவர்கள் செய்யும் அவமானமும் எனக்கு உரைக்க ஆரம்பித்தது. மஹாபெரியவாளிடம் சொன்னேன்.
G.R: "பெரியவா என்னை இப்படி சிரித்து அவமான படுத்துகிறார்கள். அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.
பெரியவா: ஆமாண்டா அவா உன்னை அறுபது வருஷமா பாத்துண்டு இருக்கா. ஒரு ராத்திரிலே அவா உன்னை புரிஞ்சுக்கனுன்னு எதிர்பார்க்காதே..உன்னுடைய வைராகியத்தை மட்டும் அவாளுக்கு காட்டிண்டு இரு. சர்கரையையை தொடாதே. உன்னை அவா புரிஞ்சுப்பா என்றார்.
நானும் சரி பெரியவா என்று முகத்தை அலம்பிக்கொண்டு அன்றைய வேலைகளை ஆரம்பித்தேன்.
அன்று எனக்கு ஒரு சோதனையான கால கட்டம். என்னுடைய வீட்டிற்கு வெளிநாட்டில் இருந்து வந்த உறவினர்கள் இனிப்பு வகை பண்டங்களை நாங்கள் சாப்பிடும் டைனிங் டேபிள் மேலப்பரப்பின் வைத்திருந்தார்கள். அன்றுதான் வைராக்கியம் என்றால் என்ன என்பதை உணர்ந்தேன்.
நான் அந்த டைனிங் டேபிளை கடந்து போகிறேன். அங்கே பரப்பி இருக்கும் இனிப்புகள் என் கண்ணில் படவில்லை.அதற்கும் எனக்கும் துளியும் சம்பந்தம் இல்லாதது போல உணர்ந்தேன். மஹாபெரியவா எனக்குள் செலுத்திய வைராக்கியம் என்னும் புதிய குணம் வெளிப்பட ஆரம்பித்தது.
சொந்தங்கள் வெளியில் சென்று இரவில் வந்தார்கள். டைனிங் டேபிளை பார்த்தார்கள். அவர்கள் வைத்துவிட்டுப்போன இனிப்பு வகைகள் எல்லாம் வைத்தது வைத்தது போலவே இருந்தது.
அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஒரு வேளை வைராக்கியம் வந்து விட்டதோ... ஒரு இனிப்பை கூட தொடவில்லையே இது எப்படி சாத்தியம். அதுவும் யாரும் இல்லாத நேரத்தில் கூட ஒரு இனிப்பை கூட எடுக்க வில்லை என்று ஆச்சரியப்பட்டார்கள். என் நாக்கு இனிப்பை மறந்து விட்டது மட்டுமல்ல.இனிப்பை நிராகரிக்கவும் செய்தது.
என் மனசு என் கட்டுப்பாட்டிற்குள் வருவதை உணர்ந்தேன் அவர்களுக்குள் மேலும் பேசிக்கொண்டார்கள். இந்த வைராக்கியம் எல்லாம் இன்னும் பத்து நாளைக்குத்தான்.. அதற்கு பிறகு பழைய குருடி கதவை திறடி கதை தான்.என்றார்கள். எனக்கு மிகவும் ஆவணமாகவும் வெறுப்பாகவும் இருந்தது. வாழ்க்கையில் ஒரு மனிதன் மாறவே கூடாதா.
ஆனால் எந்த சூழ் நிலையிலும் மனக்கவலை வந்தாலும் கவலை கொண்ட மனதில் மஹாபெரியவாளை நிரப்பி விடுவேன்.கவலையும் வெறுப்பும் பறந்து விடும். இன்று நான் சக்கரையை விட்டு மூன்று வருடங்கள் ஆகின்றன,
அன்று பழித்தவர்கள் எல்லாம் இன்று என் மேல் ஒரு தனிப்பட்ட மரியாதையை காண்பிக்கிறார்கள்.. வேறு என்ன வேண்டும்.. எல்லா அவமானங்களுக்கும் மன காயங்களுக்கும் காலம் ஒன்றுதான் மருந்து.. இதை நன்கு உணர்ந்து விட்டேன்.
அறுபது வருடமாக வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாமல் வாழ்ந்தேன். என் தவறை உணர்ந்து விட்ட நிலையில் எனக்கே என்னை பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் தான் ஒரு நாள் மாலை சூரியன் அஸ்தமனமாகும் வேளையில் மஹாபெரியவா என்னை காஞ்சிக்கு அழைத்து ஆட்கொண்ட அற்புதம் உங்களுக்கெல்லாம் தெரியும். மஹாபெரியவா அன்று இரவு என்னை அழைத்திருக்காவிட்டால் என்று நான் எங்கு திரும்பவும் பிறந்திருப்பேன் என்று தெரியாது.
மஹாபெரியவா கொடுத்த மறு ஜென்மம்
ஒன்று மட்டும் தெரிந்தது
ஒரு ஜென்மம் முடிந்து
இன்னொரு ஜென்மத்தை கொடுத்து
ஒரு இறை காரணத்திற்காக
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
காரணத்திற்கு காலம் பதில் சொல்லட்டும்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்