top of page
Featured Posts

திவ்ய தேச தரிசனம்-003 தஞ்சை மாமணிக்கோவில்


என்னை ஆளும் நாதன் மஹாபெரியவா

திவ்ய தேச தரிசனம்-003

தஞ்சை மாமணிக்கோவில்

:

பெருமாள்:நீல மேகப்பெருமாள் தாயார் : செங்கமலவல்லி தாயார்

ஸ்வாமி: நீல மேகர்- வீர நரசிம்மர்- மணிக்குன்றர்

அம்பாள் : செங்கமலவல்லி- அம்புஜவல்லி- தஞ்சை நாயகி

மூர்த்தி : சக்கரத்தாழ்வார்

  • நீலமேகப்பெருமாள் கோவிலில் அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.அம்பாள்: செங்கமலவல்லி தாயார்

  • அருள்மிகு மணிக்குன்ற பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார் தாயார் அம்புஜவல்லி அருள் பாலிக்கிறார்.

  • வீரநரசிம்மப்பெருமாள் கோவிலில் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் வீரநரசிங்கபெருமாள் நரசிம்மன் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார். தாயார் தஞ்சை நாயகி கூடவே பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.

  • சிங்கப்பெருமாள் கோவில் வீர நரசிம்மர் முன் மண்டபத்தில் யோக நரசிம்மர், நீலமேகப்பெருமாள் கோவில் ப்ரஹரத்தில் இருக்கும் லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர் தாயார் சன்னதியில் உள்ள தூணில் கம்பத்தடி யோக நரசிம்மர் என இந்த திவ்ய தேசத்தில் பஞ்ச நரசிம்ஹர்கள் அருள் பாலிக்கின்றனர்.

  • வீர நரசிம்மர் கோவில் சக்கரத்தில் பெருமாளே சக்கரத்தாழவராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.சக்கரத்தழுவார் வலது புறம் இருக்கும் யானையின் மீது கை வைத்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்பலிக்கிறார்

  • இந்த அமைப்பு யானை வடிவம் எடுத்த தஞ்சகாசுரனையும் அவன் திருந்தி பெருமாளை வணங்குவது போலவும் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

  • இவரின் பின் புறத்தில் நரசிம்மர் யோக பட்டையுடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

  • நரசிம்மரின் இரு புறமும் ஹிரண்யகசிபு பிரஹலாதன் இருக்கின்றனர்.இங்கு சக்கரத்தாழ்வாரின் வடிவத்தில் பெருமாளை சேவிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.

தீர்த்தம் : அமிர்த தீர்த்தம் கன்னிகா புஷ்காரனி வெண்ணாறு , ராம தீர்த்தம் சூர்ய புஷ்கரணி

தல விருக்ஷம்: மகிழ மரம்

தல சிறப்பு: பெருமாளின் நூற்றி எட்டு வைஷ்ணவ திருத்தலங்களில் இது மூன்றாவது ஸ்தலமாகும்.இந்தக்கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.

மங்களாசாசனம் : நம்மழவார் பூத்ததழுவார் திருமங்கையாழிவார் இவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.

(அழவார் என்னும் வார்த்தை நான் உபயோக படுத்தும் மொழிமாற்றியில் சரியான முறையில் வரவில்லை.ஆகவே பிழை என்று தெரிந்தும் அப்படியே பதிவில் வெளியாகி இருக்கிறது.பிழைக்கு பொருத்தருளவும்).

ஸ்தல வரலாறு : திரேதா யுகத்தில் தஞ்சகன் தாடகன் தண்டகன் என்ற மூன்று அசுரர்கள் இருந்தனர். இவர்கள் மூவரும் தீவிரக தவம் செய்து சிவபெருமானால் தங்களுக்கு எந்த தீங்கும் நேராத வண்ணம் வரம் பெற்றனர். அகங்காரத்தின் உச்சத்தில் பராசர முனிவர் வெண்ணாற்றங்கரையில் குடில் அமைத்து அவருடைய தவ வாழ்க்கையை கழித்துக்கொண்டிருந்தார்.

மூன்று அசுரர்களும் இவருடைய அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு செய்தனர்.. பராசர முனிவரும் பெருமாளை நோக்கி தவம் செய்து பெருமாளும் காட்சி தரவே பெருமாளிடம் தன்னுடைய இன்னல்களை கூறினார்.

பெருமாளும் தன்னுடைய கருடாழ்வருடன் இந்த மூன்று அசுரர்களை அழிக்க வந்தார். இதில் தஞ்சகன் யானையாக மாறி பெருமாளுடன் போரிட்டான். பெருமாளும் நரசிம்ம யழியாக தோன்றி தஞ்சகன் என்னும் யானையுடன் போரிட்டு அழித்தார்.இந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் இந்த ஊருக்கு தஞ்சகன் என்று பெயர் வந்தது. பின்னாளில் அது மருவி தஞ்சாவூர் என்ற பெயர் பெற்றது.

இந்த கோவில் தஞ்சை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் உள்ளது. இங்கு தங்கிக்கொண்டு அருகிலிருக்கும் திவ்ய தேசங்களுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களுக்கும் சென்று தரிசனம் கண்டும் நம்முடைய வரலாற்று சிறப்பு மிக்க கலை நயங்களையும் கண்டு வாருங்கள். மறக்காமல் உங்கள் குழந்தைகளுக்கும் காண்பியுங்கள் சொல்லிக்கொடுங்கள்.

உங்கள் பயணம் இனிதே அமையவும் உங்கள் பிரார்த்தைகள் அணைத்தும் நிறைவேறி வளமான வாழ்வு வாழ நான் உங்களுக்காக மஹாபெரியவாளை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க்கையில் பயம் அகலட்டும் மனா நிம்மதி உங்களுக்கு சாஸ்வதமாக இருக்கட்டும்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page