Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-032


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-032

பிரதி புதன்கிழமை தோறும்

குமரேசன் மாமா தம்பதியினர்

இந்த வாரத்திலிருந்து மஹாபெரியவளுக்கு கைங்கர்யம் செய்துகொண்டிருந்த இப்பொழுதும் செய்துகொண்டிருகிற புண்ணிய ஆத்மாக்களை பற்றி எழுத முடிவு செய்தேன். இந்த முயற்சி மஹாபெரியவளின் உத்தரவு.

காலை நான் பூஜையில் இருந்தபோது பின்வருமாறு மஹாபெரியவா உத்தரவிட்டார்.

ஏன்டா நீ எல்லா பக்தர்களின் அனுபவங்களையும் எழுதிண்டு இருக்கே. எனக்கு கைங்கர்யம் பண்ண ஆத்மாக்களை பற்றி எப்போ எழுதப்போறே. நான் சொன்னேன் நீங்கள் உத்தரவு கொடுத்தால் இப்பவே ஆரம்பிச்சுடறேன் பெரியவா.என்று. இன்னிக்கே ஆரம்பிடா. என்று சொன்னவுடன் இன்றே ஆரம்பித்து விட்டேன்.

முதல் அணுக்கத்தொண்டர் குமரேசன் மாமா. அன்றிலிருந்து இன்றுவரை ஸ்தூலத்திலிருந்து சூஷ்மம்வரை மாமா அவருடைய இறைப்பணியை தொய்வில்லாமல் மனமுருகி செய்து வருகிறார். மாமாவின் எண்ணங்கள்செயல்கள் எல்லாவற்றிலும் மஹாபெரியவாதான்.

  • பரமேஸ்வரன் அனுகிரஹித்தாலோ கனவில் தரிசனம் கொடுத்தாலோ அல்லது நம் பிரார்த்தனைக்கு செவி சாய்த்தாலோ நமக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்து விட்டதாக சந்தோஷப்படுவோம்.

  • பூர்வ ஜென்மத்தில் என்ன புண்ணியம் பன்னினோமோ என்று நமக்கு நாமே மார்தட்டிக்கொள்வோம். நினைத்துப்பாருங்கள் அந்த பரமேஸ்வரனுடையே தூங்கி சாப்பிட்டு வாழ்ந்து கைங்கர்யம் செய்தே வாழ்க்கையை கழித்துக்கொண்டிருக்கும் குமரேசன் மாமாவும் மாமியும் எத்தனை புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்.

  • வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தும் ஒரு முறை கூட தரிசனம் செய்யவில்லையே என்னும் ஏக்கமே இனிமேல் உங்களுக்கு வேண்டாம். மஹாபெரியவளுக்கு அன்று தொடங்கி இன்று வரை கைங்கர்யம் செய்யும் அணுக்கத்தொண்டர்களில் ஒருவரான குமரேசன் மாமாவை ஒரு முறை காஞ்சி சென்று இரு பெரியவாளையும் சேவித்து குமரேசன் மாமாவையும் பார்த்துவிட்டு மஹாபெரியவளின் அதிஷ்டானத்தில் அமைதியாக அமர்ந்து ஒரு மணி நேரம் த்யானம் செய்தால் உங்கள் மனதுக்கு அமைதி மட்டுமில்லை உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வும் கிடைக்கும் என்பது நிச்சயம்.

என்ன யோசனை.

கிளம்புங்கள் காஞ்சிக்கு

எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு

தீர்வை காணுங்கள்

வாருங்கள் குமரேசன் மாமா தான் அனுபவித்த அற்புத அனுபவங்களை உங்களுடன் காணொலி மூலம் பகிர்ந்துகொள்ள காத்திருக்கிறார்.இந்த காணொளியிலிருந்து ஒரு சில அற்புதங்களை உங்களுக்காக எழுதுகிறேன்.

காணுங்கள் கண்டு மஹாபெரியவா விஸ்வரூப தரிசனம் காணுங்கள்.

அற்புதம்-1

கோவில் கோபுரத்தின் உச்சியிலிருந்து

கீழே விழுந்தால் என்ன ஆகும் தெரியுமா

குமரேசன் மாமா விழுந்தார்

மேலே படியுங்கள் மீதியை காணொளியில் காணுங்கள்

ஒரு முறை மஹாபெரியவா காஞ்சி பிரும்மபுரீஸ்வரர் கோவிலின் கோபுரத்தின் மேல் ஏறி கார்த்திகை தீபத்திற்கு விளக்கு ஏற்றச்சொன்னார். மாமாவும் மேலே ஏறி தீபம் ஏற்றி விட்டார். கீழே இறங்கும் பொழுது கால் இடறி கோபுரத்தின் உச்சிலிருந்து தலை கீழாக விழும் பொழுது பரமேஸ்வரன் எப்படி மாமாவை தாங்கி பிடித்து காப்பாற்றினார் என்பது அதிசயத்திலும் அதிசயம். நீங்களும் காணொளியை பார்த்து அதிசியுங்கள்.

அற்புதம்-2

முன் பின் தெரியாதவர்களுக்கு

அவர்கள் இறந்து விட்டால்

நீங்கள் மோக்ஷ தீபம் ஏற்றுவீர்களா

மஹாபெரியவா உத்தரவின் பேரில்

குமரேசன் மாமா எத்தனை ஆயிரம்

மோக்க்ஷ தீபம் ஏற்றினார்

காணொளியை பார்த்து நீங்களும் அதிசியுங்கள்

இன்னும் எத்தனையோ அடுக்கிக்கொண்டே போகலாம். பார்வை இழந்த அக்காவிற்கு பார்வை கிடைத்த அதிசயம், சிறிய குழந்தைக்கு தலையில் கரப்பான் என்று தோல் வியாதி வந்து ஒரு தேங்காயில் எப்படி சரியானது, குழந்தை பருவம் கூட கடக்காத குமரேசன் மாமாவுக்கும் மாமிக்கும் எப்படி கன்னிகாதானம் நடந்தது என்பதை எல்லாம் இந்த காணொளியில் கண்டு மஹாபெரியவளின் தரிசனத்தை அனுபவியுங்கள்

கீழே காணொளி லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. கண்டு அனுபவியுங்கள்

https://www.youtube.com/watch?v=ChZt-TV5vWQ&t=2860s

Play time: 56 minitues 53 seconds

விதைத்தவன் உறங்கினாலும்

விதை உறங்காது

மஹாபெரியவா அன்று விதைத்த

விதைகளில் ஒன்று குமரேசன் மாமா

முளைத்த விதை

இன்றும் வரை ஓயாமல்

வளர்ந்து கொண்டேயிருக்கிறது

Hara Hara Shankara Jaya Jaya Shankara

காயத்ரி ராஜகோபால்