Featured Posts

இந்த இணைய தளத்தின் புதிய வரவு- ஸ்ரீமான் சாணு புத்திரன்


குருவே சரணம் குரு பாதமே சரணம்

இந்த புதிய இணைய தளத்திற்கு ஒரு புதிய வரவு

அருணகிரி நாதர் முருகன் மேல் திருப்புகழ் எழுதினார் அன்று .இன்று இந்த புதிய இணைய தளத்தில் மஹாபெரியவா புகழ் எழுத வருகிறார் கலியுக அருணகிரி நாதர் சாணு புத்திரன்.

இவருக்கு அறிமுகம் தேவையா? நிச்சயம் இலை. இருந்தாலும் நம்முடைய இணைய தளத்தில் எத்தனையோ புதிய வரவுகள். அவர்களுக்காக இந்த அறிமுகம். சாணு புத்திரன் அவர்களின் எழுத்துக்களை நான் நிறைய படித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் நான் நினைப்பது உண்டு. சரஸ்வதி தேவி இவருக்கு அனுக்கிரஹம் செய்தாளா இல்லை இவருக்குள் வசம் செய்கிறாளா என்று ?

ஒரு நல்ல எழுத்தாளர் யார் தெரியுமா? சிந்தனையின் நட்பும் சொற்களின் ஸ்நேகமும் இருந்தால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். சாணு புத்திரனின் எழுத்துக்கள் எல்லோரையும் வியக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அந்த சரஸ்வதி தேவியே இவருக்குள் வாசம் செய்கிறாள் என்றால் சிந்தனையென்ன சொற்கள் என்ன எல்லோருமே இவர் கூப்பிட்ட குரலுக்கு அணி வகுத்து நின்று விடுகிறார்கள்.

இவருடைய வரவு நம்முடைய இணைய தளத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என்பதில் என்ன சந்தேகம். நம்முடைய இணையத்தளத்தில் இவருடைய எழுத்துக்களை இவருடைய பதிவுகள் மூலம் நாம் படித்து அனுபவிக்கலாம்.

நாம் சேலை கட்டிய சரஸ்வதியை தான் பார்த்திருக்கிறோம். இவர் ஒரு பாண்ட் சட்டை போட்ட கலியுக சரஸ்வதி. இவருடைய முதல் பதிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. படித்து உங்கள் கருத்துக்களை இந்த இணைய தளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நான் இந்தப்பதிவும் மூலம் ஸ்ரீ சாணு புத்திரன் அவர்களை கேட்டுக்கொள்வது வாரம் ஒரு பதிவாவது வெளி வர வேண்டும்.தினமும் பதிவுகள் வந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே.

நாம் எல்லோரும் சேர்ந்து ஆத்மார்த்தமாக சாணு புத்திரனையும் அவர் குடும்பத்தாரையும் மங்காத புகழும் குறையாத செல்வமும் சலனமற்ற மன அமைதியுடன் கொண்ட வாழ்க்கை வாழ மஹாபெரியவாளை பிரார்தித்துக்கொள்வோம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square