நம் இதயம் பேசுகிறது
குருவே சரணம் குரு பாதமே சரணம்

நம் இதயம் பேசுகிறது
நம் எல்லோருடைய உள்ளுணர்வின் வெளிப்பாடுதான் இந்த பதிவு. உங்கள் சார்பில் நான். இன்றைய பொன்னான நாளின் முதல் பதிவு. இந்த பதிவு நம்முடைய பதிவு இது.. இந்தப்பதிவை மஹாபெரியவா பொற் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.
மஹாபெரியவா தன்னுடைய தாமரை பாதங்களை இந்த புதிய இணைய தளத்தில் பதிக்கும் முதல் நாள் இன்று.. மஹாபெரியவாளின் பொற் பாதங்கள் இணையதளத்தின் சிரசில் பதித்து ஆசீர்வாதம் செய்கிறது.
அதே வேளையில் இந்த இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவரின் சிரசிலும் மஹாபெரியவா தாமரை பாதங்கள் பதித்து ஆசிர்வதிக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா. இணைய தளமும் முதல் அடியை இன்று எடுத்து வைத்து விட்டது. நாம் எல்லோரும் மஹாபெரியவா கையை பிடித்துக்கொண்டு அவர் காட்டிய ஆன்மீக பாதையில் சேர்ந்து பயணிப்போம்.
இது ஒரு மஹாபெரியவா இறை சாம்ராஜ்யம்.இங்கு போட்டி இல்லை பொறாமை இல்லை விரோதம் இல்லை துவேஷம் இல்லை. அதே சமயத்தில் சகோதரத்துவம் சக ஆத்மாவிற்கு உதவும் மனப்பான்மை கோ ஸம்ரக்ஷிணம் வேத ரக்க்ஷ்ணம் நித்ய பூஜைக்கு கூட கஷ்டப்படும் கோவில்களை கண்டறிந்து மூன்று வேளை பூஜைக்கு வழி வகுப்பது நமக்கு படியளக்கும் பெருமாள் கிழிந்த உடையுடன் இருக்கும் அவலத்தை போக்க இயன்ற வரை முயற்சிப்பது.
இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் நான் வாழும் கலி காலத்திலேயே வேத காலம் ஒன்றை உருவாக்கி வாழுவோம். இது என் ஆசை மட்டுமல்ல. உங்களின் ஆசையும் கூட என்பது . எனக்கு நிச்சயமாக தெரியும்.உங்களுடன் நான் பழகிய ஓராண்டு நட்பு உங்கள் புனித உள்ளத்தை எனக்கு படம் பிடித்து காட்டியுள்ளது.
மஹாபெரியவா நம்மையெல்லாம் தேர்ந்தேடுத்து கட்டிய இறை சாம்ராஜ்யம் இது.ஒவ்வொரு நொடியும் இந்த இணைய தளம் வளரும். வளர்ந்து மஹாபெரியவா கண்ட வேத உலகத்தை நிச்சயம் உலகிற்கு பறை சாற்றுவோம்.
இங்கு வியாபாரத்திற்கு நிச்சயமாக இடம் கிடையாது. ஒன்றே ஒன்றுதான் நடக்கும் ஊர் கூடி தேர் இழுப்போம். கலியின் விகாரங்கள் நம்மை தாக்கும் பொழுது சுத்த ஆத்மாக்களாகிய நாம் ஒன்று சேர்ந்து கை கோர்க்க வேண்டாமா. இன்று இது நம்முடைய கனவு நினைவாகும் நாட்கள் தூரத்தில் இல்லை. தொட்டு விடும் தூரம்தான்
நல்ல சிந்தனைகள் தான் நல்ல வார்த்தைகளாக வெளிப்படுகின்றன
நல்ல வார்த்தைகள் தான் நல்ல செயல்களாக உருவெடுக்கின்றன
நல்ல செயல்களே ஒரு நல்ல கலாச்சாரத்திற்கு வித்திடுகிறது
ஒரு நல்ல கலாச்சாரமே வரும் தலை முறையினருக்கு
நல்ல சமுதாயத்தை உருவாக்கிக்கொடுக்கிறது.
நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு
நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்
வரும் தலை முறையினருக்கு நம்முடைய
தாய் வீட்டு சீதனமாக கொடுப்போம்.
நம்முடைய இந்த முயற்சியை
மஹாபெரியவா நிச்சயம் ஆசிர்வதித்து
வாழ்த்துவார் என்பது சத்தியம்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்