பதிவுகளும் வெளியாகும் நாட்களும்

குருவே சரணம் குரு பாதமே சரணம்
மஹாபெரியவா பக்த கோடிகளே,
உங்கள் பெரும்பாலோரின் வேண்டுகோளை ஏற்று இன்றிலிருந்து பதிவுகள் வெளிவரும் நாட்களும் பதிவின் பெயரும் ஒரு அட்டவணை வாயிலாக உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். அட்டவணையில் குறிப்பிட்டபடி பதிவுகள் வெளியாகும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
புதிய வரவு எழுத்தாளர்களின் பதிவுகள் வெளியாகும் நாட்களை பார்த்துக்கொண்டு அவர்களின் பதிவுகளையும் உங்களுக்கு முன் அறிவிப்புடன் வெளியிடப்படும் என்பதை தெரிந்துகொள்கிறேன்
பதிவுகள் வெளியாகும் நாட்கள்
S.No பதிவின் தலைப்பு பதிவாகும் கிழமைகள் எழுத்தாளர்
1 குரு பூஜை அற்புதங்கள் திங்கட்கிழமை தோறும் G.R.
2 அற்புதசாரல்கள் செவ்வாய்க்கிழமை தோறும் G.R.
3 பக்தர்கள் வாழ்வில் புதன் கிழமை தோறும் G.R.
4 என் வாழ்வில் வியாழக்கிழமை தோறும் G.R.
5 திவ்ய தேச தரிசனங்கள் வெள்ளிக்கிழமை தோறும் G.R.
6 இந்து மதம் ஒரு வாழும் சனிக்கிழமை தோறும் G.R.
7 சக்தி பீட தரிசனங்கள் ஞாயிற்று கிழமை தோறும் G.R.
உங்கள் கமெண்டுகளுக்கு நான் எழுதும் பதில்களை ஒரு நாள் சேர்த்து வைத்து எழுதாமல் அவ்வப்போது உங்கள் கமெண்டுகளுக்கு என் பதிலை எழுதி விடுகிறேன். என்னால் இயன்ற அளவு மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை படி பதிவுகளை வெளியிட முயற்சி செய்கிறேன்.என்னுடைய சக்திக்கும் அப்பாற்பட்டு என்னை நானே ஒரு நிர்பந்தத்துக்குள் கொண்டு வந்திருக்கிறேன்.
என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கைகள் இரண்டு.
ஒன்று மஹாபெரியவா இரண்டு மஹாபெரியவா பக்தர்களாகிய நீங்கள். உங்களின் கனிவான வார்த்தைகளும் ஊக்கமும் மட்டுமே என்னை இந்த அளவிற்கு ஆளாக்கி இருக்கிறது.. மஹாபெரியவா என்னை தங்கமாக்கி உங்கள் கைகளில் தங்கக்கட்டியாக கொடுத்தார் அந்த தங்கக்கட்டிக்கு நீங்கள் பட்டை தீட்டுகிறீர்கள். உங்களுக்கு நான் பிரார்த்தனை செய்கிறேன் என் பிரார்த்தனைக்கு நீங்கள் உதவுகிறீர்கள்.
ஒரு கை தட்டினால் ஓசை வருமா
நம் இரு கைகள் சேர்ந்தன
ஓசை வருகிறது
என்ன ஆச்சரியம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்