சாணு புத்திரனின் குரு புகழ் -2

தமிழ் கடவுள் முருகன் அருணகிரிநாதருக்கு திருப்புகழ் அருளிச்செய்தல்

மஹாபெரியவா சாணு புத்திரனுக்கு குரு புகழ் அருளி செய்கிறார்
பெரியவா சரணம். குரு பார்வை கோடி லாபம் என்பராச்சே! உமைபாலனிடம் அருணையோன் கேட்ட திருப்புகழ் சந்தத்திலே உமாபதியின் அவதாரியிடம் குருப்புகழ் பாடி வரம் கேட்போமே! ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர... #குருப்புகழ் சந்தம்: தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதானா குருப்புகழ்: பாடல்: மதிமடிய மனமொடிய அறமகல விழியதிர தனலவிய திமிரொழுக ……………….. விரையாதே அனையுமனை யுறவுதிர புரளுவினை தடமகல கதறுநிலை தனிலதிர ……………….. கரையாதே வதையுமிரு வினைகடமு ளுதிரவதை புறமதிர குருவடியி லணுகிவர ……………….. மேற்பாயே பகருமித மடையுவழி யதனைவிட திறமெதுவு மகிலமிதி லுறையெதுவுங் ……………….. கிடையாதே வழியடைய நெறிபகர வலிமறையு வழிவளமு மதிபதியு மதிமதுர ……………….. முரைத்தோனை நவகிரஹ நலியகல நெறிதரும வழிபகருந் தவமுனியு மதியனருள் ……………….. வரமேற்க சிவனைநிகர் வரகரமு முடையதிரு மதிவதன மறைவளரு மதிதவசி ……………….. அடிபோற்ற மதலைவன முறையுபதி அகிலவுல கோர்கதியு மறமுடைய காஞ்சிதல ……………….. முறையோனே! பதம்: மதி மடிய மனம் ஒடிய அறம் அகல விழி அதிர தனல் அவிய திமிர் ஒழுக ……………….. விரையாதே அனையும் மனை உறவு உதிர புரளு வினை தடம் அகல கதறுநிலை தனில் அதிர ……………….. கரையாதே வதையும் இரு வினை கடமுள் உதிர வதை புறம் அதிர குருவடியில் அணுகிவரம் ……………….. ஏற்பாயே பகரும் இதம் அடையும் வழி அதனைவிட திறம் எதுவும் அகிலம் இதில் உறை எதுவும் ……………….. கிடையாதே வழி அடைய நெறி பகர வலி மறையும் வழி வளமும் அதிபதியும் அதிமதுரம் ……………….. உரைத்தோனை நவகிரஹ நலி அகல நெறி தரும வழி பகரும் தவ முனியும் அதியன் அருள் ……………….. வரம் ஏற்க சிவனை நிகர் வர கரமும் உடைய திரு மதிவதனம் மறைவளரும் அதி தவசி ……………….. அடிபோற்ற மதலைவனம் உறையும் பதி அகில உல கோர் கதியும் அறமுடைய காஞ்சி தலம் ……………….. உறையோனே! சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். ஒரு நூறாண்டுகள் நமக்கெனவே தவ வாழ்வு வாழ்ந்து, நாம் செய்யத்தக்க செயல்களை யாவை என்பதை சொல்லி அருளுவதோடு செய்து காட்டிய அந்த பரப்ரஹ்மத்தைத் தொழுதால் மட்டும் போதாதே! அவர் காட்டிய வழியிலே வாழவும் செய்தல் வேண்டாமோ?!! அவர் அருளாலே அவர் தாள் வணங்குவதோடு அவர் காட்டிய தர்ம வழிதனைப் பேணி வாழுங்காலத்தே ஆனந்தமாகிய முக்தியை அனுபவிப்போம்! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்