குரு பூஜை நாயகி சாருகேசிக்கு சங்கரன் பிறந்தான்

குரு பூஜை நாயகி சாருகேசிக்கு
சங்கரன் பிறந்தான்
குரு பூஜை அற்புதத்தின் நாயகி சாருகேசிக்கு நேற்று இரவு சங்கரன் பிறந்தான். உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். சாரு கேசியும் அவளது கணவரும் ஒரு புரிதல் இல்லாமல் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தனர். மேலும் இருவர் மனங்களும் உடைந்தன. பெரியோர்களால் திருமணம் என்ற பெயரில் உருவான குடும்பம் திருமண முறிவை நோக்கி பயணித்தது. இங்குதான் குரு பூஜை அற்புதம் நிகழ்ந்தது.
கணவர் மீண்டும் அமெரிக்கா செல்ல திருமணம் முறிவு என்பது தவிர்க்க முடியாதது என்ற நிலை.இந்த சமயத்தில் ஒரு குழந்தை பிறந்தால் இரு மனங்களும் ஒன்று படும். இந்த குடும்பம் பிரியாமல் இருக்க மனங்கள் ஒன்றுபட வேண்டும். இறுதியாக வாழ்ந்ததோ சில நாட்களே. ஐந்து வருடங்களாக பிறக்காத குழந்தை இனிமேல் கரு உண்டாகி பிறக்கப்போகிறதா. பிறக்க வாய்ப்பே இல்லை குழந்தை பாக்கியத்திற்கு வாய்ப்பு நிச்சயம் இல்லை.
இருந்தாலும் பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா குழந்தை பாக்கியத்திற்கு பத்து மாதங்களுக்கு முன் சாருகேசியின் வயிற்றில் ஒரு கருவை உருவாக்கினார். அந்த கரு நேற்று இரவு சங்கரன் என்றபெயரில் இந்த பூமியின் காற்றை ஸ்வாசித்தது.
இப்பொழுது புரிகிறதா
மஹாபெரியவாளின் அற்புதங்கள்
அறிவியலுக்கு அப்பாற்பட்டது
மஹாபெரியவா ஒன்றை சங்கல்பித்து விட்டால்
இந்த பிரபஞ்சமே ஒன்று கூடி அந்த சங்கல்பத்தை
நிறைவேற்றி விடும்
சாருகேசி ஒரு வாழும் உதாரணம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்