திவ்ய தேச தரிசனம்-005 அன்பில் சுந்தரராஜ பெருமாள்

குருவே சரணம் குரு பாதமே சரணம்
திவ்ய தேச தரிசனம்-005
அன்பில் சுந்தரராஜ பெருமாள்

திரு அன்பில் கோவில் முகப்புத்தோற்றம்
ஸ்ரீரங்கத்தில் இருந்து லால்குடி செல்லும் மார்கத்தில் உள்ளது இந்த அற்புதமான திவ்ய தேசம்.
இந்த கோவிலில் சுந்தரராஜப்பெருமாள் கோவில் கொண்டுள்ளார். முன்னோரு காலத்தில் இந்தக்கோவில் மிகப்பெரிய கோவிலாக இருந்ததாகவும் பல சுற்றுகளை கொண்டதாகவும் இருந்ததாக சொல்லபடுகிறது.

திரு அன்பில் வடிவழகிய தாயார்
ஒரு காலத்தில் இந்த கோவிலுக்கு நிறைய சொத்துக்கள் இருந்ததாம். பள்ளிகொண்ட நிலையில் சேவை சாதிக்கும் திருத்தலங்கள் ஏழு. அந்த ஏழில் திரு அன்பிலும் ஒரு திவ்ய க்ஷேத்ரம்..

திரு அன்பில் சுந்தரராஜ பெருமாள்
இந்த திருக்கோவிலில் உற்சவர் சுந்தரராஜப்பெருமாள். உபய நாச்சியார் ஆண்டாள் அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.. சயன கோலத்தில் பெருமாளின் திருவடிகளில் ஸ்ரீ தேவியும் பூமா தேவியும் நாபிக்கமலத்தில் பிரம்மாவும் உள்ளனர். சுந்தரவல்லி நாச்சியாருக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.
மூலவர்: சுந்தரராஜ பெருமாள்
உற்சவர்:வடிவழகிய நம்பி
தாயார் : அழகிய வள்ளி
ஸ்தல விருக்ஷம்: தாழம்பூ
தீர்த்தம்: மண்டூக தீர்த்தம்
ஆகமம்: பஞ்சராத்ரம்
பழமை : இரண்டாயிரம் வருடம்
புராண பெயர் :திரு அன்பில்
ஊர்: அன்பில்
மாவட்டம்:திருச்சி
மாநிலம்: தமிழ் நாடு
மங்களாசாசனம்:திருமிழசை அழவார்
திரு விழாக்கள்: மாசியில் தீர்த்த வாரி திரு விழா - வைகுண்ட ஏகாதசி
ஸ்தலசிறப்பு: பெருமாள் பாற்கடலில் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பதை போல இங்கும் சயன கோலத்தில் சேவை சாதிக்கிறார்.கர்ப கிரஹத்தின் மேல் உள்ள கோபுரம் ராஜகோபுரத்தை போலெ இருப்பது ஒரு தனி சிறப்பு.இந்த கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. மங்கள சாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்களில் இது ஐந்தாவது திவ்ய தேசம் ஆகும்.
கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 12.30 மணி வரை. மாலை .4.00 மணி முதல் 8.00 மணி வரை.
தொலை பேசி: .+91-431-6590672
பிரார்த்தனை: திருமணம் வேண்டி ஆண்டாள் நாச்சியாரை வேண்டிக்கொள்வார்கள்
நேர்த்திக்கடன்: தாயார் ஆண்டாளுக்கு விசேஷ திருமஞ்சனம் அர்ச்சனை ஆராதனைகள் செய்யலாம்

திரு அன்பில் கோவில் இரவு தோற்றம்
உங்கள் இல்லத்தில் திருமணத்திற்கு பிள்ளைகள் தயாராக இருந்தால் தாமதம் இல்லாமல் திருமணம் ஆக இங்கு வேண்டிக்கொள்ளுங்கள்.உங்கள் வீட்டில் சீக்கிரமே மங்கள் நாதம் கேட்க நான் மஹாபெரியவாளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன். உங்கள் பயணம் இனிதே சிறக்கட்டும்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்