அழைப்பிதழ்

அழைப்பிதழ்
ஏதோ, அறிந்தளவு தமிழ்தனிலே ஐயனைப் போற்றி அனுதினமும் பகிர்ந்து வருகின்றேன். அடியேனுடைய பிரார்த்தனை தனிலே அனேகம் பேர்கள் கூடுகின்றீர்கள். நாம் செய்யும் பிரார்த்தனைகள் அகில லோக சகல ஜீவர்களுக்குமானதாக தர்மத்துடனாக அமையுமாயின் சர்வ நிச்சயமாக நம் மாதா-பிதா-குரு-தெய்வமான ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்ரீமஹாஸ்வாமிகள் எனும் நம்முடைய உம்மாச்சி தாத்தாவின் பரிபூரண அருளாசிகள் நம் பிரார்த்தனைதனை பலிதமாக்கித் தருமன்றோ!
எல்லோரும் தவறாமல் 2018 ஜனவரி மாதம் 13-ம் தேதி சனிக்கிழமை சென்னை, சேத்துப்பட்டில், மேயர் ராமனாதன் ரோடில் (ஸ்பர் டாங்க் ரோடு) அமைந்துள்ள ஸ்ரீசங்கராலயத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீமஹாபெரியவா புஷ்பாஞ்சலி பூஜையிலே கலந்து கொள்ள வாருங்கள். தம்மால் இயலாவிட்டாலும் பிறருக்கு இவ்விவரம் பகிர்ந்து அவர்களை வந்திருந்து கலந்து கொள்ளச் செய்யுங்கள். சர்வ நிச்சயமாக ஸ்ரீசரணரின் அருளாசிகளிலே நாம் அனைவரும் ஆனந்தமாகவே வாழ்வோம். கவலை வேண்டாம்! குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.