Featured Posts

குரு புகழ் -6


பெரியவா சரணம்

ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு விதமான உணர்வினைத் தந்து, ஒவ்வொரு விதமான புரிதலை அருளி, பற்பல விதமாக பரப்ரஹ்ம ஸ்வரூபத்தை த்யானிக்கச் செய்யும் நம் சர்வேஸ்வரனான ஸ்ரீசரணாள், ஸ்ரீ மஹாஸ்வாமி எனும் அம்மையப்பன் இன்றைய தினமும் ஒரு அற்புதமான குருப்புகழை தந்தருளினார்கள். வாருங்களேன்... போற்றுதலைத் தொடர்வோம் இன்றுமொரு குருப்புகழோடு!

குருப்புகழ் அகிலமிதி லேபி றந்து அமுதமென வேதி கழ்ந்து அறமுயர வேந டந்த …………………….. இனியோனாய் கலவைதனி லேது றவில் கனியுருவி லேநி றைந்து கச்சிமட மேகி நின்ற ……………………….. கனியோனே புவனமிதி லேம றையும் புனிதமென வேவி ளங்க புதினமென வேதி கழந்து …………… வழிகாட்டி தரணிதனி லேஅ றமும் தழைத்துயர வேயு ரைத்த தருமநெறி யேயு ருவில் …………….. வாய்த்தோனே காசினியி லேத ருமம் காத்திடவு மேதி னமும் காவிறையு மாமு னையும் ......... பணிந்தோமே நாவினியு மேந ல்கும் நாதியுரு வாயு ந்தன் நாமமதை யேநா ளும் ............... செபித்தேற்க காஞ்சிதனி லேயு றையும் கார்முகில னேஇ னிக்கும் காவியுரு வேநி தமும் ………………….. நினைந்தேனே பாரிதனி லேம னதில் பாங்கணைய வேக ழலில் பாசநினை வேநி றைய ............... அருள்வாயே!

ஐயனே! இந்த பக்திரசத்திற்குண்டான புண்ணியத்தின் பலன் இந்தப் பொழுதிலே பற்பலவிதமான தர்மமான பிரார்த்தனையுடன் உங்களையே நினைந்துருகி தியானிக்கும் ஒவ்வொரு பெற்றோருக்குமாக அருள்தனைப் பெற்றுத் தரவேண்டுமென்ற பிரார்த்தனையோடு பகிர்கின்றேன், அருள் புரியுங்கள் ஸ்வாமி! ஒவ்வொரு குருப்புகழையும் ஒவ்வொரு துதிகளையும் என்னிலிருந்து வெளிக்கொணர என்னை நேர்வழி நடத்தி வரும் உறவுகள் அனைவருக்கும் நமஸ்கரிக்கின்றேன். நம் எல்லோருக்குமான அம்மையப்பன் அருளில் நலமோடு வாழ்வோம்! கவலை வேண்டாம்!

குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை! பெரியவா கடாக்ஷம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square