Featured Posts

குரு பூஜை அற்புதங்கள் -15-சங்கரன்- வசந்த கல்யாணி-புதிய அற்புதம்


குருவே சரணம்

குரு பூஜை அற்புதங்கள் -15

புதிய அற்புதம்

சங்கரன்- வசந்த கல்யாணி

(மகன் சித்தி உறவு)

நானும் கடந்த ஓராண்டுக்கு மேலாக பலரது மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன் . அந்த அற்புதங்கள் எல்லாமே ஒவ்வொரு கோணத்தில் சிறப்பு வாய்ந்தவை.

ஆனால் நான் எழுதும் பொழுதே நான் என்னையே இழந்த அற்புதங்கள் ஒரு சில. அப்படி நான் என்னையே இழந்த அற்புதங்களில் சங்கரன் வசந்தகல்யாணி அனுபவித்த அற்புதமும் ஒன்று,

இவர்கள் வாழ்க்கையில் மஹாபெரியவா குரு பூஜை ஒரு அற்புதத்தில் ஆரம்பித்து ஒன்பதாவது வாரம் மற்றொரு அற்புதத்தில் முடிந்தது இன்னும் என்னை வியக்க வைக்கிறது.

இருபது ஆண்டு கால வறுமை ஒரே இரவில் துடைத்து எறியப்பட்ட அற்புதத்தை நாம் எல்லோருமே அனுபவித்தோம். அன்று முதல் இன்று வரை இவர்கள் வாழ்வில் மஹாபெரியவா அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. அப்படி நடந்த அந்த அற்புதங்களில் இருந்து இரண்டு அற்புதங்களை வசந்த கல்யாணியும் சங்கரனும் எனக்கு எழுதி அனுப்பினார்கள்.

அந்த அற்புதங்களை உங்களுக்காக இதோ இந்த திங்கட்கிழமையன்று சமப்பிக்கிறேன். அவர்கள் எழுதி அனுப்பியதையும் உங்களுக்காக தனி பதிவாக வெளியிட்டுளேன். இனி அற்புதங்களுக்குள் நுழைவோம்.

அற்புதம் நடந்த நாள் நாள் - .02/09/2017

எல்லா குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் எவ்வளவோ சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் சொல்லிக்கொடுப்பவை எல்லாமே மனதில் நின்று விடுகிறதா. இல்லையே. ஏதோ சொல்வதில் ஒரு சிலது தான் வாழ்க்கையின் இறுதி வரை நிற்கிறது.

அப்படி இன்று வரை வசந்த கல்யாணி சகோதரிகள் சங்கரன் மனதில் நிலைத்து நிற்பது "இருப்பதை வைத்து சந்தோஷப்படு.இல்