குரு ஸ்துதி

குருவே சரணம் குரு பாதமே சரணம்
அனுதினமும் அவரையே ஸ்மரித்து போற்றிட தமிழருள்கின்றனரே, நம் வேதத்தேவன்… அவ்யாஜ கருணாமூர்த்தியான ஸ்ரீமஹாபெரியவா எனும் உமாச்சி தாத்தா! நாமெல்லம் நல்பாக்கியசாலிகளன்றோ! இன்றைய தினம் ஒரு திருப்பதிகம் கொண்டு அவருடைய தாள்களை மனதாரப் பற்றியபடியாக ஒரு தோத்திரம் பாடிப் போற்றிப் ப்ரார்த்திப்போமே! சத்தியம் செப்பிடின், அவர் அருளாலேயே அவர் தாள் வணங்குகின்றோம்.
ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர…
# ஸ்ரீகுருதுதி
ஸ்ரீ சசிசேகர திருப்பதிகம் சீர்வளருங் கச்சிநகர் தலமிருந் தருள்செயும் தெய்வமுனி தந்ததமிழால் வேதாதி வேந்தனென சிவனார்தம் அவதாரி செப்பிடுநல் தருமநெறியில் ஊர்தோறும் அடியவர் மனமுறை வளர்ஞான குருவடியி னாசிதனிலே பாதாதி கேசனாய் பரம்பொருளி னுருகண்ட பலனருளு மெய்ஞானமே ஆர்வமோ டாற்றுவர் அகவுடற் பிணியிலாம் அகல்விக்கு மதிகுருபரா அடிதொழும் அன்பருக் கவரவர் நிலையறிந் தருளவுமை சரண்புகுந்தோம் சேர்புகோ யில்கொண்ட தெய்வமே எமதுவினை தீரநீ யருளவேண்டும் திங்களணி செஞ்சடில மங்கையுமை தலமுறையுஞ் சசிசேகர சங்கரா!