Featured Posts

நான் உங்கள் வசந்த கல்யாணி என் வாழ்வில் நிகழ்ந்த மேலும் ஒரு அற்புதம்


குருவே சரணம்

நான் உங்கள் வசந்த கல்யாணி,

மகா பெரியவா சரணம். ஜி.ஆர். மாமாவுக்கு நமஸ்காரங்கள்.மீண்டும் வசந்த கல்யாணி குரு பூஜைக்கு பிறகு இந்த இணையத்தளத்தில். நம் எல்லோருடைய மனதிலும் நடமாடிக்கொண்டிருக்கும் ப்ரத்யக்ஷ தெய்வமான ஸ்ரீ மகாபெரியவா சமீபத்தில் எங்கள் வாழ்வில் நிகழ்த்திய இரண்டு அற்புதங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் அடைகிறேன்.

கடந்த 02 /09 /2017 அன்று எங்கள் வீட்டின் ஒரே பொழுது போக்கு சாதனமான தொலைக்காட்சி பெட்டி பழுதடைந்துவிட்டது.இப்ப இருக்கும் சூழ்நிலையில் புது டி.வி வாங்க இயலாத நிலை.டி.வி மெக்கானிக்கை அணுகியபோது குறிப்பிட்ட ஒரு பகுதியை பிரித்து எடுத்து கொண்டு அதை மாற்ற வேண்டும் என்று சொல்லி எடுத்து போனார். மூன்று நாட்கள் கழித்து குறிப்பிட்ட அந்த சாதனம் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

மேலும் அந்த குறிப்பிட்ட பகுதி சாதனத்தை அவரே வைத்திருந்தார். நாங்கள் பல முறை போன் செய்தும் பேசவும் இல்லை .ஒரு வாரம்கழித்து அதை கொடுத்துவிட்டு போய்விட்டார். நாங்கள் டிவி கம்பெனியின் கஸ்டமர் சேவை மெக்கானிக்\கை வரச்சொல்லி பார்த்தோம் .அவர்களும் அதில் ஏதோ நம்பர் இல்லையென்று அது கிடைக்காது என்று சொல்லிவிட்டார் .

நாங்கள் மகா பெரியவாளிடம் என்ன பெரியவா எப்படியாவது அந்த சாதனம் கிடைக்க அருள் புரியக்கூடாதா என்று வேண்டினோம். ஓரிரு நாட்களில் பழைய மெக்கானிக் அவரே எங்களை தொடர்பு கொண்டு பழுதடைந்த சாதனம் கிடைத்துவிட்டதாக கூறி அதை மாற்றியும் கொடுத்துவிட்டர். இது மகாபெரியவாளின் மஹிமைதான் என்று சொல்லவும் வேண்டுமா?. .அவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டு அவரை வேண்டுபவர்களுக்கெல்லாம் அருள்புரிந்து கொண்டுதான் இருக்கிறார்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

உங்கள்

வசந்த கல்யாணி


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square