top of page
Featured Posts

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-035


குருவே சரணம் குரு பாதமே சரணம்

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-035

மஹாபெரியவா ஒரு மடாதிபதியா

குறிப்பிட்ட சமூகத்திற்கு குருவா

இல்லை ஜகத் குருவா

மேலே படியுங்கள் புரியும்

நாம் எல்லோருமே மஹாபெரியவாளின் அறுபுத்தங்களை பலவிதங்களில் அனுபவித்து வருகிறோம். பக்தர்களின் லௌகீக வாழ்கைகையில் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார். பக்தர்களின் தேவைகளும் அதுதானே. வேகத்தில் வாழுகின்ற வாழ்க்கையில் விவேக சிந்தனைகளுக்கு நேரமே இல்லாமல்போகிறது.

ஆனால் இந்த கலி காலத்திலும் லௌகீக வாழ்க்கையில் இருந்து விலகி பிறவியின்மை ஏன்னு முக்தி நிலையை அடைய தவித்தவர்கள் ஏராளம். இந்த மாதிரி ஜீவாத்மாக்கள் தங்கள் பாவங்களை தொலைக்க இமய மலையில் சென்று தவம் செய்வது. கங்கை நீரில் மூழ்கி இறைவனை அழைப்பது போன்ற எண்ணற்ற வழிகளில் முயன்றார்கள்.

அவர்களில் பலர் இமயத்தை தவிர்த்து காஞ்சியை தேர்ந்தெடுத்தார்கள்.. காஞ்சியிலும் மஹாபெரியவாளை தேர்ந்தெடுத்து மடத்துலயே இருந்து கொண்டு மடத்திற்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து கொடுப்பார்கள்.

தங்களுடைய சொத்துக்களை தன்னுடைய குழந்தைகளுக்கு பிரித்து கொடுத்து விட்டு கவலையை மறந்து முக்தி ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு மஹாபெரியவாளின் பாதரவிந்தங்களில் சரணடைந்து விடுவார்கள். அவர்களுக்கு முக்தியும் கிடைத்து விடும். இப்படி பட்ட நிகழ்வுகள் ஏராளம்.அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றைத்தான் இந்த பதிவில் அனுபவிக்கப்போகிறோம்.

கண்டரமாணிக்கம் செட்டியார் என்னும் ஆனந்தம் செட்டியார் வணிகம் செய்யும் குலத்தில் பிறந்து பெரியளவில் வாணிகமும் செய்து வந்தார்.ஒரு சமயத்தில் செட்டியாருக்கு வாணிகத்தில் இருந்த நாட்டம் குறைந்து இனிமேல் பிறக்கவே கூடாது என்னும் எண்ணம் ஏற்பட்டது. அப்படியானால் முக்தி நிலையை அடைய வேண்டும்.

இவருக்கு ஆனந்தம் செட்டியார் என்று பெயர் வரக்காரணம் இவர் பேசும்பொழுது பேச்சுக்கு ஒரு முறை ஆனந்தம் ஆனந்தம் என்று சொல்லுவார்.இதனால் ஆனந்தம் செட்டியார் என்று அழைக்கப்பட்டார்.

இவர் வழக்கமாகவே காஞ்சி மடத்திற்கு மஹாபெரியவாளை தரிசிக்க வருவது உண்டு. கண்டரமாணிக்கம் பேசும் பொழுது ஆனந்தம் என்ற வார்த்தையை அடிக்கடி பிரயோகிப்பார். ஆகவே கண்டரமாணிக்கம் ஆனந்தம் செட்டியார் என்றும் அழைக்கப்பட்டார்.

ஒரு நாள் சூரிய உதயத்தில் இருந்து செட்டியாரின் மன நிலை வேறு விதமாக இருந்தது. இந்த உலகத்தில் சாப்பிட்டு தூங்கி எண்ணத்தை கண்டோம்.இனி இந்த வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு செய்து தன்னுடைய பொன் பொருள் எல்லாவற்றையும் தன்னுடைய குழந்தைகளுக்கு பிரித்து கொடுத்து விட்டு தன்னுடைய இறுதி காலத்திற்காக ஒரு தொகையை எடுத்துக்கொண்டு காஞ்சி மடத்திற்கு வந்து விட்டார்.

வந்த நாளில் இருந்து மடத்திற்கு வேண்டியவற்றை செய்வது வெளியில் சென்று பொருள்கள் வாங்குவது வரும்பக்தர்களை நல்ல முறையில் வரவேற்று அவர்களை உபசரிப்பது போன்ற வேலைகளை செய்து வைத்தார். மடத்திலேயே சாப்பிட்டு விட்டு அங்கேயே ஒரு ஓரமாக படுத்து விடுவார். மஹாபெரியவாளுக்கும் இவரை பிடித்து போனது.

மஹாபெரியவா பூஜை செய்யும்பொழுது செட்டியார் அங்கு சாம்பிராணி புகை போட்டு அந்த இடத்தையே கைலாயம் போன்று செய்து விடுவார். ஒரு நாள் காலை மஹாபெரியவா செட்டியாரை அழைத்தார். செட்டியாரும் ஓடி வந்து பௌவியமாக கை கட்டி வாய் பொத்தி நின்றார். செட்டியார் நீர் நாளைக்கு திருவாலங்காடு போய் அங்கு இருக்கும் கோவிலில் உங்கள் இறுதி காலத்தை கழியுங்கள் என்று சொன்னவுடன் செட்டியார்க்கு ஒரு புறம் துக்கம். மறு புறம் ஆனந்தம்..

துக்கம் ஏன் தெரியுமா மஹாபெரியவாளை விட்டு பிரியப்போகிறோமே என்று. ஆனந்தத்தின் காரணம் மஹாபெரியவா ஒன்றை சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.தன்னுடைய காலம் முடியப்போகிறது, அதனால்தான் தன்னை திருவாலங்காடு போக சொல்கிறார் என்று நினைத்தார். செட்டியார் நினைத்தது சரிதான்.

மறு நாள் செட்டியாரும் கண்களில் கண்ணீர் கசிய திருவாலங்காடு கிளம்பினார். அப்பொழுது மடத்து மனுஷாள் மஹாபெரியவளிடம் மிகவும் வருத்தப்பட்டு கேட்டார்கள். ஏன் பெரியவா செட்டியாரை திருவாலங்காடு அனுப்பினீர்கள். அவரால் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாதே.அவர் பல வழிகளில் மடத்துக்கு உபயோகமாக இருந்தார் என்று சொல்லி வருத்தப்பட்டார்கள்.

அதற்கு மஹாபெரியவாளின் பதில் என்ன தெரியுமா. செட்டியாருக்கு வேண்டியது முக்தி. இப்பொழுது அவருக்கு காலம் நெருங்கி விட்டது. காரைக்கால் அம்மையாரும் வணிக குலத்தில் பிறந்த ஒரு பெண்தான்.அவளும் திருவாங்கட்டை சேர்ந்தவள்தான்.

செட்டியாரின் இறுதி நாட்களில் காரைக்கால் அம்மையாரின் ஆத்மாவின் தொடர்பு கிடைத்தால் அம்மையார் முக்தி கொடுத்து அழைத்து செல்வாள் என்ற எண்ணத்தில்தான் செட்டியாரை திருவாலங்காடு அனுப்பினேன். என்றார். மடத்து கைங்கர்ய மனுஷாளுக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

மஹாபெரியவாளின் அற்புதங்கள் இந்த பூலோகத்தில் மட்டுமா? இல்லையே. வான் லோகத்திலும் முக்தி என்னும் அற்புதத்தை எத்தனை பேருக்கு பெற்று கொடுத்திருக்கிறார்.

இன்னொன்று கவனித்தீர்களா மஹாபெரியவா ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தக்காரர் என்ற நிலையில் அது தவறு நான் இந்த ஜகத்திற்கே வழிகாட்டி என்று இந்த கண்டரமாணிக்கம் முக்தி அற்புதம் மூலம் உலகிற்கு உணர்த்தி விட்டார்.நிரூபித்திருக்கிறார்.

மஹாபெரியவாளுக்கு ஜாதி ஒரு பொருட்டே இல்லை. அவன் ஒரு ஜீவாத்மாவா. அவனுக்கு அருகதை உண்டு என்று சொல்லாமல் சொல்லிய நிகழ்வுகள் எத்தனை எத்தனை. அத்தனையும் அற்புதம் தானே.

விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள

தொடர்புதான் மஹாபெரியவா

மஹாபெரியவா விண்ணிலும் இருப்பார்

மண்ணிலும் இருப்பார்

ஈரேழு லோகத்திற்கு

சக்கரவர்த்தி

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page