பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-033 மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்

மஹாபெரியவா சரணம்
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-033
பிரதி புதன் கிழமை தோறும்
மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்
பலரது வாழ்க்கை வாழ்க்கை
என்ற பெயரிலேயே கழிந்து விடும்
சிலரது வாழ்க்கை பேசப்படும்
சிலரது வாழ்க்கை போற்றப்படும்
ஒரு யுகத்தில் தான் ஒருவரது
வாழ்க்கை தொழப்படும்
மஹாபெரியவா ஒரு யுகபுருஷர்
அவரது வாழ்க்கையும்
ஆகமத்தில் ஒன்றாக அமைந்து விட்டது.
மஹாபெரியவா சரணம்
மஹாபெரியவா அற்புதங்களை நாம் பலவிதங்களில் அனுபவித்து வருகிறோம்.அவருடைய பக்தர்கள் மூலமாகவும் பக்தர்கள் அல்லாமல் பிரச்னையை எதிர்கொண்ட பிறகு மஹாபெரியவாளை அணுகி மஹாபெரியவா அற்புதங்கள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு கண்டவர்கள் மூலமாகவும் நாம் அனுபவித்து வருகிறோம்.
இந்த பதிவில் நாம் அனுபவிக்கப்போவது நீண்ட காலம் மஹாபெரியவளுடனேயே இருந்து பூஜை புனஷ்காரங்களை கவனித்து கொண்டிருந்த மேச்சேரி பட்டு சாஸ்திரிகள் அவர்களின் மஹாபெரியவா அவர்களின் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
முதல் அனுபவம்: மஹாபெரியவா சித்தி அடைந்த நாள் : மஹாபெரியவா சித்தி அடைந்த நேரம் மதியம் மணி 2..58 நிமிடங்களுக்கு இதற்கு சற்று முன்பு தான் பட்டு சாஸ்திரிகள் மஹாபெரியவாளை பார்த்து பேசிவிட்டு உங்கள் பாத தரிசனம் வேண்டும் என்று கேட்டு தரிசித்து விட்டு வெளியில் பிரதோஷ மாமா வீட்டிற்கு சென்று சென்னை கிளம்ப பேருந்து நிலையத்திற்கு வந்தார்.
அங்கே பேருந்து நிலையத்தில் இவரை பார்த்த ஒருவர் மஹாபெரியவா சித்தி அடைந்து விட்டதை தெரியப்படுத்தினார். அதை கேட்ட பட்டு சாஸ்திரிகள் கோபமடைந்து அவரை அடிக்கப்போய் விட்டார். ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் மஹாபெரியவாளை தரித்து விட்டு சென்றிருக்கிறோம்.இது எப்படி சாத்தியம் என்று கோபமடைந்தார் சாஸ்திரிகள்.
என்னதான் நாம் தினந்தோறும் ஏராளமான மரணங்களை பார்த்தாலும் நமக்கோ நம்மை சார்ந்தவர்களுக்கோ அந்த மரணம் நிகழும் பொழுது நம்முடைய உள்ளம் ஏற்க மறுக்கிறது. மேச்சேரி பட்டு சாஸ்திரிகள் மட்டும் விதி விலக்கா என்ன.
மஹாபெரியவா சித்தி அடைந்த விஷயம் உலகம் முழுவதும் நொடிப்பொழுதில் பரவி விட்டது. சேதியை அறிந்த சாஸ்திரிகள் காஞ்சி மடத்திற்கு விரைந்தார்.அங்கே கூட்ட நெரிசல் மிகுந்த இருந்தது. மடத்திற்கு வெளியே மடத்து சிப்பந்திகள் காவலுக்கு நின்றிருந்தார்.
மடத்து வாசலில் பட்டு சாஸ்திரிகள் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் சாஸ்திரிகள் எப்படி உள்ளேசென்று மஹாபெரியவாளின் இறுதி சடங்குகளை எப்படி செய்தார் என்பதை நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
நமக்கு மட்டும் தான் திருஷ்டியா
மஹாபெரியவாளுக்கு கண் திருஷ்டி கிடையாதா?
நம் வீட்டில் உள்ளபெரியவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மாலை நேரத்தில் திருஷ்டி கழித்து சுத்தி போடுவார்கள் அல்லவா. நம்மில் பெரும்பாலும் எல்லோருக்கும் அந்த அனுபவம் இருக்கும்.
ஆனால் பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவாளுக்கே திருஷ்டி கழித்த எசையனூர் பாட்டியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் பட்டு சாஸ்திரிகள். எசையனூர் பாட்டி எப்படியெல்லாம் திருஷ்டி கழித்தார் என்பதை இந்த காணொளி மூலம் கண்டு அனுபவியுங்கள்.
ஈரேழு புவனத்தின் சக்கரவர்த்தி மஹாபெரியவா:-
மேச்சேரி பட்டு சாஸ்திரிகளின் ஒளிவு மறைவில்லாத பேச்சு பேச்சில் ஒரு எதார்த்தம் நடந்ததை நடந்த படி விவரிக்கும் சுபாவம் கேட்பவர்களின் மனதை நிச்சயம் கொள்ளை கொண்டு விடும். மஹாபெரியவளுக்காக வரும் யானைகள் ஒட்டகங்கள் குதிரைகள் ஐம்பது வண்டி மாடுகள் இவைகள் எல்லாவற்றையும் மேய்க்க ஆட்கள் ஆட்களை நிர்வகிக்க மடத்து மேனேஜர்கள்.
பிறகு ஒவ்வொரு ஊரிலும் முத்ரா அதிகாரிகள் என்று மிகவும் சிலாகித்து பேசும் பொழுது மஹாபெரியவா ஈரேழு பூவனத்தின் சக்கரவர்த்தி என்று கூறும் பொழுது சாஸ்திரிகளின் கண்கள் அகல விரிவது ஒரு குழந்தை ஆச்சரியத்தால் கண்களை அகல விரிப்பது போல இருப்பதை நீங்களும் அனுபவியுங்கள்.
காபி குடித்தவர்கள் யார் யார்:?
ஒரு முறை மகாபெரியவர் சாதுர் மாசிய விரதம் எசையனூரில் அனுஷ்டித்து கொண்டிருந்த பொழுது மடத்தில் நிறையபேர் காபி குடிக்கிறார்கள் என்றசெய்தி மஹாபெரியவளை எட்டியது. இந்த காபி பிரச்னையை மஹாபெரியவா எப்படி கையாண்டார் என்பது மிகவும் சுவாரசியம். காணியொலியை கண்டு ரசியுங்கள்
மஹாபெரியவா
ஒரு முகம் அற்புதங்கள் என்றால்
மற்ற முகங்கள் எத்தனையோ
அத்தனை முகங்களையும்
கண்டு அனுபவியுங்கள்
நிஜ பாத தரிசனம் காண்போம்
https://www.youtube.com/watch?v=lnID7RqiS54
1 hour 5 mts 57 seconds
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்