Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -038


குருவே சரணம் குரு பாதமே சரணம்

என் வாழ்வில் மஹாபெரியவா -039

பிரதி வியாழன் தோறும்

வாழ்க்கை என்பது ஒரு வட்டம்

வட்டத்திற்குள் சிக்குபவன்

திசைகளை இழப்பான்

வட்டத்தை அறுத்து வெளியே வந்து பாருங்கள்

திசைகளை தாண்டி இருக்கும் உலகத்தை பாருங்கள்

உலகம் உங்களை பார்க்க ஆரம்பிக்கும்

மஹாபெரியவா சரணம்

கிருஷ்ண பகவானின் கீதா உபதேசம்

என் சரீர சுத்தி ஒரு பாரத போரை போன்றது

நான் அர்ஜுனன் என்றால்

என் மனசு துரியோதனன்

என் நாக்கு சகுனி

என்னை இயக்குவது

கிருஷ்ண பரமாத்மாவான

மஹாபெரியவா

ஒரு ஆத்மா மனதுடன் நடத்தும் போர்

மஹாபாரதப்போருக்கு இணையானது

சென்ற வாரத்தொடரில் உலகிலேயே மனிதன் போடும் மிகப்பெரிய சண்டை அவன் அவனுடைய மனதிடம் போடு சண்டை என்பதை என்னுடைய காப்பியயை மையமாக வைத்து மஹாபெரியவா நமக்கெல்லாம் புரிய வைத்தார்.

இந்த தொடரிலும் நான் என் மனதுடன் போடும் சண்டை முடிந்த பாடில்லை.ஆம் மஹாபெரியவா என்னை செய்யும் சரீர சுத்தி இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இனி இந்த வார போராட்டத்தை பார்ப்போம். அதற்கு முன் நான் உங்களுக்கு என் வாழ்க்கையில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு ஒன்றை சொல்லியாக வேண்டும். எனக்கு எப்படி காபியும் டீயும் உயிரோ அப்படி ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவது. பிறகு தெருவில் வண்டியில் வைத்து விற்கும் பேல் பூரி பாணி பூரி மசாலா பூரி என்று எல்லாவற்றையும் வாங்கி சாப்பிடுவேன்.

ஹோட்டலுக்கு சென்றதும் எல்லோரும் இட்லி தோசை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் எனக்கு மட்டும் வெங்காயம் பூண்டு தூக்கலாக போட்டு சமைத்த பலகாரங்கள்தான் பிடிக்கும். இவைகளை சுடச்சுட வாங்கி சாப்பிடும்பொழுது அந்தசுவை என்னை சொர்க்கத்திற்கே அழைத்து சென்று விடும்.

என்னுடைய மனசும் நாக்கும் போட்டிபோட்டுக்கொண்டு என்னை அந்த வாசனையின் பால் இழுத்து செல்லும்..வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட என்னடா உன் நாக்கு இப்படி வெங்காயமும் பூண்டையும் சாப்பிட்டு விட்டு உன் வாயெல்லாம் நாறி தொலைக்கிறது என்பார்கள்..

என்னுடைய மகன் கூட குழந்தையை இருக்கும்பொழுது நான் கூப்பிட்டால் என்னிடம் வரவே மாட்டான். குழந்தையாய் இருக்கும் பொழுது அவனுக்கும் இந்த வாசனை பிடிக்காது.

இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்று உங்களில் சிலர் நினைக்கலாம்..நான் எப்படி இருந்தேன் இப்பொழுது எப்படி இருக்கிறேன்.மஹாபெரியவாளின் சரீர சுத்தி எவ்வளவு ஆழமானது எவ்வளவு பெரிய மனவலியை கொடுக்கும் என்பது உங்களுக்கு புரியும்..

மஹாபெரியவா என் வாழ்வில் அடி வைக்கும் வரை இந்த உணவு பழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இவ்வளவு ஏன். மஹாபெரியவா இந்த வெங்காயம் பூண்டை ஒரே இரவில் ஒழிக்கும் நொடி வரை சாப்பிட்டுக்கொண்டுதான் இருந்தேன்.

என்னுடைய சரீர சுத்தி படத்தில் ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைப்பேன். ஏனென்றால் இன்னிக்கு என்ன பாடமோ எதை விட வேண்டுமோ என்று தவியாய் தவிப்பேன். வாரத்தில் மூன்று உணவு பழக்கங்களையாவது விட வேண்டியிருக்கும். அப்பொழுதெல்லாம் என் மனது துடித்து துடிதுதான் அடங்கும்.

இப்பொழுது எளிமையாக எழுதி விடுகிறேன்.ஆனால் அதை அனுபவிக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் மரணத்தை பார்த்து விட்டுத்தான் என் மனசு அடங்கும்.. ஆனால் எல்லாசரீரசுத்தி வலியும் ஒரு இரவு மட்டும்தான். ஆனால் உத்தரவு வரும் வரை நான் தவிக்கும் தவிப்பு எனக்கு எழுத வார்த்தைகள் கிடைக்கவில்லை.

வலுக்கட்டாயமாக அறுபது வருட பழக்கத்தை ஒரே இரவில் விடா பிடியாக பிடுங்கும் பொழுது ஏற்படும் வலியை மஹாபெரியவா வாங்கிக்கொண்டு பழக்கத்தை விட்ட பலன்களை மட்டும் எனக்கு கொடுத்தார்.

ஆனால் என் சரீர சுத்தி முடிந்த பிறகு குரு ஷேத்திரத்தில் ஒரு மஹாபாரதப்போரே நடந்துமுடிந்த மன நிலையில் தான் நான் இருந்தேன். பாரதத்தின் கதா பாத்திரங்களுடன் என்னை ஒப்பிட வேண்டுமானால் என் மனதை துரியோதனனுடனும் என்னை அர்ஜுனனுடனும் என் உணவு பழக்கங்களை மற்ற துரியோனாதிகளுடனும் மஹாபெரியவாளை பாரதப்போரில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டிய கிருஷ்ண பரமாத்மாவாகவும் ஒப்பிடலாம்.

பாரதப்போரில் உயிரிழப்புகள் ஏராளம். ஆனால் என் சரீரசுத்தி போரிலும் மரணம் இருந்தது. நடந்த மரணம் எல்லாம் என்னுடைய தேவையற்ற அறுபது வருட உணவு பழக்கத்திற்குத்தானே தவிர உயிரழப்புக்கள் நிச்சயம் இல்லை.. நான் என்ற உயிர் காப்பாற்றப்பட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்..

இந்தப்பதிவை எழுதும் இன்று நான் திரும்பி பார்க்கிறேன். என்னால் நம்பவே முடியவில்லை. என் வாழ்க்கையில் பல முறை முயன்றும் என்னால் என்னுடைய எந்த பழக்கத்தையும் விட முடியவில்லை.ஆனால் இன்று என்னால் உணர முடிகிறது நம்முடைய மனதை வென்று விட்டால் வாழ்க்கையில் எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் என்று.

உங்கள் மனதை வெல்ல வேண்டுமானால் மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச தெய்வத்தை இறுக பற்றிக்கொள்ளுங்கள்.மனதையும் வென்று விடலாம் வாழ்க்கையையும் வென்று விடலாம். அதுவும் வலியின் வேதனை இல்லாமலே..

உங்கள் வாழ்க்கையயை நீங்கள் வழி நடத்துங்கள். பிறப்பின் இலக்கை அடையாளம்..உங்கள் மனசு உங்களை வழி நடத்த ஆரம்பித்தால் உங்கள் வாழ்க்கை தடம் புரண்டு விடும்.

வாருங்கள் உங்களை சரீரசுத்தி அற்புதத்துக்குள் அழைத்து செல்கிறேன்.

அன்று வியாழக்கிழமை

என்னுடைய இல்லத்திற்கு எங்கள் சொந்தங்கள் வெளி நாட்டிலிருந்து வந்திருந்தார்கள். ஒரு வாரம் தங்கி இருந்தார்கள். தினமும் மாலை நேரங்களில் ஹோட்டல்களின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு உணவு விடுதிக்கும் சென்று தங்களுக்கு . வேண்டியதை சாப்பிட்டு விட்டு எனக்கு வழக்கம் போல் என்னுடைய விருப்பமான மசாலா வகைகளை நிறைய வாங்கிக்கொண்டு வந்து விடுவார்கள்.

நான் வெளியில் செல்வதில்லை என்பதால் தாராளமாகவே வாங்கிக்கொண்டு வந்து விடுவார்கள். அன்றும் நிறைய உணவு வகைகளை வாங்கிக்கொண்டு வந்தார்கள். அன்று நான் ஓரளவிற்கு சாப்பிட்டு விட்டு மீதி உணவை மறுநாள் சூடு பண்ணி சாப்பிடலாம் என்று குளிர் ஸ்தான பெட்டியில் வைத்து விட்டேன். உணவு நன்றாகவே இருந்தது. மறு நாளும் அந்த உணவை ருசித்து சாப்பிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன்.

அந்த நாட்கள் கோடை வெயில் என்பதால் என் சொந்தங்கள் எல்லாம் இரவு என் மனைவி மற்றவர்களுடன் மொட்டை மாடிக்கு சென்று பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது என்னால் படியேற முடியாது என்பதால் நான் செல்லவில்லை. அப்பொழுது நேரம் இரவு எட்டு மணி முப்பது நிமிடம். நன் தனியாக வீட்டில் இருந்தேன்.

அன்று வியாழக்கிழமை என்பதால் அன்றும் மஹாபெரியவா குரலான "ஏன்டா " என்று சொல்லி அழைக்கும்குரலை எதிர்பார்த்தேன். சென்ற வாரம் பட்ட காபியின் வலியே இன்னும் குறைந்த பாடில்லை.அதனால் இன்று மஹாபெரியவா எனக்கு வலியை கொடுக்கமாட்டார் என்று நம்