Featured Posts

திவ்ய தேச தரிசனம்-006 திருவெள்ளறை


திவ்ய தேச தரிசனம்-006

திருவெள்ளறை

பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள காணொளி மூலம் இந்த திருவெள்ளறை கோவிலை உள்ளே சென்று தரிசித்து புண்ணியங்களை பெற்றுக்கொள்ளுங்கள்

திருவெள்ளறை சன்னதியின் முகப்பு தோற்றம்

.

கோவிலுக்கு செல்லும் வழி: திருவெள்ளறை என்னும் திவ்ய தேச கோவில் திருச்சிராப்பள்ளியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து இருபதாவது கிலோமீட்டரில் மண்ணச்சநல்லூர் அருகில் அமைந்துள்ளது இந்த திருத்தலம்.. இந்தத்திருத்தலத்தில் தங்குவதற்கு விடுதிகள் வசதி இல்லாததால் திருச்சிராப்பள்ளியில் தங்கிக்கொண்டு பெருமாளை சேவிக்கலாம்.

கோவில் அமைப்பு: பெரிய விசாலமான மதில்களை கொண்டது. காண்போர் கண்களை கவரும் வண்ணம் நந்த வனமும் அன்றைய நாளின் கிணறு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மூலவர்: நின்ற திருக்கோலத்தில் புண்டரீகாக்க்ஷன் அல்லது செந்தாமரை கண்ணன் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.

திருவெள்ளறை பெருமாள் தாயார்

தாயார்:: செண்பக வள்ளி என்னும் பங்கயற்செல்வி. இங்கு தாயாருக்கு தனியாக சன்னதி உண்டு.உற்சவ தாயாருக்கு பங்கஜவல்லி என்னும் திருநாமம்.

திருவெள்ளறை பெயர்க்காரணம் : இந்த கோவில் ஸ்ரீரங்கத்துக்கும் பழமையானது என்பதால் ஆதி வெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளறை என்றல் வெண்மையான பாறைகளால் ஆன மலை என்று பெயர்.. இதுவே திருவெள்ளறை என்பதன் பெயர்க்காரணம்.

தீர்த்தம்: திவ்ய கந்த ஷீர புஷ்கரணிகள் மணி கர்னிகாக என்று ஏழு தீர்த்தங்கள் கோவில் மதில்களுக்கு உள்ளாகவே அமைந்துள்ளன.

விமானம்: விமலாக்ருதி விமானம்

திருவெள்ளறை கோவிலின் உட்புறத்தோற்றம்

கோவிலின் சிறப்பு அம்சம்: எங்கும் இல்லாதவாறு இங்கு இரண்டு வாசல்கள் உள்ளன. அவைகள் உத்திராயண வாசல் தக்ஷிணாயன வாசல் என்று அழைக்கப்படுகிறது.தமிழ் மாதங்கள் தை முதல் ஆனி வரை உத்திராயண வாசல் வழியாகவும் ஆனி முதல் மார்கழி வரை தக்ஷிணாயன வாசல் வழியாகவும் சென்று வழிபட வேண்டும்.

சிறப்பு அம்சம்: மன்னர் சிபி சக்ரவர்திக்கு பெருமாள் வெள்ளை பன்றியாக காட்சி கொடுத்தால் இந்த சேக்ஷத்திரத்திற்கு ஸ்வீத புரி ( Swetha Puri) என்றும் பெயர். சக்கரத்தாழ்வார் ஆண்டாள் இவர்களுக்கு தனி சன்னதிகள் உண்டு. ஸ்ரீதேவி பூதேவி ஆதிசேஷன் சூரிய சந்திரர்கள் ஆகியோர் இங்கு மனித உருவில் வந்து காட்சி கொடுப்பது ஒரு சிறப்பு அம்சம்.

திருவெள்ளறை கோவில் தேர்

மங்களா சாசனம்: பெரியழுவார் திருமங்கைழவார் இருவரும் மங்களா சாசனம் செய்துள்ளனர்.

ஸ்தல விருக்ஷம்: வில்வம்

பழமை: இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது.

ஊ௦ர்: திருவெள்ளறை

மாவட்டம்:திருச்சி

மாநிலம்: தமிழ்நாடு.

கோவில் திருவிழாக்கள் : சித்திரை கோடை திரு விழா சித்திரா பௌர்ணமி கஜேந்திர மோக்ஷம் ஆவணி ஸ்ரீ ஜெயந்தி வீதி புறப்பாடு பங்குனி திருவோணம் நக்ஷத்திரத்தில் பிரும்மோட்சவம்

வழிபாட்டு நேரம்: காலை 7.00 மணி முதல் 1.15 மணி வரை மாலை :3.30 மணி முதல 8.00 .மணி வரை

தொலை பேசி: +91-431-2562243 - 9345118817

பிரார்த்தனை: குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு பிராத்தனை செய்து கொள்ளலாம்.

பிரார்த்தனை நிறைவேறிய பிறகு இங்குள்ள பலி பீடத்திற்கு திருமஞ்சனம் செய்யலாம். பொங்கல் செய்து பெருமாளுக்கும் தாயாருக்கும் படைத்தது விநியோகம் செய்யலாம்.

ஸ்தல வரலாறு: ஒரு முறை திருப்பாற்கடலில் பெருமாளும் தாயாரும் ஆனந்தமாக இருக்கும் பொழுது பெருமாள் தாயாரிடம் சொல்கிறார். பூலோகத்தில் உன்னுடைய கருணையால் அணைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றன.. இது எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது.உனக்கு ஏதாவது வரம் தர வேண்டும் உனக்கு என்ன வேண்டும் கேள் என்கிறார் பெருமாள்.

திருவெள்ளறை கோவில் நுழை வாயில்

அதற்கு தாயார் சொல்கிறார். உங்கள் திருமார்பில் எனக்கு வாசம் செய்யும் பாகியத்தை கொடுத்திருக்கிறீர்கள். இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும் என்று தாயார் சொல்கிறார். மேலும் தாயார் சொன்னது. இருந்தாலும் இந்த பாற்கடலில் தேவர்களை விட எனக்கு இன்னும் சுவாதீனம் வேண்டும் என்று கேட்கிறாள்.அதற்கு பெருமாள் பூலோகத்தில் நான் சிபி சக்கரவர்த்திக்கு தரிசனம் கொடுக்கும் பொழுது உன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றுகிறேன் என்று சொல்லி இங்குதான் மன்னருக்கு வெள்ளை பன்றி உருவில் காட்சி கொடுத்து தாயாரின் வேண்டுதலை நிறைவேற்றினார்.

நீங்கள் திருச்சிராப்பள்ளியில் விடுதியில் தங்கிக்கொண்டு அங்குள்ள சோழநாட்டு திவ்ய தேசங்களுக்கு எல்லாம் குடும்பத்துடன் சென்று வழிபடலாம். உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறி நீங்களும் உங்கள் குடும்பமும் குழந்தைகளும் நிம்மதியுடன் மன நிறைவான வாழ்க்கை வாழ மஹாபெரியவாளை ப்ரார்தித்துக்கொள்கிறேன்.

திருவெள்ளறை மூலவர் புண்டரீகாக்ஷ்பெருமாள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளி மூலம் இந்த திருவெள்ளறை கோவிலை உள்ளே சென்று தரிசித்து புண்ணியங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

https://www.youtube.com/watch?v=kZapNwhPnOM

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்