Featured Posts

குரு கானம்


பெரியவா சரணம் எப்பொழுதும் எம்மில் நீக்கமற நிறைந்தருளும் எம்பெருமானின் புகழ்பாடுதலை விடவும் மெச்சுதலான நிலையும் இவ்வையகத்திலுண்டோ..?!!! சங்கரம் போற்றி! ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர...

#ஸ்ரீகுருகானம் என்றும் சங்கரம் எதிலும் சங்கரம் எல்லாம் சங்கரமே இல்லை இனிபயம் எதிலும் வரும்லயம் ஈசன் தரும்பலமே எங்கும் சங்கரமே என்னுள் சங்கரமே! ஓம் சங்கராய ஓம் சங்கராய ஓம் சங்கராய் ஓம் சங்கராய (எங்கும் சங்கரம்...) காஞ்சி நகரிலே ஸ்தான லயம் காமாக்ஷீ அருள் நாத மயம் காமகோடி எனும் ஞான பதம் காக்கும் கருணா மூர்த்தி முகம் கச்சியிலே குரு சங்கரனாம்.... கவினுற அருளும் கற்பகமாம்..... சகலமும் தருகின்ற சதாசிவம் சங்கடம் நீக்கும் சங்கரனாம் ஓம் சங்கராய ஓம் சங்கராய ஓம் சங்கராய் ஓம் சங்கராய (எங்கும் சங்கரம்...) சாதகங்களின் சங்கமமாம் சாஸ்வத குருசசி சேகரனாம் பாதகங்களை போக்கிடுவான் பரமதயாளன் புங்கவனாம் கச்சியிலே குரு சங்கரனாம்.... கவினுற அருளும் கற்பகமாம்..... சகலமும் தருகின்ற சதாசிவம் சங்கடம் நீக்கும் சங்கரனாம் ஓம் சங்கராய ஓம் சங்கராய ஓம் சங்கராய் ஓம் சங்கராய (எங்கும் சங்கரம்...) எல்லாம் வல்ல பரம்பொருளாம் ஏகம்பத் தலம் மேவும் சாந்த ஸ்வரூபனாம் ஸ்ரீசசிசேகர சங்கரனின் அருட்கடாக்ஷம் அனைவரையும் காக்கட்டும்! சங்கரம் போற்றுவோம்!!! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square