குரு புகழ்-10

பெரியவா சரணம். #ஸ்ரீகுருப்புகழ் தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதன ....... தானானா பத்திப் பரவச முற்றுப் பணிந்திட சித்தத் தெளிவுட ... ... ... வரம்வேண்டி சித்தத் துறைபதி பத்திக் கனல்முகிழ் தித்திப் புடனொரு ... ... ... பாமாலை சித்தித் திருமகன் செல்லக் கச்சிம டத்துப் பெருமிறை ... ... ... சங்கரனே! புத்தித் தெளிவுட னத்தித் திறமுட சித்தத் திசைவொடு ... ... ... தருவாயே! நத்தித் தூய்பட சித்தச் சுவையுற பத்திப் புகலொடு ... ... ... உனைநாட சுத்திப் பெருவழி யுற்றுப் புகலென சித்தச் சீர்பல ... ... ... அகமூற கச்சித் திருமட சத்தித் தரிசன மொக்கச் சிறப்புற ... ... ... அருள்வாயே!
ஆதிபரமேஸ்வரனே கேரளத்துக் காலடியிலே ஆதிசங்கரனாக அவதரித்தார் என்றும், அந்த ஆதி நாயகனே 68-வது ஆசார்யராகத் தோன்றிக் கச்சிமடம் எனும் ஸ்ரீகாஞ்சி மடத்திலே மேவுகின்ற நம் மஹாஸ்வாமிகள் என்றுமாகத் தானே அனேகம் மஹாத்மாக்கள் சத் ஆத்மாக்கள் நமக்கெல்லாம் இன்றும் அருளுரைதனிலே கூறி வருகின்றனர். அந்த ஆதிசங்கரன், சுரேஷ்வராசார்யர், ஸர்வக்ஞாத்மர் எனும் வரிசையிலே இன்றளவிலும் ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் என பரமாத்ம ரூபத்திலே குருதேவர்கள் நம்மை ஆண்டருள்புரிகின்றனரே! நாமெல்லாம் சர்வ நிச்சயமாக பாக்கியசாலிகளன்றோ! அனுதினமும் அந்த ஆசார்யர்களின் திருப்பாதங்களை எண்ணி நமஸ்கரித்து வாழ்வோமானால், அவர்கள் நமக்குக் கூறிவருகிற அறிவுரைகள் படியாக வாழ்ந்தோமானால் பிறந்துள்ள இப்பிறப்பினிலேயே இவ்வாழ்விலேயே ஆனந்தமாகிய முக்தியை சர்வ நிச்சயமாக நாம் அனைவரும் பெறலாமே!
குருவடி பணிவோம்; குறையின்றி வாழ்வோம்! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.