Featured Posts

குரு பூஜை அற்புதங்கள் -15 புதிய அற்புதம்-II சங்கரன்- வசந்த கல்யாணி


குருவே சரணம் குரு பாதமே சரணம்

குரு பூஜை அற்புதங்கள் -15

புதிய அற்புதம்-II

சங்கரன்- வசந்த கல்யாணி

(மகன் சித்தி உறவு)

அன்று நவராத்திரி ஒன்பது நாள் பண்டிகை. இவர்கள் வீட்டின் அருகில் ஒரு காமாட்சி கோவில் உள்ளது.வழக்கமாக நவராத்திரி ஒன்பது நாளும் பாட்டு கச்சேரி நடனம் நாட்டியம் கதா காலக்ஷேபம் என்று நடக்கும். இந்த ஒன்பது நாளில் இந்த மூன்று சகோதரிகளில் ஒருவர் நாட்டியஆசிரியர்.

குறிப்பிட்ட நாளில் காலையில் இருந்தே மழை கொட்டிக்கொண்டிருந்தது.அவர்களுக்கு ஒரு நம்பிக்கை. மாலைக்குள் வானம் வெளுத்து விடும். மழையும் நின்று விடும். அப்படியே மழை நிற்கவில்லை என்றாலும் மஹாபெரியவாளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளலாம் என்ற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை.

இந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாலை வரை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தனர். மாலை ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரை இவர்களின் நடன நிகழ்ச்சி. இவர்கள் வேண்டிக்கொள்ளும் பொழுது தங்களுடைய நிகழ்ச்சிக்கு மட்டுமா வேண்டிக்கொள்வார்கள். எல்லோருக்காகவும் வேண்டிக்கொண்டார்கள். இவர்கள் வேண்டிக்கொள்ள வேண்டிக்கொள்ள மழை இன்னும் அதிகமாயிற்று.

கண்களை இருக்க மூடி ஒரு சில நொடிகள் மஹாபெரியவாளை நினைத்து த்யானம் செய்தனர். கொட்டும் மழை சட்டென நின்றது.

ஆச்சர்யத்தில் வாயடைத்து நின்று வானத்தை பார்த்தார்கள். வானத்து கருமேகங்கள் இப்போதைக்கு நிற்க மாட்டேன் என்று சொல்வது போல இருந்தது. ஆனால் கொட்டும் மழை சட்டென நின்றது.

நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்து முடிந்தது. எதிர் பார்த்ததை விட நிகழ்ச்சிக்கு ஏராளமான கூட்டம். நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்தனர் சகோதரிகள்.வெளியில் மழை கொட்ட ஆரம்பித்தது. விடிய விடிய நிற்காமல் மழை. வருண பகவான் பரமேஸ்வரனுக்கு கட்டுப்பட்டார் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

நம்பியவர்களுக்கு இது பரமேஸ்வர அற்புதம்

அறிவியலும் விஞ்ஞானமும் பேசுபவர்களுக்கு

பத்தோடு இது ஒன்று பதினொன்று

இவர்கள் வாழ்க்கையும் அப்படிதான் இருக்கும்

நிலையில்லாமல் ஊசலாடும் வாழ்க்கை

உருகும் பக்தியும் இறை நம்பிக்கையும் இருந்தால்

சோதனையான காலகட்டத்திலும் உங்களை

இறைவன் தாங்குவான்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square