Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -039


என் வாழ்வில் மஹாபெரியவா -039

பிரதி வியாழன் தோறும்

இனிமேல் நம் இயலாமைக்கு

விண்ணை கை காட்ட வேண்டாம்

நாம் வாழும் மண்ணிலேயே இருக்கிறார்

பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா

நாம் வாழும் மண்ணில்

பக்தியையை கொட்டுவோம்

கேட்டதும் கிடைக்கும் கேட்காததும் கிடைக்கும்

இந்த பதிவு உங்களுக்காக மஹாபெரியவாளின் ஒரு உச்சகட்ட அற்புதத்தை தாங்கி வருகிறது. அற்புதம் நடந்த நாள் சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரம் மணி 8.36..

இந்தியாவை பொருத்த வரை அணைத்து மாநில மக்களும் மதங்களையும் தாண்டி மஹாபெரியவா என்னும் ஒற்றை வார்த்தைக்கு கட்டுப்படுவதை நாம் அனுபவித்திருக்கிறோம்.

ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒரு வெள்ளைக்காரர் அவர் முகத்தை நான் பார்த்ததில்லை என் முகத்தை அவர் பார்த்ததில்லை. ஆனால் மஹாபெரியவா என்னும் ஒற்றை வார்த்தைக்கு அமெரிக்கர் காட்டியபக்தி நாம் காட்டும் பக்தியை விட எந்த விதத்திலும் குறைந்ததில்லை. அப்படிப்பட்ட ஒரு அற்புதத்தை மஹாபெரியவா வழக்கம் போல் என்ன மூலம் நிகழ்த்திய ஒரு சம்பவம் தான் இன்று நாம் அனுபவிக்கப்போவது.. இது சென்ற வாரம் நடந்தது.

உங்களுக்கு எல்லாம் தெரியும் நாம் இந்த புதிய இணைய தளத்திற்கு மஹாபெரியவா குடியுரிமை பெற்று இந்த மஹாபெரியவா இறை சாம்ராஜ்யத்தின் குடிமகனாக வாழத்தொடங்கி இருக்கிறோம்.

புதிய வீடு என்றாலே இன்னும் இதை செய்யணும் அதை செய்யணும் என்று யோசித்துக்கொண்டு இருப்போம் இல்லையா. நானும் சென்ற வாரம் அப்படிதான் நானும் யோசித்து கொண்டு இருந்தேன்.

நம்முடைய பழைய இணைய தளத்தில் நீங்கள் எழுதும் கமெண்டுகள் எல்லாம் எனக்கு மின்னஞ்சலில் வந்து விடும்..எனக்கும் உங்கள் கமெண்டுகளுக்கு காலம் தாழ்த்தாமல் பதில் எழுதி விடுவேன்.. என்னிடம் பலர் சொல்லியிருக்கிறார்கள்.. நீங்கள் ஒற்றை விரலில் பதிவையும் எழுதிக்கொண்டு கமெண்டுகளுக்கு பதிலும் எழுத வேண்டாமே என்று அறிவுரை சொன்னார்கள்..

ஆனால் மஹாபெரியவா என்னிடம் சொன்னது அவர்களுக்கு எப்படி தெரியும்.. மஹாபெரியவா சொன்னது இதுதான். "உன்னுடைய எழுத்துக்களை மத்தவா மதித்து அவாளுடைய அபிப்ராயங்களை எழுதும் பொழுது அவாளுடைய எழுத்துக்களை நீ மதிக்க வேணாமா..நீயும் பதில் எழுது. உனக்குத்தான் பத்து விரல்களின் பலத்தை ஒரு விரலில் கொடுத்திருக்கிறேனே. தயங்காம எழுது என்றார். நானும் அன்றிலிருந்து எவ்வளவு சிறிய கமெண்ட்டாக இருந்தாலும் சிரமத்தை பார்க்காமல் பதில் எழுதி விடுவேன்..

ஆனால் நம்முடைய இப்போதைய புதிய இணையதளம் எல்லா வகையிலும் மிகவும் சிறந்ததாக இருப்பதாக என்னிடம் பக்தர்கள் பலரும் சொன்னார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை உங்கள் கமெண்டுகள் எனக்கு மின்னஞ்சலில் வருவதில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு பதிவையும் நான் அவ்வபோது பார்த்து உங்கள் கமெண்டுகள் இருந்தால் உடனே பதில் எழுதுவதும் கூடவே பதிவுகள் எழுவதையும் செய்து கொண்டிருந்தேன்.. என்னுடைய காலமும் நேரமும் எனக்கு போதவில்லை..

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி நம்முடைய மஹாபெரியவா செல்ல குழந்தைகளான விஷ்ணுமாயாவையும் சங்கரனையும் கமெண்டுகள் மின்னஞ்சல் மூலமாக வருவதற்கு என்னசெய்ய வேண்டும் என்று பார்க்க சொன்னேன். அவர்கள் இரண்டு நாட்கள் கழித்து எனக்கு பதில்கொடுத்தார்கள்.

நீங்கள் எல்லோரும் இணைந்து இந்த இணைய தளத்திற்கு வருட சந்தா செலுத்தி என்னை எழுத வைத்தீர்கள்.. மின்னஞ்சல் மூலம் கமெண்டுகள் வருவதற்கு மேலும் வருடத்திற்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கட்டவேண்டும் என்றார்கள். இதையும் அவர்களே கட்டி விடுகிறோம் என்றார்கள். ஆனால் என் மனசாட்சி இதற்கு சம்மதிக்கவில்லை. நான் முடிவு செய்தேன்.. மறு நாள் மஹாபெரியவாளை கேட்டுவிடலாம் என்று.

மறு நாள் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது நான் மஹாபெரியவாளிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்து கொண்டேன்.

"பெரியவா முதலில் நான் மற்ற இணைய தளங்களில் எழுதிக்கொண்டிருந்தேன். அங்கு பலவிதமான காரணங்களால் எழுத முடியாமல் போனது. நானும் மிகுந்த மன வருத்தத்துடன் உங்களிடம் கேட்டேன். நான் உங்கள் அற்புதங்களை தானே எழுதறேன் பெரியவா. ஆனால் நான் எழுதக்கூடாததை எழுதி விட்டதாக நினைத்து என்னை அவர்கள் இணைய தளத்தில் எழுத வேண்டாம் என்றார்கள்.. நானும் உங்களிடம் முறையிட்டேன். நீங்கள் என்னிடம் சொன்னீர்கள்.

"நீ செடியா முளைச்சிடேடா. நீ மரமாக வேண்டாமா. அதுனாலே செடியை பிடுங்கி ஓர் நல்ல இடத்தில நட்டுருக்கேன். நீ விருக்ஷமா வளரணும்டா என்றீர்கள்.

நானும் கவலையை மறந்து எழுத ஆரம்பித்தேன். இப்பொழுது இந்த இணையதளம் எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கிறது பெரியவா. ஆனால் உங்கள் பக்தர்கள் எழுதும் கமெண்டுகள் எனக்கு மின்னஞ்சலில் வருவதில்லை.கமெண்டுகள் மின்னஞ்சலில் வர வேண்டுமானால் மேலும் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கட்டவேண்டும் என்கிறார்கள்.

நான் இதற்கு மேலும் உங்களுடைய பக்தர்களுக்கு சிரமம் கொடுக்க விருப்பமில்லை. நீங்கள் தான் இதற்கு ஒரு தீர்வு சொல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு மஹாபெரியவா பதிலுக்கு காத்திருந்தேன்.

மஹாபெரியவா சொன்னார். "ஏண்டா நீ வேணா அவாளுக்கு எழுதி கேளேன் என்றார்.

G.R.: பெரியவா அவா எல்லாம் அமெரிக்கா மனுஷாள். அவாளுக்கு என்னதான் உங்களுடைய அற்புதங்களை எல்லாம் எழுதினாலும் புரிஞ்சிப்பாளா பெரியவா. நீங்கள்தான் ஒரு நல்ல தீர்வு சொல்லணும் பெரியவா என்றேன்.

பெரியவா: நீ ஓர் இந்தியருக்கு எப்படி எழுதிவையோ அப்படி எழுது, என்ன பதில் வருது பார்க்கலாம் என்றார்கள்.

G.R. பெரியவா நான் என்னதான் எழுதினாலும் அதை அவா பார்த்து எனக்கு பதில்போட ஒரு பத்து நாட்களாவது ஆகும். அதற்கு பிறகு அவா இதற்கு சம்மதித்தாலும் இன்னும் ஒரு மாசம் ஆகும் பெரியவா. என்று சொல்லிவிட்ட அமைதியக இருந்தேன்.

பெரியவா: நீ எழுதுடா. அவா என்ன சொல்லறா பார்க்கலாம் என்றார்.

G.R. சரி பெரியவா நான் இப்பவே எழுதறேன்.

நானும் காலம் தாழ்த்தாமல் அந்த வினாடியே உட்காந்து எழுதி மின்னஞ்சலில் அனுப்பிவிட்டேன். நான் எழுதிய தேதி டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி. ஒவ்வொரு நாளும் பதிலை எதிர்ப்பது ஏமாந்து போனேன். இப்படியே பத்து நாட்கள் ஓடி விட்டன. நானோ தினந்தோறும் என்னடைய கடமையை மட்டும் செய்து கொண்டிருந்தேன்.

டிசம்பர் மாதம் முப்பதாம் தேதி மாலை நேர பிரார்த்தனையில் எல்லோருடைய பிராத்தனைகளையும் முடித்து விட்டு நான் மஹாபெரியவாளிடம் பேச ஆரம்பித்தேன்..

G.R.: பெரியவா எனக்கு இன்னும் விரலில் பலத்தையும் அதிக நேரத்தையும் உருவாக்கிக்கொடுங்கள் நான் இப்படியே எழுதிக்கொண்டு இருக்கிறேன். வெள்ளைக்காரா கிட்டே எல்லாம் போய் கெஞ்ச வேண்டாம் பெரியவா. என்று சொல்லி முடித்து நின்று கொண்டிருந்தேன்.

பெரியவா';: நீ ஒன்னு செய்யுடா. நாளைக்கு வரைக்கும் பாரு. ஒன்னும் பதில் கிடைக்கவில்லை என்றால் அவன் கேட்கிற பணத்தை நானே அவனுக்கு கொடுக்கறேன்.கவலை படாமல் நீ போய் எழுது. மத்ததை நான் பார்த்துக்கறேன்.என்றார்.

G.R: சரி பெரியவா என்று சொல்லி வந்து வழக்கம் போல் எழுத ஆரம்பித்தேன்.

எனக்கும் எழுதும் பொழுது இதே சிந்தனை. மஹாபெரியவாளை பற்றி விவரித்து முகம் தெரியாத வெள்ளைக்காரனுக்கு மின்னஞ்சல் அனுப்பியதற்கு இன்று வரை பதில் இல்லை. என்ன இருந்தாலும் எல்லாத்தையும் மஹாபெரியவா பாத்துப்பா என்று நான் என்னுடைய கவனத்தை எல்லாம் அடுத்த நாள் வெளிவரப்போகும் பதிவிலேயே கவனத்தை செலுத்தினேன்.

மறு நாள் மஹாபெரியவாசொன்னபடியே நான் பதிவுகள் எழுதுவதில் மட்டும்கவனத்தை செலுத்தினேன். இரவு எட்டு மணி பதினைந்து நிமிடங்களுக்கு மஹாபெரியவா என்னிடம் சொல்கிறார்.

"ஏண்டா அந்த வெள்ளைக்காரா எதாவது பதில் போட்டாளா என்று கேட்கிறார்.

GR: இல்லை பெரியவா.அவா எல்லாம் வெள்ளைக்காரா பெரியவா. நான் என்னஎழுதினாலும் அவா மதிக்கவே மாட்டா என்றேன்.

பெரியவா: நீ ஒன்னு செய். உன்னுடைய மின்னஞ்சல் என்பாயே அதில் போய் பாரு.என்றார்.

GR: மனசுக்குலயே ஆமாம் பத்து நாட்கள் ஆச்சு ஒரு பதிலையும் காணோம் இனிமே அவா எப்போ எழுதி என்னிக்கு எனக்கு மின்னஞ்சல் மூலம் கமெண்ட் வரபோறது. மஹாபெரியவா சொல்லிட்டா. நான் என்னசொல்ல முடியும். சாதாரணமாக மஹாபெரியவா கிட்டே பேசறதுனா எவ்வளவு தெய்வத்தை வேண்டிக்கொண்டு பேசணும்.

நானும் மஹாபெரியவா சொன்னபடி மின்னஞ்சலில் சென்று பார்த்தேன்.என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை முதல் கமெண்ட் என்னுடைய மின்னஞ்சலுக்கு வந்திருக்கிறது. எனக்கு மின்னஞ்சல் தெரியவில்லை மஹாபெரியவாளின் விஸ்வருபம் தான் தெரிந்தது.

ஆமாம் கடைசியாக மஹாபெரியவா அற்புதத்தை நிகழ்த்தி விட்டார். வெள்ளைக்காரனும் மஹாபெரியவா பக்தியில் வீழ்ந்தான் நேரம் சரியாக இரவு- எட்டு மணி முப்பத்தியொரு நிமிடம். முதல் கமெண்ட் என் மின்னஞ்சலுக்கு வந்து விட்டது.

கமென்டின் சாராம்சம் இதுதான்.<