எழுத்தாளர் அறிமுகம் - செந்தில்நாதன்

என் உரை
எழுத்தாளர் அறிமுகம்
செந்தில் நாதன் இவர் உங்களுக்கெல்லாம் பரிச்சயம் இல்லகவராக இருக்கலாம்.. ஆனால் இந்த இணைய தளத்தின் அஸ்திவார கற்களில் இவரும் ஒருவர்.
இன்று பசுமை நினைவுகளாக என் இதயத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது. நான் ஒரு மஹாபெரியவா இணைய தளத்தை ஆரம்பித்து அதில் என்னுடைய மஹாபெரியவா காதலை உள்ளம் உருக வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.. அந்த ஆசைக்கு ஒரே இரவில் உயிர் கொடுத்தவர் சகோதரர் செந்தில் அவர்கள். இவருக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள்.
இவர் நம்முடைய முந்தய இணைய தளத்தில் திருப்புகழ் எழுதி கொண்டிருந்தார். அவரது வேலை பளு காரணமாக நடுவில் அவரால் பதிவுகளை வெளியிட முடியாமல் இருந்தது.நேற்று நான் அவரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு இது விஷயமாக பேசினேன். அப்பொழுது அவர் இன்றில் இருந்து வாரம் ஒரு திருப்புகழ் பொருளுடன் வெளியிடுவதாக சொன்னார்.
இதோ செந்தில் அவர்களது முதல் திருப்புகழ் பதிவு உங்களுக்காக. உங்கள் எண்ணங்களை இந்த இணைய தளத்தில் பகிர்ந்து கொண்டு செந்தில் அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
என்னஅற்புதம் பாருங்கள். ஒரு புறம் சாணு புத்திரன் அவர்களின் குருபுகழ் இன்னொரு புறம் செந்தில் அவர்களின் திருப்புகழ்.. இந்த இணைய தளம் சகோதரத்துவத்துக்கும் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துவதற்கும் பெயர் போனது.. மஹாபெரியவா நமக்கெல்லாம் சொல்லிக்கொடுத்துவிட்டுப்போன அத்தனை மனித நேய பண்புகளையும் பின்பற்றி மற்றவர்களுக்கு ஒரு வாழும் உதாரணமாக நாளும் வாழ்ந்து வளர்ந்து வருகிறது.
உங்களுடன் சேர்ந்து சகோதரர் செந்திலை நானும் வாழ்த்துகிறேன். இவரது எழுத்துக்கள் அந்த அருணகிரி நாதரையே அவதாரம் எடுக்க வைக்கும் அளவிற்கு சபையேறட்டும்
செந்தில் செந்தில் குடும்பத்தாரும் வாழ்க வளர்க
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்று உங்கள் காயத்ரி ராஜகோபால்
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்