குரு கானம்

பெரியவா சரணம். அற்புதனின் அதிசுந்தரமான தரிசனம்... அருள்தரும் வள்ளலாய் ஆச்சார்யன் ஆடும் ஊஞ்சல் தரிசனம்.. கண்ணாரக் காண்போர்க்கெல்லாம் களவெற்றி கைகூடுமன்றோ!
சடைமேல் கங்கையும் திங்களும் புடைசூழும் பெருமானின் ப்ரத்யக்ஷ சிவசக்தியின் அம்சமாய் ஜெகத்குருவின் அவதாரம் ஆடும் ஊஞ்சலைக் கண்டதும் அடியவனின் மனமும் அழகுற ஓர் ஊஞ்சல் பாட்டினைப் பாட ஆரம்பிக்கின்றதே! அவர் அருள் இருந்தால்.மட்டுமே அவர் தாள் வணங்கிட முடியும் என்பர். அவருடைய அருளால் அழகான கானம் ஒன்றும் கிட்டிட வேண்டுமென ப்ரார்த்தித்துக் கிண்டு பாஉவோமே!
ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர
#ஸ்ரீகுருகானம் பொன்னூஞ்சல் ஆடி இருந்தார் - காஞ்சி குரு நாதன் பொன்னூஞ்சல் ஆடி இருந்தார் நங்கை ஒரு பாதியும் மேவும் கங்கை பிறை சூடிய நாதன் மங்கை உறைத் திருத்தலமேகி அங்கை யருள் ஜெகத்குருவாக (பொன்னூஞ்சல்...) பொன்னார் திரு மேனியனாக முன்நாள் வினை கலைவதற்காக கண்ணால் அருள் புரிவதற்கென்றே செந்நா வுரை தந்திடவேண்டி (பொன்னூஞ்சல்...) நான்மறையும் நன்கு விளங்க காண்பரையும் காத்து துலங்க வான்மதியாள் குளிரிதம் தந்தே தேன்சுவையாய் சந்ததம் அருளி (பொன்னூஞ்சல்...) பக்தியுடன் அங்கம் துலக்கி சித்திபெற சங்கம் புகுந்து சக்திசிவம் அகமுற நினையும் பக்தர்களைக் காத்தருள் குருவாய் (பொன்னூஞ்சல்...) அறிவுத் திருக் கோயிலான அண்ணலின் தரிசனம் கண்டு போற்றிப் பஅடி அனைவருக்காகவும் ப்ரார்த்திக்கையில்.மனம் வெகுவான ஆனந்தத்த்பை அடைகிறத்ஹே. அங்கரா. எல்லோரையும் காப்பாற்றுங்கள் ஸ்வாமீ/என ப்ரார்த்திப்போம்.
குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவஅ கடாக்ஷம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.