திவ்ய தேச தரிசனம்-007

என் ஆசான் மஹாபெரியவா
திவ்ய தேச தரிசனம்-007
புள்ளம் பூதங்குடி

மூலவர். வல்வில் ராமர் தாயார்: பொற்றாமரையாள்
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்புள்ளம்பூதங்குடி.. இங்கு உற்சவர் வல்வில் ராமர். சதுர் புஜங்களுடன் சேவை சாதிக்கிறார். இந்த ராமர் ஸ்ரீராமனுக்கும் க்ரித ராஜனுக்கும் ப்ரத்யக்ஷ்மனவர். தாயார் பொற்றாமரையாள். ராமர் சயன கோலத்தில் கிழக்கு முகமாக பள்ளிகொண்டிருக்கிறார்.
திருமங்கை அழவார் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இங்குள்ள பெருமாள் கோதண்டத்தை மட்டுமே தன கைகளில் வைத்தும்கொண்டு சீதா தேவியை பிரித்த நிலையில் மிகுந்த மன வருத்தத்துடன் காட்சி அளிக்கிறார்.

புள்ளம் பூதங்குடி ராஜ கோபுரம்
ஆனால் திருப்புட்குழியில் ஜடாயுவுக்கு ஈமக்கடன்களை செய்யும் பொழுது கூடவே இருந்த பூமா தேவி இங்கு ராமனுடன் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். புள்ளினத்தை சேர்ந்த தன் தந்தைக்கு நிகரான ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ததால் இந்த தலம் புள்ளங்குடி என்று அழைக்கப்படுகிறது.இங்கு க்ரித ராஜன் கடுமைக தவம் புரிந்து ராமபிரானை சதுர் புஜங்களுடன் தரிசனம் செய்ததால் இங்குள்ள தீர்த்தம் க்ரித தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

கோவிலின் உட்புறத்தோற்றம்
எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணர் தனுக்குத்தானே ப்ரத்யக்ஷமாகி சேவித்த ஸ்தலமாகும். சக்கரவர்த்தி திருமகன் ராமபிரான் இங்கு புன்னை மரத்தின் அடியில் அமர்ந்து சிரமபரிகாரம் செய்து கொண்டிருந்த பொழுது ராமனின் ஆத்மாவை தரிசன செய்தார்.. திருமங்கை அழவார் இங்கு தவம் செய்தபொழுது ராமபிரான் சங்கு சக்கரம் ஆகியவைகளுடன் காட்சி கொடுத்ததால் இங்கு மட்டுமே ராமர் சங்கு சக்கரத்துடன் காட்சி கொடுக்கிறார்.
மண்டலங்குடி இங்கிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..இங்குதான் தொண்டரடிப்பொடி அழவார் அவதரித்தார். பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமி தேவி இங்குதான் நாராயண தத்துவத்தை உலகிற்கு உணர்த்தினார். இந்தக்கரணத்தாலும் இந்த திருத்தலத்திற்கு புள்ளம்பூதங்குடி என்ற பெயர் வந்தது என்று சொல்லுவார்கள். இந்தக் கோவில் விமானம் சோபன விமான அம்சத்துடன் ஒத்துப்போகிறது.
கணவன் மனைவி இடையே கருத்து வேறு பாடுகள் பிரிந்து இருக்கும் நிலை மாறவும் சத்ரு சம்ஹராம் செய்யவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம்..குழந்தை பாக்கியத்திற்கு இங்கு வேண்டிக்கொள்ளலாம். உங்களுடைய பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறி மனஅமைதியுடன் உங்கள் வாழ்க்கை அமைய நீங்கள் இங்குள்ள வல்வில்ராமரை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நான் உங்களுக்காக மஹாபெரியவாளை சேவித்து பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

வல்வில் ராமர் உற்சவர்
கலியின் விகாரங்கள் எத்தனையோ. கலியின் கொடுமைகள் அனைத்தும் உங்களை அண்ட வேண்டாம். உங்கள் நல்ல மனது உங்களிடமே இருக்கட்டும். மஹாபெரியவாளை குருவாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை வழி நடத்துங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்