top of page
Featured Posts

இந்து மதம் ஒரு வாழும் முறை -05


இந்து மதம் ஒரு வாழும் முறை -05

ஆச்சாரம் தீண்டாமை

மஹாபெரியவாளின் பார்வையில்

மனிதனின் ஆரா

மஹாபெரியவாளின் பார்வையில் ஆச்சாரம் நம்மை இறைவனுக்கு அருகில் கொண்டு செல்லும்.. தீண்டாமை என்பது நம்மை நரகத்திற்கு இட்டு செல்லும் என்பதுதான்... முதலில் ஆச்சாரம் என்றால் என்ன என்பதை மஹாபெரியவா பார்வையில் பார்ப்போம்.

ஆச்சாரம் என்னும் சொல்லில் இருந்து சாரத்தை மட்டும் எடுத்து அலசுவோம். இப்பொழுது வீடு கட்ட சாரம் கட்டித்தானே வீட்டை காட்டுகிறார்கள்.. வீடு கட்டி முடிந்தபின் சாரத்தை பிரித்து போட்டுவிடுவார்கள்.

நிரந்தரமற்ற சாரம் எப்படி நிரந்தரமான வீட்டிற்கு உதவுகிறதோ அதே போல் ஆச்சாரம் என்னும் சாரம் நிரந்தரமான இறை உலகிற்கு செல்ல வழி வகுக்கிறது. சாரம் என்பது வீட்டிற்கு கட்டும் சாரத்தை போன்றது. ஆச்சாரம் என்பது கட்டி முடிக்கப்பட்ட வீடு போன்றது.

இப்பொழுது தீண்டாமை என்றால் என்ன என்று பார்ப்போம்..மஹாபெரியவாளை பொறுத்தவரை ஒரு சமூகத்தினரை தீண்டாமை என்று சொல்லி தள்ளி வைப்பது மிகப்பெரிய பாவம்..அப்படியானால் தீண்டாமை என்பது என்ன?

ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்களுடைய குண நலன்களுக்கு ஏற்ப உடலை சுற்றி ஆரா என்னும் சூஷ்ம உடல் இருக்கிறது.. இப்பொழுது ஒரு சன்யாசி தன்னுடைய உடலை மட்டுமல்லாமல் உள்ளத்தையும் புடம் போட்டு வைத்து கொள்வார்கள்.

இவர்களுடைய ஆரா மிகவும் சக்தி வாய்ந்தது. சக்தியற்ற ஒரு ஆரா இந்த சக்தி வாய்ந்த ஆராவை நெருங்கும் பொழுது சந்நியாசியின் ஆரா நலிந்த ஆராவை தூக்கி அடித்து விடும். இல்லையென்றால் நலிந்த ஆராவை கொண்டவருக்கு சித்த பிரமை பிடித்து விடும்.

நலிந்த மோசமான ஆராவை கொண்டவர்கள் சக்தி வாய்ந்த சன்யாசி ஒருவருக்கு உணவு பரிமாறினால் கூட சக்தியற்ற ஆராவை கொண்டவரின் குணங்கள் சந்நியாசியை பாதிக்கும்.

இது சந்நியாசிக்கு மட்டுமல்ல. நம் எல்லோருக்கும் பொருந்தும்.. இப்பொழுது புரிகிறதா. ஆசாரத்தை கடைபிடிப்பவர் மற்றவர்கள் வீட்டில் சாப்பிடுவதை கூட தவிர்ப்பார்கள். இதற்கு தீண்டாமை என்று சொல்கிறோம். அது மிகப்பெரிய தவறு.

இதை ஒரு கதையின் மூலம் பார்ப்போம்.

ஒரு நடுத்தர வயதை கொண்ட சன்யாசி ஒருவர் ஊர் ஒன்றாக சென்று ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் உணவை சாப்பிடுவார். இந்தசன்யாசி சன்யாச இலக்கணப்படி வாழும் சன்யாசி கிடையாது. வாழ்கை வெறுத்து போய் காவி அணிந்த ஒரு சன்யாசி.

ஒரு ஊரில் இந்த சன்யாசிக்கு மிகுந்த பசி எடுத்து விட்டது.. உடனே அந்த ஊரில் ஒரு வீட்டில் சென்று யாசகம் கேட்டார். அந்த வீடு அம்மாவும் தான் உணவு அளிக்க தயாராக இருப்பதாகவும் ஆனால் தனக்கு உடல் நலம் சரியில்லை. ஆகவே பக்கத்து வீட்டு பெண்மணியை அழைத்து உணவு பரிமாற சொன்னாள். சன்யாசியும் பசியின் மிகுதியால் தலை வாழை இலையில் பரிமாறிய உணவு வகைகளை சாப்பிட்டார்.

கடைசியில் ஒரு வெள்ளிக்கிண்ணத்தில் பாயசம் பரிமாறப்பட்டது. அந்த பாயசத்தை குடித்து முடித்து விட்டு அந்த வெள்ளி கிணத்தையே பார்த்து கொண்டிருந்தார் சன்யாசி... அந்த சந்நியாசிக்கு அவரை அறியாமல் அந்த வெள்ளிக்கிண்ணத்தை தன்னுடைய பையில் போட்டுகொண்டு கிளம்பி விட்டார். வெகு தூரம் நடந்து சென்ற பிறகு ஒரு மரத்தடியில் அமர்ந்து அந்த திருடிய வெள்ளிக்கிண்ணத்தை பார்த்தார்.

உணமையிலேயே அந்த சந்நியாசிக்கு இந்த மாதிரி வழக்கம் கிடையாது. ஆனால் எப்படி இதை திருடினோம் என்று யோசித்தார். அவருடைய மனம் இந்த திருட்டை ஏற்க மறுத்து விட்டது. முடிவு செய்தார்.. அந்த வீட்டிற்கே சென்று வெள்ளிக்கிண்ணத்தை வைத்து விட்டு வந்து விடலாம் என்று தான் சாப்பிட்ட வீட்டிற்கு கிளம்பினார்.

அந்த வீட்டை அடைந்து வீட்டிற்குள் நுழைந்து வெள்ளிக்கிண்ணத்தை வைத்து விட்டு வெளியே வந்து விட்டார். அப்பொழுது தனக்கு உணவை பரிமாறிய பெண்மணியின் வீட்டில் இருவர் அந்த பெண்ணை எதோ திருட்டு குற்றத்திற்காக சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். சந்நியாசிக்கு புரிந்து விட்டது. திருட்டை புரியும் ஒரு பெண்மணி கையால் சாப்பிட்டதனால் அந்த திருட்டு குணம் தனக்கும் வந்து விட்டதை உணர்ந்தார்.

இப்பொழுது புரிகிறதா. நம்மில் பலரும் மண்ணோடு மண்ணாக போகும் இந்த ஸ்தூல சரீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அழகு என்ற பெயரில் எவ்வளவு நேரமும் பணமும் செலவழிக்கிறோம். ஆனால் இறைவனை சென்றடைய நமக்கு வழியை காட்டும் ஆத்மாவின் அழகை பற்றி என்றாவது ஒரு நாள் கவலை பட்டிருப்போமா.

இனிமேலும் ஆச்சாரம் என்றால் தீண்டாமை என்னும் தவறான புரிதலை கை விடுங்கள். நீங்களே ஒரு நாற்பத்தி எட்டு நாட்களுக்கு உங்கள் கவனத்தை உங்கள் ஆத்மாவின் பக்கம் திருப்புபங்கள்.

உங்கள் சிந்தனைகள் உயர்வு பெரும் பேசும் பேச்சுக்கள் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணர ஆரம்பிப்பீர்கள். இத்தனை நாட்களும் வீணாக போனதே என்ற ஏக்கம் வந்து விடும்.

எப்படி ஆத்மா சாட்சியாக வாழலாம்?

இதற்கு என்னசெய்யவேண்டும் தெரியுமா? உங்கள் எண்ணங்கள் உதயமாகும் பொழுதே உங்கள் ஆத்மாவை சாட்சியாக வைத்து எண்ணங்களை தேர்ந்தெடுங்கள். உங்களது ஆத்மா உங்களுக்கு வேண்டாமா. பரவாயில்லை அந்த ஆத்மாவின் இடத்தில் மஹாபெரியவாளை கொண்டு நிரப்புங்கள்.

நம்முடைய அத்தனை பேச்சுகளும் செயல்களும் எண்ணங்களை ஆதாரமாகக்கொண்டுதான் பிறக்கிறது. ஒரு சக்தி வாய்ந்த ஆத்மா உங்களை வழிநடத்த ஆரம்பித்தால் நீங்கள் எந்த காரணத்தை கொண்டும் தவறு இழைக்கவோ பாவங்கள் செய்யவோ வாய்ப்பே இல்லை.

இதுவே பழகி விட்டால் உங்களுக்கு லௌகீக வாழ்க்கையில் கவலை என்ற பெயரில் வாழ்கை விசாரத்தில் ஈடுபடுவதை விட ஆத்மா விச்சாரம் உங்களுக்கு பெரிதாக படும்.

எப்பொழுது உங்களை உங்கள் ஆத்மா உங்களை வழி நடத்த ஆரம்பிக்கிறதோ அப்பொழுதே உங்கள் சிந்தனைகள் செயல்கள் எல்லாமே அடியோடு மாறிவிட்டதை உணர்வீர்கள். நீங்கள் உங்களை உணர்வது மட்டுமல்லாமல் சமுதாயம் உங்களை பார்க்கும் பார்வை மாறும்..

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page