Featured Posts

ஸ்ரீகுருகானம்


பெரியவா சரணம்

ஐயன், கருணாகரானந்த மூர்த்தி, அபயஹஸ்த சாந்தஸ்வரூபியான ஸ்ரீமஹாபெரியவாளை சரணடைந்தோர்க்கு அவருடைய அவ்யாஜகருணை கடாக்ஷமானது ஒரு அற்புதமான கவசமல்லவோ! சமீபத்திலே ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கல்யாண மஹோத்ஸவத்திலே ஸ்ரீஐயப்பன் மேலே பக்தர்கள் பாடிப் போற்றிய "வன்புலியின் மீதினிலே..." எனும் பாடல் அடியேனின் மனத்தினிலே ஒரு அபரிமிதமான மகிழ்வை ஏற்படுத்தியது எனச் சொன்னால் மிகையாகாது. அந்தப் பாடலின்லின் சந்தத்திலேயும், அதே ராகத்திலே பாடும்படியாக அமைந்துள்ள ஒரு குருகானம் வேண்டும் என ஆவல் எழுந்தது. உங்கள் அனைவரின் ப்ரார்த்தனையாலும் அது செவ்வனே அமைய வேண்டிக் கொண்டு தொடங்குகிறேன். அவர் அருளாலே அவர் தாள் பணிவோம்!

ஜய ஜய சங்கர... ஹர ஹர சங்கர...

#ஸ்ரீகுருகானம் கச்சிநகர் வீதியிலே – அந்த காலகண்டன் ரூபியுமாய் – சங்கரா பத்தியுடன் பார்த்திருந்தோம் – உந்தன் பாதமலர் போற்றுகின்றோம்! (1) அஞ்சுகமுன் அருளாலே – பஞ்ச பூதமுடை உடலினுள்ளே – சங்கரா நெஞ்சமதில் நின்னுருவை – நித்தம் தந்தருள வேணுமையா! (2) குந்தகமும் குறையாவும் – கொண்ட வாழ்விதனில் நிறைவாக – சங்கரா உந்தனருள் காத்திடவே – எந்தன் சிந்தனையில் நிறைவாயே! (3) வஞ்சியவள் அருளாலே – பந்த பாசமெனும் கடலினிலே – சங்கரா தஞ்சமென சரணடைந்தோம் – உந்தன் பாதநிழல் பணிவோமே! (4) எம்மையெமக் கறிவித்துமே – நாதன் இணையடி உணரவைத்தே – சங்கரா மும்மைவினை தீர்ப்பதற்கே – உந்தன் ஆளுமையில் ஏற்பாயே! (5) காந்தமலர் சோதியுமாய் – சந்த நாதமிதில் போதகமாய் – சங்கரா வந்துநிறை வேதனுமாய் – தர்ம வாழ்வுதனை அருள்வாயே! (6) நீறணிந்த திருமேனி – நெற்றி மேற்பொதுயும் குங்குமத்தால் - சங்கரா ஆறணிந்த சடையோனாய் – நிதம் நாதியெனக் காப்பாயே! (7) சொல்லச்சொல்ல இனித்திடுமே – சொக்கத் தங்கமுந்தன் நாமமுமே – சங்கரா சொல்லியழும் முன்னமுமே – எம்மைக் காத்தருளும் செவ்வருளே! (8) ஆதியந்தம் ஏதுமில்லா – எங்கள் அப்பனம்மை ஆனாயே – சங்கரா சோதிவடி வானவனே – எம்மை சோதித்ததும் போதுமையா (9) பத்துப்பாட்டு பாடிவரும் – எங்கள் பக்திதனை ஏற்றிடுவாய் – சங்கரா நித்தமுனைத் தொழுதிடவே – எம்மை ரக்ஷிப்பதும் நின்னருளே! (10) பெரியவா சரணம்! பெரியவா சரணம்! ஸ்ரீமஹாபெரியவா அபயம்!

ஆம். நாமெல்லாம் அந்த ப்ரப்ரஹ்ம ஸ்வரூபியை நினைந்து த்யானித்து சரணாகதி அடைகின்றோம் என்றால், நமக்கு அவர் அருள் கிட்டியிருப்பதாகவே அர்த்தம். எவரொருவர் அனுதினமும் குருவடி நினைந்து நமஸ்கரிக்கின்றனரோ அவருக்கு எவ்வித ஆபத்தும் நிகழாது. தலையோடு வந்தது தலைப்பாகையோடு போய்விடும் என்பது நம் சான்றோர் வாக்கு! ஸ்ரீகஅஞ்சி காமகோடி பீடத்தின் ஆகர்ஷண சக்தி அப்படியானது. இன்று வரையிலும் சம்பூர்ணமாக விளங்கும் நம் ஆசார்ய சிரேஷ்டர்களை நமஸ்கரித்து பெரியவா க்ருபையிலே ஆனந்தமாக வாழ்வோம். கருணாமூர்த்துகளல்லவோ நம் ஆசார்யர்கள். ஸ்ரீமஹாபெரியவா புஷ்பாஞ்சலி பூஜைக்கு வந்து கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டி பிரசாதங்களை நம் காஞ்சி காமகோடி பீடாசார்யர்கள் அனுஜ்ரஹித்துள்ளனர். அனைவரும் மஹோத்ஸவத்திலே கலந்து கொண்டு அதனை ஆகர்ஷிக்க வேணுமாய் ப்ரார்த்திக்கின்றேன்.