top of page
Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-035


என் ஆசான் மஹாபெரியவா

பிரதி புதன் கிழமை தோறும்

ஹிந்து கணேசன் மாமா

ரத்தமும் சதையிலுமான மனிதர்கள்

மஹாபெரியவா அற்புதங்களுக்கு கட்டு படலாம்

ஆனால் இரும்பாலான கார் மஹாபெரியவா

அற்புதங்களுக்கு கட்டுப்படுமா

நிச்சயம் கட்டுப்படும் என்கிறது

ஒரு உண்மை நிகழ்வு

இந்த காணொளியை காணுங்கள்

மாமா ஹிந்து பத்திரிகையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தததால் மஹாபெரியவா மாமாவை ஹிந்து கணேசன் என்று அழைப்பாராம். மேலும் மடத்தில் மூன்று கணேச மாமாக்கள் இருந்ததால் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் வைத்து அழைப்பாராம்.

மஹாபெரியவாளை மாமா முதல் முதலாக தரிசனம் செய்த பொழுது மாமாவிற்கு ஐந்து வயது. தரிசனம் செய்த ஆண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தி நான்கு (1934) .மாமாவிற்கு நாற்பது வயது இருக்கும் பொழுது ஒரு முறை மஹாபெரியவா ஹைதராபாத் வந்திருந்தாராம். வந்த வருடம் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி எட்டாம் ஆண்டு. அந்த சமயத்தில் மஹாபெரியவா மாமாவை பார்த்தாராம்.

உடனே மாமாவிடம் “உனக்கு என்னை தெரியறதா”. உன்னை ஐந்து வயதாக இருக்கறப்போ பார்த்திருக்கேன். என்ன ஒரு ஞாபக சக்தி. ஏறக்குறைய முப்பத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து தான் பார்த்த ஒருவரை ஞாபகம் வைத்துக்கொண்டு கேட்கிறார்..

நடுவில் எத்தனை மனிதர்கள் எத்தனை ஆண்டுகள். மஹாபெரியவா ஒரு அவதார புருஷராக இல்லாமல் வேறு யாரு. .நான் இந்த பதிவை எழுதும் பொழுது வியந்து போனேன்.

மதம் கடந்த மஹாபெரியவா:

இந்த சமயத்தில் ஹைதராபாத் நிசாம் வீட்டில் யாரோ ஒரு நெருங்கிய சொந்தக்காரர் இறந்து விட்டார். உடனே ஹைதெராபாத் நிசாம் ஒரு ஆணை பிறப்பித்தாராம். ஹைதராபாத் நகரத்தில் அடுத்தசில நாட்களுக்கு வாத்திய கருவிகள் யாரும் வாசிக்கக்கூடாது என்று. ஆனால் மஹாபெரியவா தங்கி இருந்த முகாமில் வாத்தியங்கள் வாசிக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. மற்ற மதத்தினரும் மதித்த ஒரு மஹான் மஹாபெரியவா.

பரத்துவம் சௌலப்பியத்துடன் கை கோர்க்குமா? (மேன்மையும் எளிமையும் )

ஒரு முறை ஹைதராபாத் முகாமில் இருந்து மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர் லலித் மனோகர் என்பர் வீட்டிற்கு சென்றார். அங்கு பூஜையெல்லாம் முடித்தவுடன் லலித் மனோகர் தன்னுடைய தந்தையுடன் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியில் செல்ல வேண்டியிருந்தது.

இந்த விஷயத்தை மஹாபெரியவாளிடம் எப்படி சொல்ல முடியும்.. மனோகர் மன நிலையை உணர்ந்த மஹாபெரியவா யாரும் சொல்லாமலே மனோஹரிடம் சொன்னாராம். கவலை படாமே நீ போய்ட்டு வா.. நான் உன் வீட்டை நான் காவல் காக்கிறேன்.என்றாராம்

என்ன ஒரு வாத்சல்யம் . பரேஸ்வரன் மஹாபெரியவா தன்னுடைய பக்தரின் வீட்டிற்கு காவலுக்கு இருக்க வேண்டுமென்றால் என்ன ஒரு ஆச்சரியம்.. ஆகாயம் மண்ணுக்கு வந்து பக்தரின் அற்ப தேவைகளை கூட பக்தரின் நிலைக்கு இறங்கி வந்து சேவகம் புரிவது என்றால் நான் என்னவென்று சொல்ல.. சொல்வதை செய்வதும் செய்வதை சொல்வதும் மஹாபெரியவாளுக்கே உரித்தான பண்புகளில் ஒன்று.

முதல் அற்புதம்:

மாமாவின் தம்பி குழந்தைக்கு இரண்டு வயது. இரண்டு வயது ஆகியும் குழந்தை பேசவில்லை.உடனே கணேசன் மாமா குழந்தையை எடுத்துக்கொண்டு மஹாபெரியவளிடம் சென்றார். மஹாபெரியவா குழந்தையை தன் கண்ணால் பார்த்துவிட்டு பின்வருமாறு சொன்னார்:

வேப்பங்கோட்டையை குழந்தையின் நாக்கில் தடவிட்டு பிறகு சிறிது தேனை தடவு. பேசிவிடுவான் என்றார். அதன் படியே செய்த பிறகு குழந்தையின் பேச்சை நிறுத்த முடியவில்லை. குழந்தை வளர்ந்த பிறகு அவன் அதிகமாக பேசினால் டாய் வேப்பங்கோட்டை நிறுத்துடா என்று சொல்கிறார்களாம்.

நினைத்துப்பாருங்கள் குழந்தையை ஒரு மருத்துவரிடம் கொண்டு சென்றிருந்தால் சில வருடங்களுக்கு பிறகு பேசியும் இருக்கலாம். இல்லை பேசாமலும் போயிருக்கலாம் . ஆனால் மஹாபெரியவா தன்னுடைய இறை அற்புதத்தால் அந்த வினாடியே பேச வைத்தார் என்றால் படைத்தார் அவரே என்பது புரியவில்லையா.

நான் இது வரை அதிசியத்த ஒரு உன்னதமான மஹாபெரியவா அற்புதம்.:

மனிதர்கள் மஹாபெரியவாளின் அற்புதங்களுக்கு கட்டுப்படுவார்கள். ஆனால் ஒரு இரும்பால் ஆன கார் மஹாபெரியவாளுக்கு கட்டுப்படுமா?. கட்டுப்படும் என்கிறது இந்த அற்புதம்.

ஒரு முறை கணேசன் மாமாவும் சாம்பமூர்த்தி சாஸ்திரிகளும் ஆந்திராவில் உள்ள நந்திகா மலைக்கு சென்றார்கள். அப்பொழுது மஹாபெரியவா மலையில் இருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தார். அந்த இடத்தில் காரை திருப்பக்கூட முடியாது. அதனால் காரை பின்னோக்கி செலுத்தினார்கள்.

சற்று தூரம் கார் பின்னோக்கி சென்றதும் மஹாபெரியவா தன்னுடைய கையை காரை நோக்கி தூக்கினர். அங்கு வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மாமாவை பார்த்து கத்தினார்கள்.இன்னும் சில இன்ச் தூரத்தில் பத்து அடிஆழத்தில் ஒரு பெரிய பள்ளம். விழுந்தால் மாமாவுக்கும் சாஸ்திரிகளுக்கும் பலத்த அடி பட்டிருக்கும் அல்லது உயிர் போயிருக்கும்.

மஹாபெரியவா கையை தூக்கிய உடனே கார் பிரேக் போட்டமாதிரி அதே இடத்தில மேலே நகராமல் நின்றது. கார் ஒரு இயந்திரம் தானே. ஒரு யந்திரம் மஹாபெரியவாளுக்கு கட்டுப்படுமா? கண் எதிரில் கட்டுப்பட்டு நிற்கிறதே. இரு உயிர்கள் காப்பாற்றிருக்கின்றனவே.. உங்களுக்கு புரியவில்லையா. இறைவனுக்கும் மேலொருவர் உண்டென்றால் அது நம் மஹாபெரியவாதானே.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு காணொளிகளையும் கண்டு மஹாபெரியவா தரிசனம் காணுங்கள்.

https://www.youtube.com/watch?v=ShcAG4qDPds Part-1

https://www.youtube.com/watch?v=TjMFgs2DDrs Part-2

மஹாபெரியவா அற்புதங்களை

படித்தால் புரிந்து கொள்ளலாம்

கேட்டால் ஓரளவு தெளிவு பெறலாம்

பார்த்தால் அனுபவிக்கலாம்

சில அற்புதங்கள் புரிதலையும் தாண்டி இருக்கும்

என்ன செய்ய முடியும் வணங்கலாம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page