Featured Posts

திருப்புகழ்- 2


மகா பெரியவா சரணம்.

அன்னை லோபாமுத்திரா சமேத

அகஸ்தியர் திருவடி சரணம்.

திருப்புகழ்- 2

அனைவர்க்கும் வணக்கம். திருப்புகழை உங்கள் அன்பு உள்ளத்துடன் பாராயணம் செய்ய வாருங்கள். இந்த வாரமும் கணபதியை துதி செய்வோம். .திருப்புகழ் முதல் பாடல் முத்தைத்தரு திரு அருணையில் குரு அருணகிரி பாடினார் முருக பெருமான் கருணை வயலூர் சந்நிதியில் கணபதி துதிவுடன்

திருப்புகழ் ஒளிர்ந்தது. நாமும் கணபதி பாதம் பணிந்து முருகன் என்ற ஆனந்த

ஜோதியில் இணைவோம் வாழ்வில் உயர்வோம்.

நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம்

திருப்புகழ் 2 பக்கரை விசித்ரமணி (விநாயகர்)

பாடல்

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை      பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய      பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும் திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு      சிற்றடியு முற்றியப ...... னிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு      செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்      எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண் டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள      ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம் மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு      விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்      வித்தகம ருப்புடைய ...... பெருமாளே

இந்தப்பாடல் கணபதி துதி, குரு நாதர் தொடங்கினார் பாடலை நம் பெருமான்

முருகனின் அழகுடன். ஏனென்றால் முருகப்பெருமானின் புகழை சொல்லி

அத்தனை பெருமை வாய்ந்த தெய்வத்தின் திருப்புகழ் பாட அருள் தாருங்கள்

என்று கணபதியை வேண்டினார்.

பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் ... 

பக்கரை என்றால் அங்கவடி, நாம் குதிரை மீது பயணம் செய்ய கால் வைக்க உதவும் இரும்பு வளையம். அந்த பக்கரை விசித்திரமான மணிகள் கொண்டது மற்றும் பொன்னால் செய்ய பெற்ற இருக்கை கொண்டு கம்பிரமான நடை கொண்டபறவையாகிய, மிடுக்குள்ள (மயிலாகிய) குதிரையையும்

நீபப் பக்குவ மலர்த் தொடையும்

கடம்ப மரத்தின் நன்கு பூத்த மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையையும்

அக்குவடு பட்டொழிய      பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்

அந்தக் கிரெளஞ்ச மலை அழிந்து ஒழியும்படி அதன் மேல் பட்டு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய திருக்கையில் உள்ள கூர்மையான வேலையும், (இது போன்று முருக பெருமானை துதி செய்து வேண்டுங்கள் வேல் வந்து காக்கும்)

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ...

திக்குகள் எட்டும் மதிக்கும்படி எழுந்துள்ள கொடியிலுள்ள சேவலையும், ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் ... காத்தளிக்கும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு தோள்களையும், செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே ...

வயலூரையும் பாட்டிலே வைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக என்று எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன்.

இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்

கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய்,

எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு எச்சில் 

எள், பொரி, அவல், துவரை, இள நீர், தேன்

பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம்

பயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம்,

இடிப் பல்வகை தனி மூலம் மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள்

 பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக் கொள்ளும்

ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி வெற்ப

ஒப்பற்ற, வினைகளை நீக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே, கருணை மலையே,

குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தகம

வளைந்த சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான அப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே,

மருப்பு உடைய பெருமாளே

ஒற்றைக் கொம்பு** உடைய பெருமாளே.

திருவண்ணாமலையில் 'முத்தைத்தரு' என்ற முதல் பாட்டைப் பாடிய பின்னர் அருணகிரிநாதரை வயலூர் என்ற 'செய்ப்பதி'க்கு முருகன் வரப்பணித்தார். அங்கு தமது மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும், சேவலையும், பன்னிரு தோள்களையும், திருவடிகளையும், வயலூரையும் வைத்துப் பாடல் பாடக் கூறினார். அந்த அபூர்வமான பாடல்தான் இது.

மேருமலையில் முன்னர் 'வியாசர்' விநாயகரிடம் தாம் பாரதத்தைச் சொல்லச் சொல்ல வேகமாக ஏட்டில் எழுதப் பணித்தார். எழுதுகோலாக தனது கொம்புகளின் ஒன்றை ஒடித்து விநாயகர் எழுதத் தொடங்கினார். எனவே அவருக்கு 'ஏகதந்தன்' (ஒற்றைக் கொம்பர்) என்ற பெயர் வந்தது.

உங்கள் தாசன் செந்தில் நாதன்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square