இன்றும் நீங்கள் எங்கள் குரு அரூபமாய்


இன்றும் நீங்கள் எங்கள் குரு அரூபமாய்
விண்ணில் இருந்தாய் அனுஷமாக
எங்களை காக்க மண்ணுக்கு வந்தாய்
மீண்டும் ஏன் விண்ணுக்கு சென்றாய்
விண்ணுக்கு நீ இல்லையென்றால்
ஆயிரம் அனுஷங்கள் இருக்கின்றன
எங்களுக்கு நீ ஒரு அனுஷம் தானே
நொடிப்பொழுதும் உணர்கிறோம்
நீ எங்களுடன்தானே இருக்கிறாய்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
பக்தர்களுடன் நானும்
காயத்ரி ராஜகோபால்