top of page
Featured Posts

தியாகலிங்கம் பதிவுகள்


”குஞ்சிதபாதத்தை தரிசிக்க விரும்பிய மஹா பெரியவா”

December 29, 2014 natarajan

குஞ்சித பாத பெரியவா

காஞ்சி பெரியவர் மகாபெரியவர் சித்தி அடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் உடல்நலம் இல்லாமல் இருந்தார். அப்போது ஒருநாள் மாலையில் தன்னுடைய சீடர்களை அழைத்து, “நான் சிதம்பரத்தில் இருக்கும் நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டும். நடராஜரின் பூஜையில் அணிவிக்கப்படும் குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும்” என்றார்.

குஞ்சிதபாதம் என்றால் என்ன?

சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைத்து தூக்கி திருநடனம் ஆடியதற்கு குஞ்சிதபாதம் என்று பெயர். இந்த தரிசனத்தை கண்டாலே தீராத வியாதியும் நீங்கும். பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு பொருளை ந்டராஜரின் தூக்கிய திருவடியில் அணிவிக்கப்படும்போது, அந்த மூலிகை வேர்களுக்கு குஞ்சிதபாதம் என்று அழைக்கப்படுகிறது

சிவபெருமானின் இடது பாகத்தில் சக்திதேவி இருக்கிறாள். அதனால்தான் எமதர்மராஜன், மார்கண்டயனை துரத்தி பாசக்கயிற்றை வீசியபோது மார்கண்டயன், சிவலிங்கத்தை கட்டிபிடித்து கொண்டான். அப்போது எமனின் பாசகயிறு சிவலிங்கத்தின் மேல்பட்டது. இதனால் கோபம் அடைந்து எமனை இடது காலால் எட்டி உதைத்தார் ஈசன்.. தாயும்-தந்தையுமான சிவ-சக்தியை மார்கண்டயன் சரண் அடைந்ததால் சிவபெருமான், சக்திதேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்தாலும் எமனை எட்டி உதைத்தார். அந்த இடது கால் சக்திதேவியின் அம்சம் என்கிறது புராணம்

.

அதனால் ஆடல்நாயகனை தரிசிக்கும்போது கண்டிப்பாக இடதுகாலை தரிசிக்க வேண்டும். அப்படி தரிசித்தால் செய்வினை பாதிப்பு, சனிஸ்வரால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள், வியாதிகள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்

மகாபெரியவர், குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும் என்று சொன்னார்.. இதை கேட்ட சீடர்கள், மகாபெரியவருக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், எப்படி பெரியவரை சிதம்பரத்திற்கு அழைத்து செல்வது? என்று சிந்தித்தார்கள்.

குஞ்சிதபாதத்தை தரிசித்தால் தமக்கு உடல்நலம் சரியாகும் என்று நினைத்து மகாபெரியவர் அப்படி சொல்லவில்லை. மோட்சம் கிட்ட வேண்டும் என்றுதான் மகான்கள் விரும்புவார்கள். அவர்களின் உண்மையான எண்ணத்தை புரிந்துக் கொண்ட இறைவன் அமைதியாக இருப்பாரா? உடனே தன் பிள்ளை விரும்புவதை நிறைவேற்றுவார் அல்லவா. ஆம், அப்படிதான் நடந்தது. மறுநாள் சூரியனை விட வேகமாக செயலில் இறங்கினான் இறைவன்

. மகாபெரியவரை தரிசிக்க சிதம்பரத்தில் இருந்து குஞ்சிதபாதத்துடன் காஞ்சிபுரம் சங்கரமடம் வந்தார்கள் சிதம்பர நடராஜப் பெருமானுக்கு சேவை செய்யும் சில தீட்சிதர்கள். “நாங்கள் பெரியவரை தரிசிக்க வந்தோம். பெரியவருக்காக பிரசாதம் கொண்டுவந்து இருக்கிறோம்.” என்ற கூறி பெரியவரை தரிசிக்க அனுமதி கேட்டார்கள் இதை கேட்ட மகாபெரியவரின் சீடர்களுக்கு வார்த்தையே வரவில்லை. “நேற்று இரவுதானே நம் மகாபெரியவர், நடராஜப்பெருமானின் குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும் என்றார்.

இன்று அதிகாலையிலேயே மகாபெரியவரை தேடி குஞ்சிதபாதத்துடன் தீட்சிதர்களை நடராஜப் பெருமான் அனுப்பி இருக்கிறாரே.” என்று மெய்சிலிர்த்து போனார்கள்.

மகாபெரியவரிடம் தீட்சிதர்கள், பிரசாத தட்டில் குஞ்சிதபாதத்தை வைத்துக்கொடுத்தார்கள். அதை தம் தலையில் வைத்துக்கொண்டார் மகாபெரியவர். மகான்கள் முக்தி கிடைக்கதான் ஆசைப்படுகிறார்கள். அவர்களின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றகிறார்.

நாம் சராசரி மனிதர்கள் அல்லவா. நல்ல உடல்நலத்திற்குதான் அதிக முக்கியதுவம் கொடுக்க வேண்டும். உடல்நலமாக இருந்தால் எல்லா பொருள் நலமும் தேடி வரும். சகலமும் நலமாக அமையும். ஆகவே நாமும் ஒருமுறையாவது சிதம்பர நடராஜப் பெருமானுக்கு மூலிகைகளால் தயாரிக்கபடும் குஞ்சிதபாத பிரசாதத்தை தரிசிப்போம். அத்துடன் நடராஜப்பெருமானின் இடதுகாலை வணங்கி சக்திதேவியின் ஆசியை பரிபூரணமாக பெற்று நலமோடும் வளமோடும் வாழ்வோம்

என்றும் அன்புடன் தியாகலிங்கம்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page