Featured Posts

திவ்ய தேச தரிசனம்-008 ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்


திவ்ய தேச தரிசனம்-008

ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்

ஆண்டளக்கும் ஐயன் தாயாருடன்

ஆதனூர் பெருமாள் கோவிலுக்கு ஆண்டளக்கும் ஐயன் கோவில் என்றபெயரும் உண்டு.கும்பகோணத்தில் இருந்து சுமார் எட்டு கிலோமிட்டர் தொலைவில் உள்ளது.

ஸ்தலவரலாறு : பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பெருமாளை தரிசிக்க பிருகு முனிவர் ஒரு முறை பாற்கடலுக்கு சென்றார். அப்பொழுது மஹாலக்ஷ்மி தாயார் பிருகு முனிவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். மாலையை பெற்றுக்கொண்ட பிறகு முனிவர் அந்த மாலையை இந்திரனுக்கு பரிசாக கொடுத்தார். மாலையை பெற்றுக்கொண்ட இந்திரன் அந்தமாலையயை தன்னுடைய ஐராவதம் என்ற யானையின் மேல் வைத்தான்.

ஆனால் யானை அந்த மாலையை தூக்கி வீசி எரிந்து விட்டது. கோபம் அடைந்த பிருகு முனிவர் இந்திரனுக்கு பூலோகத்தில் மானிடனாக பிறக்கக்கடவது என்று சாபம் இட்டார். உடனே இந்திரன் மஹாலக்ஷ்மியை நாடி சாபத்திற்கு விமோச்சனம் வேண்டினான். உடனே மஹாலக்ஷ்மி தாயார் கவலை வேண்டாம்..நான் அடுத்த பிறவியில் பிருகு முனிவரின் மகளாக பிறக்கப்போகிறேன். அப்பொழுது நான் பெருமாளை திருமணம் புரிந்து உனக்கு காட்சி கொடுக்கிறேன்,அப்பொழுது உன் சாபம் நீங்கும் என்றாள்.

ஆண்டளக்கும் ஐயனின் சயனக்கோலம்

ஸ்தல சிறப்பு: ஒரு முறை திருமங்கை அழவார் ஸ்ரீரங்கத்து கோவிலுக்கு மதில் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அவருக்கு பணத்தட்டுப்பாடு வந்தது. உடனே ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் பிரார்த்தனை செய்தார்.

பெருமாளும் கொள்ளிடக்கரையில் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூற அவ்வாறே திருமங்கை அழவரும் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு சென்றார். அங்கு வெகு நேரம் காத்திருந்த பிறகு ஒரு வியாபாரி தலைப்பாகை அணிந்துகொண்டு அங்கு காத்திருந்த திருமங்கை அழவரிடம் பெருமாள் உமக்கு உதவுமாறு என்னை அனுப்பினார். அந்த வியாபாரியிடம் ஒரு காலி மரக்காலும் ஒரு ஏடும் எழுத்தாணியும் இருந்தது.

ஆதனூர் கோவில் உள் பிரகாரம்

இப்பொழுது நீங்கள் கூலி கொடுக்க வேண்டியவர்களை இங்கு அழையுங்கள். அவர்களுக்கு நான் இந்தக் காலி மரக்காலால் மண்ணை அளந்து ஒரு மரக்கால் கொடுப்பேன். உண்மையாக உழைத்தவர்களுக்கு அந்த மணல் தங்கமாக மாரி விடும். உன்னை ஏமாற்றியவர்களுக்கு மணல் மணலாகவே இருக்கும்.என்று சொன்னார். எல்லோரும் ஒரு மரக்கால் மணலை வாங்கினார்கள்.

உண்மையாக உழைத்தவர்களுக்கு மணல் தங்கமாக மாறியது. உழைக்காதவர்களுக்கு மணலாகவே இருந்தது. மணலை பெற்றவர்கள் அனைவரும் வணிகரையும் திருமங்கை அழுவாரையும் அடிக்க துரத்திக்கொண்டு ஓடினர் . சிறிது தூரம் ஓடிய பிறகு வணிகர் அந்த ஓலையில் தான் பெருமாள். திருமங்கை அழவருக்கு உதவ வணிகர் கோலத்தில் வந்ததாக எழுதி கொடுத்தார்...

ஆதனூர் கோவில் முகப்பு தோற்றம்

இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் பெருமாள் சயன கோலத்தில் தலைக்கு மரக்காலையும் கையில் ஏடு எழுத்தாணியுடன் காட்சி கொடுக்கிறார். இலங்கைக்கு செல்லும் பொழுது ஆஞ்சநேயரும் ராமரும் இங்கு ஓய்வு எடுத்து சென்றதாக வரலாறு கூறுகிறது.

மூலவர் கோலம்: மூலவர் இங்கு சயனகோலத்தில் கையில் எழுத்தாணியும் ஏடும் வைத்து கொண்டு தலைக்கு மரக்காலும் வைத்து கொண்டு தரிசனம் கொடுப்பதால் உலகிற்கே படியளக்கும் பெருமாளாக ஆண்டளக்கும் ஐயன் என்று அழைக்கப்படுகிறார். பெருமாளுக்கு இரு புறமும் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் நாபி கமலத்தில் இருந்து பிரும்மா தோன்றுவதும் அற்புதமான ஐயனின் தரிசனம்.

இங்கு அரங்கனின் நாயகி பார்கவியாக எழுந்தருளி இருக்கிறார்.

ஆதனூர் பெயர் காரணம்: இங்கு காமதேனு மஹாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து தரிசனம் பெற்றதால் இந்த தலத்திற்கு ஆதனூர் என்று பெயர் வந்தது. காமதேனு "ஆ ". இத்துடன் ஊரும் இணைந்து ஆதனூர் என்ற பெயர் பெற்றது. மூன்று நிலை ராஜ கோபுரத்தை கொண்ட இந்த கோவிலில் காமதேனுவின் மகள் நந்தினிக்கும் காமதேனுவுக்கும் தனியே சிற்பங்கள் உள்ளன.

பரமபதத்தில் பெருமாளுக்கு முன்பாக இரண்டு தூண்கள் இருக்கும். மனித உடலில் இருந்து விடுபடும் ஆத்மா இந்த இரண்டு தூண்களை தழுவும் பொழுது மோக்ஷம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இதை குறிக்கும் வகையில் இந்த கோவிலிலும் அர்த்த மண்டபத்தில் இருக்கும் இரு தூண்கள் பெருமாளின் பாதத்திற்கு எதிரில் உள்ளன. இந்த கோவிலில் இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்த தூண்களை கட்டிக்கொண்டால் மோக்ஷம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஸ்தலத்திற்கு என்று தனியாக பாசுரம் இல்லை.பெரிய திருமடலில் திருமங்கை அழுவார் ஆண்டளக்கும் ஐயன் என்று ஒரு வரியில் பாடியிருக்கிறார்.

பிரார்த்தனை: இந்த திருத்தலத்தில் நீங்கள் மனமுருக வேண்டிக்கொண்டால் படியில் அளந்து போடும் தங்கம் போல உங்கள் வாழ்வு சிறக்கும். மேலும் இங்கு வந்து வழிபட்டால் உங்களுக்கு மோக்ஷம் நிச்சயம்.. இங்கு வந்து வழிபட்டால் உங்களுக்கு மனஅமைதியும் வாழ்க்கையில் பயம் அகன்று மகிழ்ச்சி கடலில் திளைக்கும் படி வாழ்க்கை அமையும்.

ஆண்டளக்கும் ஐயன்

உங்கள் பிரார்த்தனைகள் அணைத்தும் ஆண்டளக்கும் ஐயனால் நிறைவேறட்டும்.. பிறவிப்பிணியில் இருந்து விடு பட்டு உங்களுக்கு மோக்ஷம் கிட்டட்டும்.. நானும் மஹாபெரியவாளிடம் உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

ஹர ஹர சக்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square