அற்புத அனுபவம்

நானோ "பெரியவா சரணம்" என்றேன். அப்போது வண்டியினுள்ளிருந்து அமுதகானம்... "மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே....". அந்த கானத்துக்கு கட்டுண்டு போய் நின்றவனை என் மனைவி தட்டியதும் நிலையை உணர்ந்தேன். திட்டாமல் அந்த வண்டி டிரைவர் வண்டியை நகர்த்திச் சென்றார். நானோ... அப்படியே சிலையாய்... சில நொடிகளிலே கைபேசியில் முகனூலில் நுழைந்து... விரல்கள் சடசடவென.... முடிவிலே இந்த குரு. பதிவை பகிர்ந்துவிட்டு நானும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். பெரியவா தான் அம்பாள்... அம்பாள் தான் பெரியவா... ப்ரும்மஸ்ரீ கணேச சர்மாவின் குரல் எந்தன் காதினில் எதிரொளித்ததை இன்னமும் உணர்கின்றேன்.
சங்கரம் போற்றி! சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.
ஸ்ரீசரணரின் தரிசனம் ஒன்றை கர்ப்பகிரஹத்திலே சூட்டிய இந்த நொடியிலே இப்பகிர்வு நினைவுக்கு வர... மீள்பதிவு!
எல்லாம் அவர் செயலே! சங்கரா! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்