Featured Posts

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-18 உதய நிலா – கண்ணன்


மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-18

உதய நிலா – கண்ணன்

குழைந்தைகளே மறந்து விடாதீர்கள்

உங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்யும் பொழுது

தாய் தந்தை எண்ணம் இரு உயிர்கள் உங்களுக்காக கரைகின்றன

முதுமையில் அவர்கள் குழந்தையாக மாறும் பொழுது

அவர்களுக்கு தாய் தகப்பனாக நீங்கள் மாறுங்கள்

நீங்களும் முதுமையில் குழந்தையாக மாறுவீர்கள்

இதை ஒவ்வொரு நொடியும் நினைத்து வாழுங்கள்

மஹாபெரியவா உங்களக்கு வாழ்க்கையில் துணை இருப்பார்.

*******

பொதுவாகவே மக்களிடையே ஒரு அப்பிராயம் உண்டு. மஹாபெரியவா ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் அனுக்கிரஹம் செய்பவர். மற்றசமூத்தினருக்கு அனுக்கிரஹம் செய்ய மாட்டார். என்பது தான் அந்த அபிப்ராயம்..

பலமுறை நானும் இந்த அபிப்ராயங்கள் தவறு என்பதை நிரூபிக்க பல பக்தர்களது அனுபவங்களை "மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்" "மற்றும் பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா" என்னும் பதிவுகளில் அறுதியிட்டு உறுதியாக பிராமணர் அல்லாத சமூகத்தை சேர்ந்த பக்தர்களுக்கும் அனுகிரஹமும் ஆசிர்வாதமும் செய்வார் என்பதை பலரது அற்புத அனுபவங்கள் மூலம் எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

மஹாபெரியவா மடாதிபதியாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு குருவாக இருக்கலாம். ஆனால் இந்த ஜகத்திற்கே மஹாபெரியவா குரு.. இதை பல முறை மஹாபெரியவாளே கோடிட்டு காட்டியிருக்கிறார். இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்தது தான் இந்த உதய நிலா கண்ணன் தம்பதியினர் எதிர்கொண்ட மஹாபெரியவா அற்புதங்கள்..

வாழ்க்கையில் எல்லோருக்கும் இறைவன் எல்லாமே கொடுத்து விடுவதில்லை. ஏதாவது ஒரு குறையை வைத்து விடுகிறான். அந்தக்குறையின் நிவர்த்திக்கு இறைவனை நாடுகிறார்கள் பக்தர்கள். அந்த குறையின் நிவர்த்திக்காக இந்த உதய நிலா கண்ணன் தம்பதியினர் யாரோ ஒரு பக்தர் மஹாபெரியவா குருபூஜை அற்புதங்களை என் மூலமாக அவர்கள் செய்து மஹாபெரியவா அனுகிரஹமும் செய்ததால் நிவர்த்தி அடைந்தார்கள். அவர்கள் சொல்லக்கேட்டு என்னை அணுகினார்கள்..

மஹாபெரியவா குரு பூஜை பற்றி கேள்விப்பட்ட அவர்கள் தாங்களும் குரு பூஜை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். இவர்களின் குறையை உங்களுக்காக பட்டியலிடுகிறேன். மஹாபெரியவா இந்த தம்பதியினருக்கு குரு பூஜை மூலம் எப்படி அருள் பாலித்தார் என்பதை பார்ப்போம்.

இந்த தம்பதிகள் அவ்வளவாக படிக்காத தம்பதியினர்.பெரிய அலுவலகத்தில் வேலையும் இல்லை. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை.குழந்தைகள் இருவரும் சுமாரான ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பும் இரண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள்.

உதய நிலா வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தை நடத்துகிறாள். கணவர் கண்ணன் கார் ஓட்டுநராக வேலை பார்க்கிறார். அழகான ஒரு சிறிய குடும்பம். சிறிய வீட்டில் அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப வாழ்ந்து வருகிறார்கள்.

குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை வாய்க்கும் கைக்கும் சரியாக சென்று கொண்டிருக்கிறது. கணவர் சம்பாதிக்கும் வருமானத்தில் ஒரு பகுதி கணவர் மது அருந்துவதற்கே செலவாகி விடுகிறது. கணவர் கண்ணன் மது பழக்கத்திற்கு அடிமையானாலும் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவர். ஆனால் மது உள்ளே சென்றால் இவர் தன்னயே மறந்து விடுவார்.

குழந்தைகள் படிப்பு குடும்ப பாரம் கணவனின் மது அருந்தும் பழக்கம் நிரந்தர வேலை குழந்தைகள் வளர்ந்து கொண்டிருப்பதால் கொஞ்சம் பெரிய வீடு இவைகளை சரிக்கட்ட கூடுதல் வருமானம் என்ற பிரார்தனைகளின் பட்டியல் நீண்டுகொண்டே இருந்தது.. இந்த நிலையில் உதய நிலாவின் பிரார்த்தனைகள் பின் வருமாறு.

  1. கணவருக்கு குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை வேண்டும்

  2. குடும்ப வருமானம் அதிகரிக்க வேண்டும்.

  3. குழந்தைகள் நன்றாகப்படிக்க வேண்டும்.

  4. குடியிருக்க சற்று பெரிய வீடு வேண்டும்.

இவைகள்தான் உதய நிலாவின் பிரார்த்தனைகள்.நானும் மறு நாள் காலையில் என்னுடைய பிரார்த்தனை நேரத்தில் மஹாபெரியவாளிடம் உதய நிலாவின் குடும்பத்திற்காக வேண்டிக்கொண்டேன்.

raமஹாபெரியவாளும் நான் அவர்களுக்காக செய்த பிராத்தனைக்கு பதில் கொடுத்தார், "அவாளை ஒன்பது வார குரு பூஜை பண்ணச்சொல்லு. எல்லாம் சரியாயிடும் என்றார். இனி உதய நிலாவின் ஒவ்வொரு வாரமும் பிரார்த்தனைகளை எப்படி மஹாபெரியவா நிறைவேற்றினார் என்பதை பார்ப்போம்.

முதல் பிரார்த்தனை :

கணவர் கண்ணன் மது அருந்தும் பழக்கத்தில் இருந்து விடுதலை.

நன் என்னுடைய பிரும்ம முகூர்த்த நேரத்தில் உதய நிலா குடும்பத்திற்காக பின்வருமாறு வேண்டிக்கொண்டேன்.

"பெரியவா உதய நிலா ஒரு ஏழை குடும்பத்துப்பெண். அவள் ப்ராமணப்பெண் இல்லை. ஆனால் உங்களை பொருத்தவரை அவள் ஒரு ஆத்மா.உங்களுக்கு ஜாதி மதம் எதுவம் கிடையாதே. நீங்கள் தான் மதம் கடந்த மஹான் ஆயிற்றே என்றேன். அவளுக்கு ஒரு வழியை காட்டுங்கள் பெரியவா. என்று வேண்டிக்கொண்டு மேலே சொன்ன பிரார்த்தனைகளை சமர்பித்தேன்.

மஹாபெரியவாளும் அவளை ஒன்பது வார குரு பூஜை பண்ணச்சொல்லு. எல்லாம் சரியாய் போயிடும் என்றார்.

நானும் மறு நாள் அவளுடைய தெரிந்தவர்மூலமாக மஹாபெரியவா படமும் குரு பூஜை விவரங்களையும் சொல்லி அனுப்பினேன். அந்த வாரத்தில் இருந்து உதய நிலா மஹாபெரியவா குரு பூஜையை தொடங்கினாள்.

முதல் வார பூஜை :

முதல் வாரத்தில் அதி காலையிலேயே எழுந்து பிரும்ம முஹுர்த்தத்தில் பூஜையை துவங்கினாள் நிலா.. அவளுடைய மன நிலையில் நம்பிக்கை குடி புகுந்தது. வீட்டின் சூழ்நிலை மாறத்தொடங்கியது. நேற்று வரை சினிமா பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்த வீட்டில் பூஜை நாளில் இருந்து காலையில் ஹர ஹர சங்கர ஏன்னு கோஷம் ஒலிக்க ஆரம்பித்தது. சங்கர கோஷம் அவளுடைய கணவர் பூஜையில் கலந்த கொள்ளா விட்டாலும் அவருடைய காதுகளில் புகுந்து அவருடைய மனதில் ஓர் மாற்றத்தை கொண்டுவந்தது.

இரண்டாவது வாரா பூஜை:

இரண்டாவது பூஜை நாளன்று நிலாவின் கணவரும் பூஜையில் கலந்த கொண்டார். நிலாவிற்கு கணவர் பூஜையில் கலந்து கொள்ளும் விஷயம் தெரியாது. மஹாபெரியவா விளக்கேற்றி சர்க்கரை பொங்கல் எடுத்த வர சமையல் அறையில் நுழைந்தாள். பொங்கலுடன் பூஜை அறைக்கு வந்த நிலாவிற்கு தன கண்களை நம்ப முடியவில்லை. தன்னுடைய கணவர் நெற்றி நிறைய விபூதியை இட்டுக்கொண்டு பூஜையில் பங்கேற்க நிற்கிறார். நிலவின் கண்களில் கண்ணீர். சந்தோஷத்தின் காரணமாக கண்ணீர் வந்தாலும் அந்தக்கண்ணீர் மஹாபெரியவாளுக்கு சமர்ப்பிக்க வந்த நிலாவின் ஆத்மநன்றி.

மூன்றாவது வாரம்:

இந்த வார பூஜையிலும் கணவர் கண்ணன் கலந்த கொண்டார். நிலாவிற்கு முன்பே எழுந்து கொண்டை கடலை மாலை தயார் செய்து விட்டார். நிலாவிற்கு சந்தோஷம் தங்க முடியவில்லை. இத்தனை நாளும் வீட்டில் சண்டையும் சச்சரவும் இருந்தது. எப்படி ஒரே வாரத்தில் நிலைமை இப்படி தலைகீழாக மாறும்.

இந்த வார பூஜை நன்றாகவே முடிந்தது. உதய நிலா பூஜையை முடித்த விட்டு கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தனியே அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தாள். அப்பொழுது நிலாவிற்கு ஒரு சந்தேகம் எழுந்தது. பல வருடங்களாக குடித்துக்கொண்டிருந்த கணவருக்கு பார்க்காத வைத்தியம் இல்லை. பொழுது சாய்ந்தால் தன்னுடைய நண்பர்களுடன் மது பாட்டிலை திறந்து வைத்துக்கொண்டு பொழுதை கழிப்பார்.