ஸ்ரீகுருதுதி

பெரியவா சரணம்
2018 ஜனவரி 13-ம் தேதி சென்னை சேத்துப்பட்டு மேயர் ராமனாதன் தெருவிலே அமைந்துள்ள ஸ்ரீசங்கராலயத்திலே உலகலாவிய பக்தர்களாலே பக்தியுடனாக நடத்தப்பெற்ற புஷ்பாஞ்சலி பூஜையின் நாயகனாம் ஸ்ரீமஹாபெரியவாளின் இந்த தரிசனத்தைக் காண்கையிலே
பூரணமே! பூமணமே! புஷ்பாங்க நாயகனே! பூதலத்தைக் காக்கவந்த புண்ணியனே எம்பெரும!
என த்யானித்து மனதார லோகஜீவர்கள் அனைவருக்குமாக ப்ரார்த்திக்கத் துவங்கிய மென்மனத்தே உருகிவழிந்த ஸ்ரீகுருதியினைப் பகிர முற்படுகிறேன்!
சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். #ஸ்ரீகுருதுதி நாராயண நாமந்தனை நாவுனால் உச்சரித்து நானிலம் காக்கவந்த நால்வேத நாயகனே! நாரணனே! நல்நரனே! நாதமுனித் தூயழகே! நாட்டமுடன் வாசல்தேடி நாதியுனைச் சரண்புகுந்தோம்! நாதியென நின்சரணம் நாசமின்றி வாழ்வுகாக்க நத்திதினம் நின்னுருவை நாங்களுந்தான் போற்றுவமே! நான்மறைக்கு அதிபதியாம் நால்வர்புகழ் பேரிறையாம் நாகமாலை பிறைநீற்று நாயகனின் அவதாரீ! நாவார நின்நாமம் நாளுமினி யாம்சொல்லி நாநலமும் பேணியுங்கு நயம்பயக்க வாழ்வருளே!
ஆலமுண்டானின் அவதாரீ மட்டுமா நம் மஹாபெரியவா...! அவனிலே சரிபாதியான அம்பிகையின் ஸ்வருபமுமல்லவா அவர்! அந்த அம்மையப்பபை எண்ணி உருகாதார் யாருளர்? அவருடைய க்ருபாகடாக்ஷத்திலே எல்லோரும் நலமுற வாழ மனதார பிரார்த்திப்போம்!
பெரியவா சரணம் பெரியவா சரணம் ஸ்ரீமஹாபெரியவா அபயம். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்